Graphic Designer & DTP operator
PLEASE LIKE SHARE COMMENT & SUBSCRIBE
# Graphics design # invitation டிசைன்
Hi friends 🤗
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து சப்போர்ட் பண்ணவும்..
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி🙏🏻
V bakiyalakshmi
90 வயதானாலும் இந்த IO நோய்கள் வராது........
இடுப்பு வலி, மூட்டு வலி ,வாயு, தைராய்டு, சர்க்கரை, உடல் சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல், கைகால் வலி, வயிற்று கோளாறு, இதற்கு இந்த கஷாயம்
சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, தலா | ஸ்பூன் வீதம் எடுத்து இரவே, ! டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, மூடி வைத்து, காலையில் வெறும் வயிற்றில் 5 நாளைக்கு குடித்து வந்தால் மேலே சொன்ன IO நோய்களும் ஆயுளுக்கும் அரவே ......
3 months ago | [YT] | 0
View 0 replies
V bakiyalakshmi
வெள்ளை குருமா செய்வது எப்படி..
தேவையான பொருட்கள்:
காய்கறி கலவை (பீன்ஸ், காரட், காலிப்ளவர், பட்டாணி, உருளை) - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 சின்னது
அரைக்க:
தேங்காய் - அரை மூடி
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1 அல்லது காரத்திற்கேற்ப
சோம்பு - 1/4 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 5
பூண்டு - 1 சின்ன பல்
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லி இழை - சிறிதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி சிறிது உப்பு போட்டு வதக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நல்லா நைசா அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் காய்கறி கலவையை போட்டு நல்லா ஒரு வதக்கு வதக்கி சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நல்லா கொதித்து வரும் சமயத்தில் அரைத்த விழுதை போட்டு கொதிக்க விடவும்.
காய்கறிகள் வெந்த பின் மல்லி இழை தூவி அடுப்பை அணைத்துவிடவும்💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚.ஓம்.. ஓம்.. ஓம்.. ஓம்.. ஓம்.. ஓம்..❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡....
3 months ago | [YT] | 1
View 0 replies
V bakiyalakshmi
சாம்பார் பொடி.....
தேவையான பொருட்கள்
20நிமிடங்கள்
1/2கப் மல்லி விதை
1ஸ்பூன் மிளகு
1ஸ்பூன் சீரக ம்
1/2ஸ்பூன் கடுகு
1/2ஸ்பூன் வெந்தயம்
2டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
2டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
2டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
15-20காஷ்மீரி மிளகாய்
1கப் கறிவேப்பிலை
1ஸ்பூன் உப்பு
1ஸ்பூன் மஞ்சள் தூள்
1ஸ்பூன் பெருங்காயத்தூள்
சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெறும் வாணலியில் மல்லி விதை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
பின்,மிளகு சேர்த்து வறுபட்டதும்,கடுகு சேர்த்து வறுக்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம் சேர்த்து வறுத்து,இவற்றையும் மல்லியுடன் சேர்க்கவும்.
பின்,துவரம் பருப்பு,கடலை பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு இவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
பின் காஷ்மீரி மிளகாய் சேர்த்து சூடாகி,புகை வரும்போது எடுத்து விடவும்.
பின்,நன்கு கழுவிய ஈரப்பதம் இல்லாத கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
வறுத்த அனைத்தையும் ஆறவிட்டு அதனுடன் மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.
உப்பு சேர்ப்பதால் சாம்பார் பொடி நீண்ட நாட்களுக்கு கேட்டு போகாமல் இருக்கும்.
அரைத்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து,சாம்பார் செய்யும் பொழுது 150கி பருப்புக்கு 2-3ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.
அவ்வளவுதான். மணமணக்கும் சாம்பார் பொடி ரெடி....
3 months ago | [YT] | 4
View 0 replies
V bakiyalakshmi
குழம்பு மிளகாய் தூள் செய்வது எப்படி ......
