கோவில் கல்வி கலாச்சாரம் விளையாட்டு அரசியல் நடப்பு நிகழ்வுகள்


Trending Day

சுப்மன் கில் (Shubman Gill) என்பவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஆவார்.



அவர் தனது அசத்தலான பேட்டிங் ஸ்டைலும், நிலையான முன்னேற்றத்தாலும் இன்றைய தலைமுறை கிரிக்கெட்டர்களில் மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.

சுப்மன் கில் பற்றி சில முக்கிய தகவல்கள்:

பிறந்த தேதி: செப்டம்பர் 8, 1999

பிறந்த இடம்: பஞ்சாப், இந்தியா


வலது கை ரைட்-ஹேண்டட் பேட்ஸ்மேன்

பந்துவீச்சு : ஆஃப்ஸ்பின்

அணியில் பங்கு: ஓப்பனிங் பேட்ஸ்மேன்

கிரிக்கெட் வாழ்க்கை:

அரங்கேற்றம்


ஜனவரி 2019 - நியூசிலாந்து எதிராக

அரங்கேற்றம் (டெஸ்ட்): டிசம்பர் 2020 - ஆஸ்திரேலியா எதிராக

அரங்கேற்றம் (T20I): ஜனவரி 2023 - இலங்கை எதிராக


குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்:

2018-ம் ஆண்டு அண்டர்-19 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றியடைந்த அணியாக வழிநடத்தியது.

2023ல் டபுள் செஞ்சுரி அடித்தவர்.

ஐபிஎல் (IPL)-இல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுகிறார் (முந்தைய காலங்களில் KKR-க்காக விளையாடியுள்ளார்).

2023 IPL-இல் ஆரஞ்சு கேப் வென்றார் (அதிக ரன்கள் பெற்றவர்).


ஸ்டைல் மற்றும் புகழ்:

அவரது ஸ்ட்ரோக் ப்ளே மிகவும் அழகானது.


டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சமநிலை பேட்டிங் திறனுக்கு பெயர்பெற்றவர்.

எதிர்கால இந்திய அணியின் தலைவனாக அனைத்து வகை கிரிக்கெட்டிலும் பார்க்கப்படுகிறார்.
@Trendingdaynow #cricket#கிரிக்கெட்#இந்தியா

3 weeks ago | [YT] | 0

Trending Day

மீஞ்சூர் பேரூராட்சி 11 வது வார்டு பகுதியில் புதிய ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையம் கட்டிடம் மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் அடங்கிய 11 வது வார்டு பகுதி அன்பழகன் நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையக் கட்டிடம் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு பணி துவங்க பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார், இதில் அவை தலைவர் மு.பகலவன், மீஞ்சூர் நகர திமுக செயலாளர் க.சு. தமிழ் உதயன் பேரூராட்சி துணை தலைவர் பா. அலெக்சாண்டர், வல்லூர் தமிழரசன், ஒப்பந்ததாரர் அருள்தாஸ்,
வார்டு கவுன்சிலர் சுமதி தமிழ்உதயன்,முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ், தொழிற்சங்க பொறுப்பாளர் ராமமூர்த்தி, அபூபக்கர்,மீ.வி. கோதண்டம், முப்புராஜ், ஆண்ட்ரூஸ், குருசாலமன், உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

1 month ago | [YT] | 0

Trending Day

மீஞ்சூரில் இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் 10 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பாலாஜி தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட 10 வது மாநாடு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் கே விஜயன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மாநிலத் துணைத் தலைவர் A.கிருஷ்ணமூர்த்தி மாநில உதவி பொதுச் செயலாளர் வி. குமார் பங்கேற்று பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
மாவட்ட மாநாடு நடைபெற்றது
இதில் ராஜேந்திரன் நித்யானந்தம் சந்தானம் சுமதி லக்ஷ்மி அர்ஜுனன் நரேஷ் குமார் சம்பத் மாயக்கண்ணன் விநாயகமூர்த்தி ஜெயவேல் கதிர்வேல் சலில்குமார் ரமேஷ் சச்சிதானந்தம் ஆகிய முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

1 month ago | [YT] | 2

Trending Day

தேவம்மாநகர் பஞ்செட்டியில் ஓரணியில் தமிழ்நாடு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை


திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர திமுக சார்பில்
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தேவாத்தம்மன் நகரில் இன்று நடைபெற்றது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் கலந்து கொண்டு அப்பகுதியில் வீடுகள் தோறும் சென்று ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கரை ஒட்டி இணையதள உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டார்
இதில் நகரக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் மருத்துவர் பரிமளம் விஸ்வநாதன்
வார்டு நிர்வாகி
தமிழ்குடிமகன்
தீபன் ஆகியோர் பங்கேற்றனர் இதே போன்று சோழவரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கி வே ஆனந்தகுமார்
ஏற்பாட்டில் பஞ்செட்டியில் உறுப்பினர் சேர்க்கையானது நடைபெற்றது இதில் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி எச் சேகர்
கன்னிகைபேர் ஸ்டாலின் மீஞ்சூர் சுப்பிரமணி
ஜோதீஸ்வரன் சோழவரம் மேற்கு ஒன்றியம் நிர்வாகிகள்
பிரகாஷ் இளைஞர் அணி அமைப்பாளர்
ராஜாராம் மாவட்ட துணை அமைப்பாளர் சுற்றுச்சூழல் பிரிவு செல்வராஜ்
ஓட்டுனர் பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்‪@trendingdaynow‬

