ச. லெட்சுமி நாராயணன்

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி! 🙏🏻🙏🏻
TN50 சோழ தேசம் திருவாரூர் 🔥💥
🌱 விவசாய பூமி 🌾
🌳 மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!💧
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..🤗

என் செயல் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் இறைவன் செயல்



ச. லெட்சுமி நாராயணன்

எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீ தியாகேசர் திருவருள் குருவருள் கருணையால் இந்த ஆண்டு மாசி மஹா சிவராத்திரி திருநாள் அன்று இரவு ஆரூர் பூங்கோயிலில் இறைவன் திருவருளை பெற ஏற்ற நெறி பக்தியா தொண்டா எனும் தலைப்பில் பட்டிமன்றத்தில் பேசியது

நன்றி ‪@thiyagarajaswamytiruvarur617‬
திருவாரூர் அருள்மிகு ஶ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் வலையொளி

5 months ago | [YT] | 2

ச. லெட்சுமி நாராயணன்

பிள்ளையார்பட்டி சிவஸ்ரீ அண்ணா இணையதளத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பற்றி சிறிது நேரம் சொற்பொழிவு நிகழ்த்தும் வாய்ப்பு திருவருள் குருவருள் கருணையினால் கிட்டியது

8 months ago | [YT] | 1

ச. லெட்சுமி நாராயணன்

அடியேன் இவ்வாண்டு சென்னை கம்பன் கழகத்தில் கம்பனின் மிகுந்த நிற்கும் மேன்மை சால் சிந்தனை எது எனும் தலைப்பில் உறவியல் எனும் பொருண்மையில் மாணவர் அரங்கில் இறைவன் ஸ்ரீ தியாகராஜா திருவருள் குருவருள் கொண்டு பேசிய காணொளி இதோ நன்றி : ‪@DDTamilOfficial‬

1 year ago | [YT] | 1

ச. லெட்சுமி நாராயணன்

என்செயலாவது ஒன்றும் இல்லை எல்லாம் என்னை இது செய்த பிரான் எம்பெருமான் ஸ்ரீ தியாகேசர் திருவருள் குருவருள் கருணை 🙏🙏🙏
நேற்று பன்முகப் பார்வையில் பெரியபுராணம் எனும் தலைப்பில் ‪@karaibharathitamilsangam7761‬ ( காரை பாரதி தமிழ் சங்கத்தின் இணைய வழி கூட்டத்தில் உரையாற்றிய போது)

2 years ago | [YT] | 2

ச. லெட்சுமி நாராயணன்

youtube.com/shorts/XZhSl_YvOE...

செங்கோல் சிறப்பு :

சிவ. ச. லெட்சுமி நாராயணன்
திருவாரூர்

1947 ம் ஆண்டு ஆகத்து 15 அன்று நம் நாடு சுதந்திரம் பெற்றது நாம் அறிந்ததே

ஆனால் எப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்று தெரியுமா?

விடுதலைப் பெறும் போது பாரம்பரிய அடையாளம் இருக்க வேண்டும் என்று எண்ணிய ஜவஹர்லால் நேரு அவர்கள் ராஜகோபாலாச்சாரியாரை அனுக அவர் திருவாவடுதுறை ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானங்களிடம் விடையத்தை
விவரித்தார்

புரிந்து கொண்டு சந்நிதானகள் உத்தரவு படி சென்னையில்
உம்மிடி பங்காரு செட்டியார் நகைக் கடையில் சைவ சின்னமாம் ரிஷப சின்னத்துடன் கூடிய செங்கோல் தயாரிக்கப்படுகிறது

சந்நிதானங்கள் உடல் நிலை சரியில்லாததால் தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஆதீன நாதஸ்வர வித்துவான் திரு. ராஜரத்தினம் பிள்ளை இருவரையும் செங்கோல் உடல் டெல்லி அனுப்புகிறார்கள்

குறித்த அந்த நேரத்தில் இரவு ( 11:30 மணிக்கு மேல் 14/08/1947)
லாட். மவுன்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து பெற்று புனித நீர் தெளித்து
திருஞானசம்பந்த பெருமான் அருளிய கோளறு திருப்பதிகம் ஒலிக்க அதில் "ஆன சொல்மாலை ஓதும் அடியார் வானில் அரசுசாள்வார் ஆனை நமதே" என்ற
வரிகள் மிகுந்து ஒலிக்க
குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் நேரு அவர்களிடம் செங்கோல் வழங்கியருளினார்கள்

