அனைவரையும் ஆரோக்கியமான மனிதர்களாக உருவாக்க வேண்டும் . மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் , பணம் இல்ல மருத்துவத்தின் மூலம் , இயற்க்கை மருத்துவத்தின் மூலம் , நாட்டு மருத்துவத்தின் மூலம் , உணவே மருந்தின் மூலம் .
உலகம் முழுவதும் மருத்துவத்தை இலவசமாய் அறிவிக்கா விட்டால் , இந்த மருத்துவமே மனிதர்களை அழித்து விடும் , பணம் என்னும் போதையில் ..!!
- தவம்
Thavam Rs.0
🌾 மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால் நினைத்ததை முடிக்கலாம் 🌾
1 week ago | [YT] | 1,270
View 57 replies
Thavam Rs.0
⭕️ பண்ணைக் குட்டை வெட்டுவதின் முக்கியப் பயன்கள் பல உள்ளன.
⭕️ மழைநீர் சேமிப்பு: பண்ணைக் குட்டைகள் மழை நீரைச் சேமித்து வீணாகாமல் தடுக்கின்றன. இது வறட்சிக் காலங்களில் விவசாயப் பயிர்களுக்குப் பாசனம் செய்ய உதவுகிறது.
⭕️ நிலத்தடி நீர்மட்ட உயர்வு: சேமிக்கப்பட்ட நீர் நிலத்தினுள் கசிந்து, சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவுகிறது.
⭕️ மண் அரிப்பைத் தடுத்தல்: மழைநீர் நிலத்தின் மேற்பரப்பில் வேகமாக வழிந்தோடுவதைத் தடுத்து, மேல் மண் அரிப்பதைத் தடுக்கிறது.
⭕️ பயிர் விளைச்சலை அதிகரித்தல்: தேவையான சமயத்தில் நீர் கிடைப்பதால், பயிர்களின் மகசூலை அதிகரிக்க முடியும்.
⭕️ மீன் வளர்ப்பு: பண்ணைக் குட்டைகளில் மீன்களை வளர்த்து கூடுதல் வருமானம் ஈட்டலாம்.
⭕️ கால்நடைகளுக்கு நீர் ஆதாரம்: பண்ணையில் உள்ள கால்நடைகளுக்குத் தேவையான குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு இந்த நீரைப் பயன்படுத்தலாம்.
⭕️ சுற்றுச்சூழல் மேம்பாடு: குட்டைகளைச் சுற்றி மரங்கள் வளர்ப்பது மற்றும் நீர் தேங்குவது சுற்றுப்புறச் சூழலைக் குளிர்ச்சியாக வைத்து, பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு உதவுகிறது.
⭕️ வறட்சியை சமாளித்தல்: பருவமழையை மட்டுமே நம்பி இருக்கும் மானாவாரி விவசாயிகளுக்கு, பண்ணைக் குட்டை ஒரு வரப்பிரசாதமாக இருந்து, வறட்சிக் காலங்களில் பயிரைக் காப்பாற்ற உதவுகிறது.
⭕️ பயன்படுத்தப்பட்ட மண்: பண்ணைக் குட்டையைத் தோண்டும்போது கிடைக்கும் மண்ணை வரப்புகளைப் பலப்படுத்தவும், வயலின் சமதளத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம்.
🌿 அன்புடன் உங்கள் இயற்கையாளன் தவம்
1 week ago | [YT] | 770
View 20 replies
Thavam Rs.0
மலை தேன் . Call Me : 7708356445
1 week ago (edited) | [YT] | 505
View 17 replies
Thavam Rs.0
🍿 இப்படி ஆரோக்கியமான சிற்றுண்டிகளை எப்படி திரையரங்குக்குள் கொண்டு போனீர்கள் என்ற கேள்வி புரிகிறது தொடர்ந்து வாசியுங்கள் 🙏
🍿 அப்படி என்றால் திரையரங்குக்குள் விற்பனை செய்யும் அனைத்தும் ஆரோக்கியமற்ற சிற்றுண்டி கலா என்றால் ஆம். அதைத்தான் நாம் உள்ளே போய் இரு மடங்கு பணம் கொடுத்து வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
🍿 நீங்கள் கேட்பது புரிகிறது சரி விஷயத்துக்கு வருவோம் எப்படி உங்களை மட்டும் அனுமதித்தார்கள் என்று
🍿 இரண்டு முறைகளில் பேசலாம் ஒன்று பணிவு இன்னொன்று சட்டமுறை.
