மருதங்குடி A.மருதமணி

அறிவியல் முன்னேற்றம் இல்லாத அந்தக் காலத்தில் நாடகம் என்பது மக்கள் பொழுதுபோக்குக்கு சிறந்ததாக இருந்தது. இன்றைய திரைத்துறைக்கு முன்னோடியாக இருந்தது அன்றைய நாடகக் கலையே. இந்த நாடகக்கலையின் தந்தையாக போற்றப்படுபவர்தான் சங்கரதாஸ் சுவாமிகள். தமிழ் நாடகக் கலையை பொறுத்தவரையில் சுவாமிகள் காலத்துக்கு முன், சுவாமிகளின் காலத்துக்கு பின் என்று ஆராயும் அளவிற்கு சுவாமிகள்  நாடகக்கலைக்கு ஆற்றிய தொண்டு சிறப்பு