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி – 500 கிராம்
மிளகாய் வத்தல் – 500 கிராம்
சீரகம் – 250 கிராம்
சோம்பு – 50 கிராம்
மிளகு – 100 கிராம்
கடுகு – 25 கிராம்
வெந்தயம் – 25 கிராம்
அரிசி – 100 கிராம்
உளுந்து – 100 கிராம்
துவரம்பருப்பு – 200 கிராம்
கடலைப்பருப்பு – 200 கிராம்
பெருங்காயத்தூள் – 25 கிராம்
மஞ்சள்தூள் – 100 கிராம்
கறிவேப்பிலை – 50 கிராம்
எண்ணெய் – சிறிது
செய்முறை:
கொத்தமல்லியை சிறிது எண்ணெய் விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். மிளகாய் வத்தலை காம்பு கிள்ளி காயவைத்து எண்ணையின்றி லேசாக வறுத்துக் கொள்ளவும். சீரகம், சோம்பு, மிளகை ஒன்றாகச் சேர்த்து எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துக் கொள்ளவும். (லேசாக பொரிந்தபின் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்).
பின்பு கடுகையும், வெந்தயத்தையும் போட்டு அதே போல் எண்ணெய் விடாமல் வறுக்கவும். (வெந்தயமும், கடுகும் லேசாக பொரியும் வரை வறுத்தால் போதுமானது). அரிசியை எண்ணெய் விடாமல் லேசாக பொரியும் வரை வறுக்கவும். உளுந்தையும் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்துக் கொள்ளவும். துவரம்பருப்பையும், கடலைப்பருப்பையும் லேசாக எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். பெருங்காயத்தையும், கறிவேப்பிலையையும் ஒன்றாகச் சேர்த்து எண்ணெய் விடாமல் வறுக்கவும். (கறிவேப்பிலை மொறு மொறுவென ஒடிக்க வரும் அளவுக்கு வறுத்துக் கொள்ளவும்).
கடைசியாக மஞ்சள்தூளையும் எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துக் கொள்ளவும். இதுவரை வறுத்த எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் பரப்பி ஆற விடவும். ஆறியபின் மிஷினில் கொடுத்து திரித்து வாங்கவும். இந்த மசால் பொடியை ஆறவைத்து காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்திருந்து பயன்படுத்திக் கொள்ளவும். இது புளிக்குழம்பு, மீன் குழம்பு, மட்டன் குழம்பு, காரக் குழம்பு என எல்லாவற்றுக்கும் ஏற்ற குழம்பு மசால் பொடி. நல்ல வாசனையுடன், ருசியாக இருக்கும்....
#திண்டுக்கல்சமையல்
4 months ago | [YT] | 8
View 0 replies
V bakiyalakshmi
10- வகையான வெஜ் குருமா....
1- காய்கறி குருமா..
தேவையான பொருட்கள்:
காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி, சன்னா) - 2 கப்
பெரிய அளவு வெங்காயம் - 1
பெரிய அளவு தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
அரைக்க 1:
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 சிறு துண்டு
பூண்டு - 3 பல்
சோம்பு - 1/4 தேக்கரண்டி
அரைக்க 2:
தேங்காய் துருவல் - 1/2 கப்
முந்திரி - 5
பொரிகடலை - 1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
செய்முறை:
காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து வைக்கவும்.
அரைக்க 1’ல் இருப்பவற்றை தனியாகவும், 2’ல் இருப்பவற்றை தனியாகவும் நைசாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த கலவை சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் வேக வைத்த காய்கறி கலவை மற்றும் தேங்காய் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு எடுத்து பரிமாறவும்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
2- வெள்ளை குருமா...
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 5
கேரட் - 1 பெரிது
உருளை - 1 பெரி்து
பச்சை பட்டாணி - ஒரு கை அளவு
வெங்காயம் - 1 பெரிது
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
மல்லி - 1 மேசைக்கரண்டி
புதினா - 1 மேசைக்கரண்டி
பட்டை - 1 துண்டு
லவங்கம் - 3
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
தேங்காய் துருவல் - 1/4 கப்
முந்திரி - 10
பால் - 1/2 கப்
கசகசா - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கசகசா மற்றும் முந்திரியை வெது வெதுப்பான 1/4 கப் பாலில் ஊற விடவும். ஊறியதும் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
இஞ்சி பூண்டு தோல் நீக்கி பச்சை மிளகாய் 3 சேர்த்து அரைக்கவும்.
வெங்காயம் நீளவாட்டில் நறுக்கி வைக்கவும்.
பச்சை மிளகாய் மீதம் உள்ளதையும் நறுக்கி வைக்கவும்.
புதினா கொத்தமல்லி பொடியாக நறுக்கவும்.
உருளை, பீன்ஸ், கேரட் நறுக்கி வைக்கவும்.
பட்டாணியை ஊற விட்டு வேக வைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காந்ததும் பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வத்க்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய காய் அலவை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும். தேவையான நீர் விட்டு மூடி வேக விடவும்.