🍿 ஐயா உள்ளே இருப்பது ஆரோக்கியமற்ற சிற்றுண்டி எனவே நான் வெளியில் இருந்து கொண்டு வந்திருக்கிறேன் இதை தயவுசெய்து அனுமதியுங்கள் நான் உள்ளே இருக்கக்கூடிய சிற்றுண்டியை சாப்பிடுவதில்லை என்று பணிவாக கேட்கலாம் . ஆனால் நீங்கள் கொண்டு போகக் கூடியது ஆரோக்கியமானதாக வீட்டில் செய்ததாக இருக்க வேண்டும்.
🍿 திரையரங்கிற்குள் விற்பதையே நீங்கள் வெளியில் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் அனுமதிக்க மாட்டார்கள்.
🍿 பணிவாக கேட்டும் அனுமதிக்கவில்லை என்றால் சட்டப்படி நீங்கள் பேசலாம். எந்த சட்டத்திலும் உணவுப்பொருளை சிற்றுண்டிகளை திரையரங்குக்குள் கொண்டு போகக்கூடாது என்ற சட்டங்கள் இல்லை . அப்படி இருக்க நீங்கள் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் இருப்பது சட்டத்தை அவமதிப்பதற்கு சமம் என்று அவர்களிடம் வாதிட்டு . அவர்களை எழுத்துப்பூர்வமாக நீங்கள் கொடுங்கள் உள்ளே உணவு அனுமதி இல்லை என்று எழுதி கேட்டீர்கள் என்றால் அவர்கள் தர மறுப்பார்கள் ஏனென்றால் எழுதிக் கொடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது அவர்களுக்கு தெரியும்.
🍿 அதையும் தாண்டி அவர்கள் அனுமதிக்கவில்லை என்றால் வேறு வழியில்லை . உள்ளே போய் எதுவும் வாங்கி சாப்பிடாமல் இருந்துவிட்டு வெளியில் வந்து சாப்பிடுங்கள் அல்லது உள்ளே போவதற்கு முன்பே வெளியில் சாப்பிட்டு விட்டு உள்ளே போய் விடுங்கள்.
🍿 இது கொஞ்சம் கடினமான ஒன்றுதான் ஆனால் பெரியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடைப்பிடித்தால் கண்டிப்பாக ஒரு மாற்றங்கள் வரும்.
🍿 முயற்சித்துப் பாருங்கள் இது பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிருங்கள் அவர்களும் முயற்சித்து பார்க்கட்டும் 🙏
🌿 நன்றி அன்புடன் உங்கள் இயற்கையாளன் தவம்
1 month ago | [YT] | 621
View 21 replies
Thavam Rs.0
🍩 நோய்கள் எல்லாம் 🌧️ வானத்திலிருந்து வருபவை அல்ல 🍰 வாய் வழியாகத்தான் வருகிறது .
🌿இயற்கையாளன் தவம்
1 month ago | [YT] | 1,146
View 16 replies
Thavam Rs.0
🫒சொல்லுவது எனது கடமை 🫒மிதுக்கன்காய், பொதுவாக சிமிட்டிக்காய், சுக்காங்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு மூலிகை வகையைச் சேர்ந்தது. இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.🫒
மிதுக்கன்காயின் முக்கிய பயன்கள்:
🫒சளி, இருமல் மற்றும் காய்ச்சல்: இது சளி, இருமல், மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
🫒மூட்டு வலி: மூட்டு வலியை குறைக்க உதவுகிறது.
🫒மாதவிடாய் கால வலி: மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் வலியை குறைக்கிறது.
