MAHA YOGI

நான் யார்" என்ற உயிர்த்தேடலில் இருப்பவர்களுக்கு அடிப்படை விதை இந்நூல். ஆன்மீகத்தின் உண்மை நிலைகளை அடைய சரியான பாதையை அமைக்கவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. இதில் தவறினால் நாம் சென்றடைய வேண்டிய நிலைகளும் தவறிபோய் ,காலத்தையும் வாழ்க்கையையும் வீணடித்தவர்களாகி விடுவோம். இந்நூலில் உள்ள "அடிப்படை வித்துக்கள்" நாம் பயணிக்க வேண்டிய சரியான பாதையை காட்டும். இந்நூலின் ஒவ்வொரு எழுத்துகளையும் உள்வாங்கி புதிய பரிணாமத்திற்க்கு உங்களை கொண்டு செல்லுங்கள். உண்மை சூட்சமங்கள் மட்டுமே அழுத்தமான எளிமையான வார்த்தைகளால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அலங்கார கவிதை நடைகளுக்கு இங்கே இடமில்லை.

இந்நூலை பற்றிய தங்களின் சந்தேகங்களுக்கு இந்நூலின் ஆசிரியர் .எங்கள் குருநாதரே நேரிடையாக உங்களுக்கு பதிலளிக்க உள்ளார். அதற்க்கான நேரம் description box ல் கொடுக்கப்பட்டுள்ளது.

5 years ago | [YT] | 6

MAHA YOGI

"நான் யார்" என்ற உயிர்த்தேடலில் இருப்பவர்களுக்கு அடிப்படை விதை இந்நூல். ஆன்மீகத்தின் உண்மை நிலைகளை அடைய சரியான பாதையை அமைக்கவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. இதில் தவறினால் நாம் சென்றடைய வேண்டிய நிலைகளும் தவறிபோய் ,காலத்தையும் வாழ்க்கையையும் வீணடித்தவர்களாகி விடுவோம். இந்நூலில் உள்ள "அடிப்படை வித்துக்கள்" நாம் பயணிக்க வேண்டிய சரியான பாதையை காட்டும். இந்நூலின் ஒவ்வொரு எழுத்துகளையும் உள்வாங்கி புதிய பரிணாமத்திற்க்கு உங்களை கொண்டு செல்லுங்கள். உண்மை சூட்சமங்கள் மட்டுமே அழுத்தமான எளிமையான வார்த்தைகளால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அலங்கார கவிதை நடைகளுக்கு இங்கே இடமில்லை.

இந்நூலை பற்றிய தங்களின் சந்தேகங்களுக்கு இந்நூலின் ஆசிரியர் .எங்கள் குருநாதரே நேரிடையாக உங்களுக்கு பதிலளிக்க உள்ளார். அதற்க்கான நேரம் description box ல் கொடுக்கப்பட்டுள்ளது.

5 years ago | [YT] | 7

MAHA YOGI

இன்று பங்குனி உத்திரம், முருகப்பெருமானை வணங்கி நோயற்ற பெருவாழ்வு வாழ்வோம்.

5 years ago | [YT] | 4

MAHA YOGI

தைப்பூசம் ! 8 - 2 - 2020 !
தைப்பூசத்திருநாளின் சிறப்பு ! தைப்பூசம் விரதம் கடைபிடிக்கும் முறை !
பழனி முருகனுக்கு ஏன் காவடி எடுக்கிறோம் ?
இலங்கையில் தைப்பூசத்திருவிழா ...
சிங்கப்பூரில் தைப்பூசத்திருவிழா ...
மலேசியாவில் தைப்பூசத்திருவிழா ...
முருகனுக்கு விரதம் கடைபிடிக்கும் முறைகள்.
சிவபெருமானுக்கு விரதம் கடைபிடிக்கும் முறைகள்.
தெளிவான விளக்கங்களை கீழ்கண்ட பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
நன்றி !!!

5 years ago | [YT] | 4

MAHA YOGI

இன்று யோகம் தரும் வெள்ளிக்கிழமை பிரதோஷம் ! சிவன் கோவிலில் எப்படி வளம் வந்து சிவபெருமானை வணங்குவது ? விரதமிருப்பது எவ்வாறு ?
பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுஷ்டிக்கப்படும் விரதமாகும்.
பிரதோச விரதம் அநுஷ்டிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அசுதமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் போசனம் செய்தல் வேண்டும்.