காய் வெந்ததும் அரைத்த முந்திரி தேங்காய் கசகசா விழுது சேர்த்து தேவைக்கு நீர் விட்டு கொதிக்க விடவும்.
மசாலா வாசம் போக கொதித்ததும் மீதம் உள்ள பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு புதினா கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
3- வெஜ் குருமா...
தேவையான பொருட்கள்:
கேரட் - 1
உருளை - 1
பீன்ஸ் - 10
காலிஃபிளவர் - சிறிது
வெங்காயம் - 1
தக்காளி - 1
இன்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கறிமசால்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா -1 கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய்துறுவல் - 1/4 கப்
பொட்டுகடலை - 2 தேக்கரண்டி
முந்திரி - 5
சோம்பு - 1/4 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணை - 2 தேக்கரண்டி
பிரியாணி இலை - 1
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலம் -2
செய்முறை:
காய்களை வேண்டிய அளவில் நறுக்கி வேகவைக்கவும்.
அரைக்க குடுத்தவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
கொத்தமல்லி, புதினா பொடியாக நறுக்கவும்.
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி தாளிப்பதை போட்டு வெங்காயம் போட்டு நன்குவதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி தக்காளி சேர்க்கவும்.தக்காளி வதங்கியவுடன் கறிமசால்பொடி.மஞ்சள்பொடி,கொத்தமல்லி,புதினா போட்டு நன்கு வதக்கி வேகவைத்த காய்களை போடவும்.
உப்பு போட்டு நன்கு பிரட்டிவிட்டு அரைத்ததை ஊற்றி நன்கு கலந்துவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி முடிவைத்து வேகவிடவும்.குருமா திக்கானவுடன் உப்பு சரிபார்த்து இறக்கி பரிமாறவும்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
4-ஸ்பைசி காய்கறி குருமா...
தேவையான பொருட்கள்:
காய்கறி கலவை ( கேரட், பீன்ஸ், பட்டாணி, கிழங்கு) - 2 கப்
வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 3
தயிர் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா - 4 இலைகள்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - 1/4 கப்
இஞ்சி - சிறியதுண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய் வற்றல் - 6
பட்டை - சிறியதுண்டு
சோம்பு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
மிளகு - சிறிதளவு
தனியா - 2 தேக்கரண்டி
கசகசா - சிறிதளவு
கிராம்பு - 3
செய்முறை:
முதலில் வாணலியில் மிளகாய் வற்றல், பட்டை, சோம்பு, சீரகம், மிளகு, தனியா, கசகசா, கிராம்பு எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
பின் தேங்காய், இஞ்சி, பூண்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.
பின் தயிர், அரைத்த விழுதை போட்டு வதக்கவும்
பின் நறுக்கிய காய்கறிகள், தண்ணீர், மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு போட்டு மூடிப்போட்டு வேகவிடவும்.
கடைசியில் கொத்தமல்லி இலை, புதினா தூவி இறக்கி பரிமாறவும்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
5-வெஜிடபிள் குருமா..
தேவையான பொருட்கள்:
கேரட், காலிஃப்ளவர், பீன்ஸ், பட்டாணி - 1 1/2 கப்
நெய்/எண்ணெய் - 3 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 3/4 தேக்கரண்டி
ஏலக்காய் - தலா 3
கிராம்பு - தலா 3
பட்டை - தலா 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
புதினா - 10 இலைகள்
தேங்காய் துருவல் - 1 கப்
ஊறவைத்த முந்திரிப்பருப்பு - 10
செய்முறை:
முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு நெய்யை காயவைத்து அதில் பெருஞ்சீரகம் சேர்த்து வெடித்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கி நன்கு வாசனை வந்ததும் வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும். அதன் பின் தேங்காய் துருவலையும், முந்திரிப்பருப்பையும் மையாக அரைத்து ஊற்றவும். குழம்பு கொதித்து கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
6-தக்காளி குருமா...
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2 அல்லது 3 பெரியது
வெங்காயம் - 1
கொத்தமல்லி நறுக்கியது - 1/4 கப்
புதினா - 5 இலை
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
முந்திரி - 8
பட்டை - ஒரு சிறு துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 1
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பாதி வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் 1 1/2 தக்காளி சேர்த்து வதக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
மீண்டும் அதே பாத்திரத்தில் மீதம் உள்ள எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து மீதம் உள்ள பாதி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பாதி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
குழைந்து வந்ததும் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி சிறிது நீர் விடவும்.