🫒உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்: உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
🫒நல்ல கொழுப்பு மற்றும் அமினோ அமிலங்கள் இதில் நல்ல கொழுப்பு மற்றும் அமினோ அமிலங்கள் அதிக அளவில் உள்ளன, அவை உடலுக்கு மிகவும் அவசியம்.
🫒மிதுக்கன்காய் மட்டுமல்ல, அதன் இலைகளும், வேர்களும் கூட மருத்துவ குணங்கள் கொண்டவை. இந்தக் காயை வற்றல் செய்து பயன்படுத்தலாம் அல்லது பழங்களை சாலட் உடன் சேர்த்து சாப்பிடலாம். காரக் குழம்பு வைத்தும் உண்ணலாம்.
இது சித்த மருத்துவத்தில் ஒரு முக்கியமான மூலிகை பொருளாக கருதப்படுகிறது.
🫒உங்கள் வீட்டைச் சுற்றி இந்தச் செடி தானாக வளர்ந்தால், அதை வளர்த்துப் பலன் பெறுவது நல்லது.
1 month ago | [YT] | 999
View 42 replies
Thavam Rs.0
💦 தண்ணீரை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்து விடுங்கள் . முடியுமா ❓
💦 ஏன் முடியாது வெறும் தண்ணீர் தானே ஒரு காலத்தில் விலையில்லாமல் இருந்தது ❓
💦 ஒரு இயற்கையாளனாக பதில் சொல்கிறேன் இதை செய்து விட்டால் உலகில் எல்லா நிலங்களிலும் நீர் நன்னீராக மாறிவிடும். ஏரி குளம் குட்டை இவை அனைத்தும் குடிநீராக மாறிவிடும்.
💦 அப்படி என்றால் இப்போது இவையெல்லாம் யாராலோ செயற்கையாக குடிக்க முடியாத தண்ணியாக மாறிக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி உங்களுக்கு வரலாம் அது உண்மைதான்.
💦 தண்ணீரால் மனிதர்களுக்கு எண்ணற்ற வியாதிகள் வருகிறது தண்ணீரில் மிகப் பெரிய சந்தையும் நோயை உண்டாக்கும் திட்டங்களும் நடந்து கொண்டிருக்கிறது.
💦 மனிதர்களிடம் எவ்வளவு வரி வேண்டும் என்றாலும் வசூலித்துக் கொள்ளுங்கள் ஆனால் தண்ணீரை விற்பது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்து விடுங்கள் ஏன் இதை நம்மை ஆளும் யாரும் செய்வதில்லை அப்படி என்றால் உலகத்தை ஆண்டு கொண்டிருப்பவர்கள் மனிதர்களா ❓என்ற ஒரு கேள்வி எனக்குள் இப்போதும் எழுகிறது ❓
மனிதனாக வாசித்துப் பாருங்கள் புரியும் தண்ணீர் அனைத்து உயிர்களுக்கும் ஆனது .
🍀இயற்கையாளன் தவம்
1 month ago | [YT] | 1,026
View 56 replies
Thavam Rs.0
🙏 ஐயா , மன்னிக்கவும் தாமதத்திற்கு மன்னிக்கவும் அனைவருக்கும் ஒரே நாளில் அனுப்ப முடியவில்லை தினம்தோறும் ஒரு 25 பேருக்கு அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறோம் காத்திருக்கவும் வரும் கண்டிப்பாக நன்றி . 🌿 இயற்கையாளன் தவம்
1 month ago | [YT] | 511
View 25 replies
Thavam Rs.0
🌾 இயற்கை முறையில் கையால் அறுவடை செய்த கலப்படமில்லாத கருப்பு கவுனி விதை நெல் வேண்டுமா ✅ 7708356445 WhatsApp only. 👉 www.eyarkaiyaalan.com/books
1 month ago | [YT] | 536
View 16 replies
Thavam Rs.0
😍 நமது காணொளிகள் 📸 மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை பார்க்கும்போது எண்ணில் அடங்காமல் மகிழ்ச்சி 🍀🍀🍀 நன்றி நன்றி இயற்கையாளன் தவம்
1 month ago | [YT] | 603
View 7 replies
Load more