{நம் தமிழ் மன்னர்கள் செங்கோல் வழுவாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்ற மரபு சங்க காலத்தில் முதற்கொண்டு இருந்து வருகிறது
அதாவது ஒரு மன்னன் நீதி நெறி தவறாது வலையாது

மாநிலங்கா வலனாவான்
    மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக் கிடையூறு
   தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால்
   கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்துந்தீர்த்
   தறங்காப்பா னல்லனோ

என்று தெய்வச்சேக்கிழார் பெரியபுராணத்தில் காட்டுவது போல்

அரசருக்கு செங்கோல் வழுவாத தன்மை வளியுருத்தப் படுகிறது இதுவே அன்றைய அவர்களுக்கு செங்கோல் வழங்க காரணமாக ஆயிற்று}

இந்நிலையில் மதிப்பிற்குரிய நம் பாரத பிரதமர் அவர்களின் சீர்மிகு ஆட்சியில் திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்

மக்களவை சபாநாயகர் இருக்கையில் அருகில் நிறுவப்பட உள்ளது

என்று செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்

"வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்."

எல்லாம் எம்பெருமான் ஸ்ரீ தியாகேசர் திருவருள் குருவருள் கருணை

#ஆரூரா_தியாகேசா_போற்றி_போற்றி

🙏🙏🙏🙏

‪@திருவாவடுதுறைஆதீனசமயச்சொற்பொழி‬ ‪@thiruvavaduthuraiadheenam4699‬ ‪@NarendraModi‬

2 years ago | [YT] | 6

ச. லெட்சுமி நாராயணன்

*பழமை மாறாத ஆழித்தேர் அதன் அழகை யாரால் தான் வர்ணிக்காமல் இருக்க முடியும்*

ஆழித்தேர் வித்தகனை யான் கண்டது ஆரூரே - அப்பரடிகள் திருவாக்கு ( 7ம் நூற்றாண்டு )

🌟🌟🌟
இந்த இடத்தில் தேருக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் திறமை இருக்கிறது காரணம் தேருக்கு வலது பக்கம் மேற்கு கோபுரம் இடது புறம் கமலாலய திருக்குளம் மற்றும் மாற்றுரைத்த வினாயகர் திருக்கோயில்
இதற்கு இடையில் ஆழித்தேரை கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான செயல் அன்று சிலசமயங்களில் தேரின் அலங்கார கூரைகளை வெட்டி விடுவார்கள்
முட்டுக்கட்டை போடுபவர்கள் திறன் வெளிப்படும் இடம் இதுவே சாமர்த்தியமாக ஆழித்தேரை கொண்டு செல்வது அவர்கள் கைகளில் உள்ளது


உயிரை கையில் பிடித்துக்கொண்டு என்னை தியாகேசர் விடமாட்டார் என்று
பணிசெய்யும் அவர்கள் நாம் என்று போற்றி வணங்குவதற்கு உரியவர்களே
🌟🌟🌟

2 years ago | [YT] | 6

ச. லெட்சுமி நாராயணன்

பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இன் நினைவகற்றாதீர்
அனைவருக்கும் இனிய குடியரசு திருநாள் வாழ்த்துக்கள் 🧡🤍💚

2 years ago | [YT] | 2

ச. லெட்சுமி நாராயணன்

1.நீடுசந்த் ரோதயம் போல்வதன மசைவருள்
நிறைகமல நயனமசைய
நின்றுநதி மதியசைய வொன்றுசடை முடியசைய
நிகழ்மந்த காசமசையத்

தோடலர் செவந்தியந் தோடசைய மார்பிற்
றொடுத்தசெங் குவளையத்
துங்கமழு மானசைய வங்கதஞ் சதகோடி
சூரியர்கள் போலசையாமல்

தேடுமர வக்கிண் கிணிப்பாத மசையவொரு
செம்பொன் மலை வல்லியசையச்
செய்யகும ரேசர்நடு நின்றசைய நவரத்ன
சிம்மா சனத்திருந்தே

யாடுமுன் னசபநட மடியெனென் றுங்காண
அருள்வாய் தியாகேசனே
யசைவில்கம லேசனே யசபா நடேசனே
ஆனந்த வுல்லாசனே.