அரைத்த வெங்காய தக்காளி விழுது சேர்த்து தேவையான நீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து எண்ணெய் பிரியும் போது ஊற வைத்த முந்திரியை அரைத்து ஊற்றவும்.
நன்றாக கொதித்து குருமா பதம் வந்ததும் கொத்தமல்லி சிறிது தூவி பரிமாறவும்
🔥🔥🔥🔥🔥🔥
7-இடியாப்பத்திற்கான வெஜ் குருமா
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1
கேரட் - 1
பீன்ஸ் - 5
பச்சை பட்டாணி - 10
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 4
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
முந்திரி - 10
கசகசா - 2 தேக்கரண்டி
தயிர் - 1 டம்ளர்
ஏலக்காய் - 1
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
பட்டை - சிறிது
கிராம்பு - 2
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் மிகவும் பொடியாக நறுக்கி, பட்டாணியுடன் சேர்த்து வேக வைக்கவும்.
பச்சை மிளகாயை நீள்மாகவும்,வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
தேங்காய் துருவல், முந்திரி, கசகசா மூன்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின் தக்காளி, மிளகாய் தூள், தனியா தூள், அரைத்த மசாலா, மஞ்சள் தூள், வேக வைத்த காய்கறிகள், உப்பு, எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
குருமா நன்கு திக்காக வந்ததும் கடைந்த தயிர் சேர்த்து, சிறிது நேரம் கொதித்த பின் இறக்கி, இடியாப்பத்துடன் பரிமாறவும்.
🔥🔥🔥🔥🔥
8- குருமா....
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
வர மிளகாய் - 3 / 4
தேங்காய் - 4 கீத்து
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
கடாயில் ஆயில் ஊற்றி பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி வர மிளகாய், தேங்காய் கீத்து, பொட்டுக்கடலை, சோம்பு அரைத்த விழுது சேர்த்து கொதி விட்டு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசம் போனவுடன் இறக்கி பரிமாறவும்.
🔥🔥🔥🔥
9- பரோட்டா குருமா....
தேவையான பொருட்கள்:
காரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
பச்சைபட்டாணி - 100 கிராம்
உருளை கிழங்கு - 2
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - ஒன்று நறுக்கியது
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் - ஒரு மூடி
கிராம்பு - 2
பட்டை - சிறிதளவு
மல்லிதூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - அரை தேக்கரண்டி
பூண்டு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இதனுடன் பச்சைபட்டாணி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். துருவிய தேங்காயை அரைத்து கொள்ளவும்.
வாணலியில் வதக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
பிறகு மல்லித்தூள், மிளகாய்தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
அத்துடன் வேக வைத்த காயை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.
🔥🔥🔥🔥🔥🔥
10- தக்காளி குருமா.....
தேவையான பொருட்கள்:
தக்காளி - 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
அரைத்த தேங்காய் விழுது - 2 கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு, கொத்தமல்லித் தழை - தேவைக்கு
தாளிக்க:
ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, புதினா, எண்ணெய்
செய்முறை:
எண்ணெயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
பின் கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, வெந்ததும், தேங்காய் விழுது சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.
🔥🔥🔥🔥........... 💓💙💛💙💛💙
4 months ago | [YT] | 10
View 0 replies
V bakiyalakshmi
✍️வர மல்லி- 100 கிராம்
✍️கடலை பருப்பு - 75 கிராம்
✍️துவரம் பருப்பு- 75 கிராம்
✍️சீரகம்- 50 கிராம்
✍️மிளகு- 3 தேக்கரண்டி
✍️வர மிளகாய்- 20
✍️கருவேப்பிலை- கை புடி
✍️பெருங்காய தூள்- 1 தேக்கரண்டி
✍️மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
🔴மேற்கண்ட மசாலா பொருட்களை மிதமான தீயில் வறுத்து ஒரு தட்டில் மாற்றி ஆரவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி பவுடராக அரைத்து ஏர் டைட் கன்டினரில் ஸ்டோர் செய்து கொள்ளவும் .