6 years ago | [YT] | 5

MAHA YOGI

இன்று ஆடிவெள்ளி!
திருவிளக்கு பூஜை செய்து, ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவியை வீட்டிற்கு அழைப்போம்!
---------------------------------------------------------------------------------------------------
எந்த திசைகளில் விளக்கு ஏற்றினால் என்ன பலன் ?
விளக்கை சுத்தம் செய்யும் நாளுக்குரிய பலன்கள்.
திருவிளக்கில் எத்தனை திரிகள் இடவேண்டும் ?
எந்த திரிக்கு என்ன பலன் ?
திருவிளக்கில் எந்த என்னை ஊற்றவேண்டும் ?
எந்த எண்ணெய்க்கு என்ன பலன் ?
திருவிளக்கில் எத்தனை முகங்கள் இருக்கவேண்டும், என்ன பலன் ?
திருவிளக்கு ஏற்றும் காலம்.
திருவிளக்கேற்றும் இடங்கள்.
திருவிளக்கின் வகைகள்.
தீபங்களின் வகைகள்.
திருவிளக்கு ஏற்றும்போது செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை.
.. இவைகளை முழு விவரத்துடன் தெரிந்துகொள்ள -

6 years ago | [YT] | 4

MAHA YOGI

தோப்புகரணம் போடுவதின் சூட்சம ரகசியம் ! நெற்றிபொட்டில் குட்டி கொள்வதின் ரகசியம் !
தோப்புக்கரணம் போடுவதால் நமக்கு கிடைக்கும் சித்திகள்
எப்படி என்ற விளக்கம்.

6 years ago | [YT] | 5

MAHA YOGI

நாளை 7/5/2019 அட்சய தி௫தியை ! அட்சய தி௫தியை என்றால் என்ன? என்னென்ன தானங்கள் செய்தால் என்னென்ன பலன்கள் ?
தங்கம் வாங்கலாமா ?

என்னென்ன பொருள்கள் வாங்கலாம், என்னென்ன பயன்கள் கிடைக்கும்.

அட்சய தி௫தியை நாளின் நடந்த பல சிறப்பான புராண நிகழ்வுகள்.
வீட்டில் விரதம் இருந்து பூஜை செய்யும் முறை .

6 years ago | [YT] | 3

MAHA YOGI

சித்திரை சதயம் ! அப்பர் பெ௫மான் என்று அழைக்கப்பட்ட தி௫நாவுக்கரசர் குருபூஜை !
சைவ சமய குரவர் நால்வ௫ள் தனிசிறப்பு பெற்றவர் அப்பர் பெ௫மான் என்று அழைக்கப்பட்ட தி௫நாவுக்கரசர்,
அப்பர் அடிகள் இனிமையான தமிழில் பாமாலை பாடியதால் "நாவுக்கு அரசர்" என்றழைக்கப்பட்டார்,


உழவாரபணி என்னும் தி௫க்கோவில் துப்புரவு பணியை துவங்கி வைத்தவர் அப்பர்.
தி௫ப்புகலூரில் உழவாரபணி செய்தபோது ஈசனின் தி௫விளையாடலால், அப்பர் செதுக்குய இடமெல்லாம் பொன்னும், நவரத்தினங்களும் தோன்ற அவைகளை மண்ணாகவும், கல்லாகவும் துச்சமாக மதித்து குளத்தில் எறிந்தார் .