2. தத்துவ சொரூபமுந் தத்துவா தீதமுந்
தத்வகர்த் தாவுமென்றுஞ்
சகளா களாதீத சந்தோஷ சல்லாப
சருவசூ னியவஸ்துவும்

நித்திய நிராமய நிராதங்க நிர்த்தொந்த
நிர்க்குண நிராதாரமும்
நிர்மல நிராபாச நிற்சங்க நிர்விகற்ப
நிஷ்ப்ரபஞ் சச்சோதியாய்ச்

சுத்தபூ ரணசச்சி தானந்த முஞ்சோம
சூரிய ரனந்தகோடி
துங்கவொளி கங்குலென மங்கவரு மோர்தற்
சொரூபப்ர காசமும்விடா

அத்துவித சித்தாந்த முத்திநீ யானதால்
ஆரறிவர் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசனே
ஆனந்த வுல்லாசனே.

3. வதனமுங் கருணைசடை மகுடமுங் கருணைசெவ்
வடிவமுங் கருணைகழுநீர்
மாலையும் கருணைசெவ் வந்தியுங் கருணையிள
மானுமழு வுங்கருணைமேல்

உதரமுங் கருணைகங் கணவரவ முங்கருணை
உழுவையத ளுங்கருணைபை
யுரககிண் கிணிதழுவு சரணமுங் கருணை அரு
குமையம்மை யூங்கருணைவேல்

மதலையுங் கருணைபல சிங்கஞ் சுமந்திடும்
மணிப்பீட முங்கருணைமேல்
வளரண்ட கோடிகளெ லாம்வாழ ஆரூரில்
வாழ்வதுங் கருணைபாசம்

அதிரநட மிடுசபை யுங்கருணை நின்கருணை
ஆரறிவர் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசனே
ஆனந்த வுல்லாசனே.

4. கருணைவா ரிதியேகு ணாதிசய மேபூர்ண
கற்பதரு வேஅனந்தங்
கலைமதிய மேஞான பாநுவே தேடாத
கண்ணின்வளர் கருவூலமே

திருவருட் செல்வமே யானந்த வாழ்வே
தெவிட்டாத தெள்ளமிர்தமே
செங்கரத லாமலக பலமே செங்கத்தையாள்
தேவர்கள் சிரோரத்னமே

ஒருபரப் பிரமமே யென்றுனைப் பாடினான்
உல்லாசமா யாடியே
யொண்பூர ணானந்த வின்பவமு தினைமேவ
வுனதுள மகிழ்ந்தருளுவாய்

அருணகண பணவுரக கிண்கிணிக் காலனே
யழகார் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசனே
ஆனந்த வுல்லாசனே.

5. மண்டலந் தன்னிலா ரூரென்னு மூண்டக
மலர்ந்தமூ லாதாரமும்
மண்டனந் தஞ்சந்த்ர சூரியர்கள் போல்வதனம்
வயங்கிடுங் கரியமேக

கண்டனா முன்றனையு மண்டகோ
டிகளீ ன்ற
கவுரியையு மென்னையாளுங்
கந்தசா மியையுமரு டருகழற் காலிலே
கட்டுமா டரவமென் னுங்

குண்டலியு மொன்றுகிண் கிணியென்று நாதமுங்
கொள்விசுவ மாதாரமாய்க்
கொண்டோடி மீளவும் ப்ராணனீ தென்னுமுன்
குலவுமச பாநடத்தை

அண்டத்தி லுள்ளபடி பிண்டத்தி னான்காண
அருள்வாய் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசனே
ஆனந்த வுல்லாசனே.

6. படியாட மேலண்ட பாதாள மாடஇப்
பார்தாங்கு பாந்தளாடப்
பானுமதி யாடமறை யாடவய னாடவிரு
பத்மலோ சனனாடவான்

முடிவிலா வமரர்களு முனிவர்களு மாடஅலை
மோதுமெழு கடலோசைபோல்
முழவுத் தளதாள சங்கநா தம்பெரிய
மூதண்ட முகடளப்பச்

செடிகுடிலை மாயையிரு திரைவளைத் தேமலஞ்
சிதையதிந் திமிதியென்றே
செங்கனக தண்டதனில் வீற்றிருந் தாடுமுன்
திருந்துமச பாநடத்தை

அடியேன் காணமுன் பென்னதவ மாற்றினேன்
அருள்வாய் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசனே
ஆனந்த வுல்லாசனே.