4 months ago | [YT] | 14
View 0 replies
V bakiyalakshmi
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்
வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம்
ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு
எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம்
உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே
ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை
நினைப்புமாய் மறுப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம்
ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே
அவ்வென்னும் எழுத்தினால் அகண்டம் ஏழும் அகினாய்
உவ்வென்னும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வென்னும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளே
நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புரணமான மாய்கையை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே
காரகார காரகார காவல் ஊழி காவலன்
போரபோர போரபோர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்களும் எழும் எய்தசீ
ராமராம ராமராம ராமா நாமம் என்னும் நாமமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
விண்ணிலுள்ள தேவர்கள் அறியோனா மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான்
மண்ணெலாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய
வெண்மையான மந்திரம் வினைந்து நீரதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உட்கலந்து நிற்குமே
4 months ago | [YT] | 6
View 0 replies
V bakiyalakshmi
வாழைக்காய் மசாலா...........
தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 1.
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்.
சோம்பு - 1 டீஸ்பூன்.
கசகசா - 1 டீஸ்பூன்.
தனியா - 1/2 டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் - 4.
பூண்டு - 3 பல்.
கறிவேப்பிலை - சிறிது.
கடுகு - 1/2 டீஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்.
உப்பு - தேவைக்கேற்ப.
எண்ணெய் - 2 ஸ்பூன்.
செய்முறை விளக்கம்
முதலில் வாழைக்காயை தோல் சீவி, வில்லைகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தனியா, காய்ந்த மிளகாய், பூண்டு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, கரகரப்பாக அரைக்கவும்.
பின் கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, நறுக்கிய வாழைக்காய், கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.அரைத்த மசாலாவை கரைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு போட்டு வேக விடவும்.
வாழைக்காய் வெந்து தண்ணீர் வற்றியவுடன், 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு 1 நிமிடம் கிளறி இறக்கவும்.இப்போது வாழைக்காய் மசாலா தயார்.
5 months ago | [YT] | 6
View 0 replies
V bakiyalakshmi
செங்கல்பட்டு அருகில் மாமண்டூர் என்ற இடத்தில் ஸ்ரீ ஜெயேந்திர பெரியவா முதியோர் இல்லம் வரும் 26 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
இது வணிக நோக்கமில்லாமல் இலவசமாக முடிந்த வரையில் முதியோர்களை வைத்து காப்பாற்றுவதற்கான ஒரு ஏற்பாடு.
இந்த முதியோர் இல்லத்தில் சேரக்கூடிய அன்பர்கள் 60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள் காப்பாற்ற யாரும் இல்லாத ஆதரவற்ற முதியோர்கள் வரும் 26 ஆம் தேதி முதல் வந்து சேர்ந்து சுகமாக மிகுதி தன் வாழ்க்கையை கழிக்கலாம். இது சம்பந்தமாக ஏதேனும் தகவல் பெற விரும்பினால் அருள் கூர்ந்து வளசை ஜெயராமன்
9444279696என்ற செல் நம்பரில் தொடர்பு கொண்டு மேல் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்.நீங்கள்
யாருக்கேனும் உதவி செய்விரும்பினால் இதை உங்கள் குரூப்பில் பார்வேர்ட் செய்யவும்.
5 months ago | [YT] | 0
View 0 replies
V bakiyalakshmi
இன்று 17.04.2025. தேய்பிறை பஞ்சமி
சகல ஐஸ்வர்யங்களையும் தந்து, தடைகள் தீர்க்கும் பஞ்சமி வழிபாடு .
சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபடு ங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வை யே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை.
சப்த மாதர்களில் வாராஹி தேவியும் ஒருவர். இந்த ஏழுதேவியரிலும் காரியத்திலும் வீரியத் திலும் மகாசக்தி எனப் போற்றப்படுகிறாள் வாராஹி தேவி.பஞ்சமி திதி வாராஹி தேவி lயை வணங்குவதற்கு உரிய அற்புத நாள்.
பஞ்சமி திதியில் வாராஹிதேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளை எல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவா ள். காரியம்யாவிலும் துணை யிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.
நம்முடைய அனைத்துச் செயல்களிலும் துணையிருந்து நம்மைக் காத்தருள்வாள்.
வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை நைவேத்தியமாகப் படைப்பது ரொம்பவே விசேஷம்.
நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து போவாளாம் தேவி! அப்போதும் நாம் வேண்டுவதையெல்லாம் நிறைவேற்றி த் தந்திடுவாள்.
மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் விசேஷம். சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாக ச் செய்து தேவியை வணங்கலாம்.
சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தை யும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹி.
வாராஹி தாயே திருவடிகள் சரணம்...
5 months ago | [YT] | 486
View 6 replies
Load more