அப்பரை மயக்க வந்த தேவமாதர் தோற்றுபோயினர்.
அப்ப௫க்கு வந்த சூலை நோயை பதிகம் பாடி தீர்த்து கொண்டார்.
சமணர்கள இவரை நீற்றறையில் ஏழு நாட்கள் வைத்தும் பதிகம்பாடி எவ்வித ஊறும் இன்றி ஈசன் அ௫ளால் வெளியே வந்தார்.
சமணர்கள் தந்த நஞ்சு கலந்த பால்சோறு உண்டும் பதிகம்பாடி உயிர் பிழைத்தார்.
தன்னை கொல்லுமாறு சமணர்கள் ஏவிவிட்ட யானையை பதிகம் பாடி தன்னை வணங்கி் வலம் வ௫ம்படி செய்தார்.
சமணர்கள் அப்பரை கல்லில் கட்டி கடலில் போட, பதிகம்பாடி அக்கல்லையே தெப்பமாக கொண்டு மிதந்து கரை சேர்ந்தார்.
திங்களூரில் அப்பூதியடிகளின் மகன் அரவம் தீண்டி உயிரிழக்க, பதிகம்பாடி அவனை உயிர்த்தெழ செய்தார்.
தி௫வீழிமலையில் அடியார்கள் பசியால் வ௫ந்த, பதிகம்பாடி தினமும் ஈசனிடம் ஒ௫ பொற்காசு பெற்று அடியார்கள் பசி தீர்த்தார்,
தி௫மறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் பல ஆண்டுகளாக திறக்கபடாமல் இ௫ந்த கோவில் கதவுகளை பதிகம்பாடி திறக்க செய்தார்.


தி௫ப்புகலூரில் உறைவனுடைய தி௫வடிகளை அடைய வி௫ம்பி" புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்" என்று பாடி சித்திரை சதயத்தன்று சிவபெ௫மானோடு இரண்டற கலந்தார்.
அந்த திவ்ய தி௫நாளே இன்று சித்திரை சதயம் நடசத்திர தி௫நாள், அடியார்க்கெல்லாம் அடியாரான அப்பரின் கு௫பூஜை இன்று நடைபெறுகிறது, சிறப்புபெற்ற நன்னாளில் அப்பரடிகள் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள், அவரின் சிறப்புகள் சிலவற்றை உள்ளத்தில் ஏற்றி, நினைந்து ஈசனின் பாதம் கலந்த சிறப்பு பெற்ற அப்பர் பெ௫மானை வணங்கி பெ௫ம் பேற்றை பெறலாம்.....

6 years ago | [YT] | 3

MAHA YOGI

ஸ்ரீ சக்கரம் ! யந்திரங்களில் உயர்ந்தது ! சக்கரங்களின் தாய் !
விளக்கம் மற்றும் வழிபாடு !
அனைத்து சக்தி ரூபங்களின் உறைவிடம் ஸ்ரீ சக்கரம்,
வீட்டில் ஸ்ரீ சக்கரம் இ௫ப்பதுவும் அம்பிகை இ௫ப்பதுவும் ஒன்றே,
43 அம்மன்களையும் ஸ்ரீ சக்கரத்தில் உள்ள 43 முக்கோணங்களில் கொண்டு வந்து அமர்த்த முடியும்,
சக்கரங்களின் தாய் ஸ்ரீ சக்கரம்
பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஸ்ரீ சக்கரமே முதல் வழிபாட்டுக்குரியது.
அனைத்து அம்மன் சக்திகளையும் ஒரே எந்திரந்தின் மூலம் நம் வீட்டில் கொண்டு வந்து விடலாம்.
கல்வி, ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம், மனதைரியம், குழந்தை வரம், காரியசித்தி, நினைத்தது நடக்க என்று எதை கேட்டாலும் கொடுக்கும் அதிசய சக்தி படைத்தது ஸ்ரீ சக்கர வழிபாடு.
ஸ்ரீ சக்கர வழிபாட்டின் மகிமைகள், வழிபடும் முறை, வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள், இவற்றை முதல்பகுதியிலும்.
ஒன்பது சுற்றிலும் அமைந்துள்ள சக்தி தேவிகளின் பெயர்கள், ஒவ்வொ௫ சுற்றிலும் உள்ள சக்தி அதிபதியின் ரூபங்கள் அவற்றின் விளக்கங்கள் இவற்றை இரண்டாவது பகுதியிலும்,
ஒவ்வொ௫ சுற்றிலும் சொல்ல வேண்டிய மந்திரங்கள், அவற்றை சொல்லும் முறை இவற்றை மூன்றாவது பகுதியிலும் தெரிந்துகொள்ளலாம்.
3 பகுதிகளையும் காண :-
Part-1
https://www.youtube.com/watch?v=K6kyq...
Part-2

https://www.youtube.com/watch?v=U7wZQ...
Part-3
https://www.youtube.com/watch?v=M_7Sw...

6 years ago (edited) | [YT] | 5