7. வம்பான தனுகரண புவனபோ கங்கடிய
வல்லிரு ளெனப்போகவும்
வளர்காம மாயையும் பஞ்சமல முங்கொடிய
வலியவினை விட்டோடவும்

கெம்பீர நாதநா தாந்தமுஞ் சத்தியுஞ்
கிளர்வியா பினிசமனையுங்
கிட்டவரு முன்மனை வியோமரூ பியுமன்பர்
கிட்டிடு மனந்தையமுதக்

கம்போ லனாதையு மனாசிருதை யுஞ்சந்த்ரர்
கதிரவன ரனந்தகோடி
கங்குலென வேங்கும்ப்ர காசித் தொலித்திடக்
கட்டு மரவக்கிண்கிணி

யம்போ ருகச்சரணை யடியனேன் முடியில்வைத்
தருள்வாய் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசனே
ஆனந்த வுல்லாசனே.

8. ஊனந் தவாமல மெனுங்கோடை தணியுவும்
உற்ற மாயேயமென்னும்
ஒழுகுபெய ரழியவும் மாயையெனும் மொழியாத
வுடலழுக் கொழியவுமுன

யீனந் தருந்திரோ தானமென் றிடவரு
மிளைப்பாற வுங்கன்மமா
மீடில்வட வாமுகச் சூடுபோ கவுமெனை
யிருந்தபடி யிப்படியிலே

தானந்த மடிநடுவு மில்லாமை பெருகியே
தன்கருணை யூற்றெடுத்துத்
தங்கிடும் பரையாதி யென்றிடுந் திரைவீசிச்
சார்ந்திடுஞ் சொருபசச்சி

தானந்த வெள்ளத் தழுத்திவிடு நின்னுடைய
காலினால் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசனே
ஆனந்த வுல்லாசனே.

9. பொல்லாத விருண்மனையை நில்லாத வாழ்வைவெகு
புழுமலங் கட்டுபொதியைப் புன்புலால் நாறிடும் புலைக்கலத் தைத்தினம்
புதுமைதரு பொய்ப்புரட்டை

நால்லோ ரெறிந்திடும் பாண்டத்தை நாய்நரிகள்
நாடிடும் பீழையுடலை
நானென்று மெனதென்று நானடு விராமனீ
நானா யிருக்கவைப்பாய்

கல்லாலி னீழலி லிருந்தகற் பகமே
கருணையங் கடலமுதமே
கரும்பினின் கட்டியே யொருவர்பூ ணாத
கவுத்துவ மகாரத்னமே

அல்லாரு மணிகண்ட வகளங்க துங்கத்ரி
யம்பகத் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசனே
ஆனந்த வுல்லாசனே.

10. பொன்னையும் மண்ணையும் பெண்ணையும் பொருளென்று
பொய்க்கடலி லேவிழுந்து
போம்வழிகள் காணாமல் மூன்தவத் தாலுனது
பொன்னடிப் பிணைபிடித்த

என்னையுங் கைதந் தொடுத்திரட் சிந்தனை
யின்னமு முரங்கியிங்கே
யேகாந்த மாகவே யின்பபூ ரணவீட்டி
லிறுமாந் திருக்கவைப்பாய்

தன்னிகரி லாதசிவ ஞானதே சிகனே
சிதம்பர சபாநாதனே
தண்கயிலை நாதனே சகலபுவ னேசனே
சரவணோற் பவன்சகத்துக்

கன்னையுட னவரத்ன சிங்கா தனத்திருந்
தருளுந் தியாகேசனே
அசைவில்கம லேசனே யசபா நடேசனே
ஆனந்த வுல்லாசனே.

-ஸ்ரீ அஜபா நடனப் பதிகம்

தருமையாதீனம் (‪@DharumapuramAdheenam‬ ) பத்தாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளியதுஅருளியது.

2 years ago | [YT] | 3