2 months ago | [YT] | 1

Trending Day

திருவள்ளூர் :

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பொன்னேரியில் பாராட்டு விழா


திருவள்ளூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் பொன்னேரி ஆண்டார்குப்பம் தனியார் மண்டபத்தில் இன்று வடக்கு மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் வழக்கறிஞரும் மாநிலங்களவை எம்பியுமான வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் இருவருக்கும் அவர்களை சால்வை மாலை அணிவித்து கௌரவித்து வரவேற்று பாராட்டு விழா நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்ராஜா பங்கேற்றனர். மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் ஜெயச்சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின் அப்துல் ரஹீம் அம்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் பானு பிரசாத் சுமத்திரகுமார் முத்துகுமார் செல்வகுமார் பொன்னுதுரை ராகேஷ் கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்

2 months ago | [YT] | 0

Trending Day

அதிமுக வடக்கு மாவட்ட பூத் கமிட்டி மற்றும் BLA 2 நியமித்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது


திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆண்டார்குப்பம்
பகுதியில் பூத் கமிட்டி மற்றும் BLA 2 நியமித்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது மாவட்டச் செயலாளர் பலராமன் தலைமையில் இன்று நடைபெற்றது
இதில் அதிமுக செய்தி தொடர்பாளர் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கலந்துகொண்டு வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்
இதில் ஒன்றிய கழக செயலாளர் முத்துகுமார் பொன்னுதுரை
சுமத்ராகுமார் மகேந்திரன் செல்வகுமார் தயாளன் ரமேஷ்
சிவகுமார் ஸ்ரீதர் மாரி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

3 months ago | [YT] | 2

Trending Day

பாகிஸ்தானின் முகம் தோலுரிக்கப்பட்டது அவர்களின் சாயம் வெளுக்கப்பட்டது என்றும்

ராகுல் காந்தியை பாகிஸ்தானின் தூதராக இந்தியாவில் நியமிக்கலாம் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதிகளின் கருத்துக்களைத்தான் ராகுல் காந்தி முன்மொழிகிறார் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்தார்


திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் திருஉருவப்படத்திற்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருநாகராஜன் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரு நாகராஜன்

காங்கிரஸ் திமுக உள்ளிட்ட ஏழு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் உலகம் முழுவதும் சென்று இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுத்ததற்கான விளக்கங்களை தெரிவித்து வருவதாகவும்
பாகிஸ்தான் மீதான போருக்கு வருத்தம் தெரிவித்த கொலம்பியா தற்போது அந்த வருத்தத்தை திரும்ப பெற்றுள்ளது என்றும்
இந்தியாவிற்கு தற்போது பல நாடுகள் ஆதரவு தெரிவிப்பதாகவும்

பாகிஸ்தானின் முகம் தோலுரிக்கப்பட்டது அவர்களின் சாயம் வெளுக்கப்பட்டது என்றும்

ராகுல் காந்தியை பாகிஸ்தானின் தூதராக இந்தியாவில் நியமிக்கலாம் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதிகளின் கருத்துக்களைத்தான் ராகுல் காந்தி முன்மொழிகிறார் என்று அவர் தெரிவித்தார்
இந்நிகழ்வில் மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாஸ்கரன்
மாவட்ட செயலாளர் அருண்குமார் பொது செயலாளர் சத்தியா முன்னாள் மாவட்ட தலைவர்கள் சென்னை சிவா ராஜா மாவட்டத் துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.‪@trendingdaynow‬

3 months ago | [YT] | 0

Trending Day

புங்கம்பேட்டில் அருள்மிகு ஸ்ரீ பகவத் ராமானுஜரின் 1008 வது திரு அவதார ஸ்ரீ வைரமுடி மகா உற்சவம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.



1008 வது திரு அவதார தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமானுஜருக்கு ஒரு கோடி மதிப்பிலான வைர கிரீடம் அணிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே புங்கம்பேட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமத் நாராயண பிருந்தாவன ஆசிரமத்தில் இன்று ஸ்ரீ பகவத் ராமானுஜரின் 1008 வது திரு அவதார தினத்தை முன்னிட்டு மகா உற்சவ திருமஞ்சனம் நடைபெற்றது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீடம் ராமானுஜருக்கு மேல தாளங்கள் முழங்க 108 திவ்ய தேசங்களில் இருந்து சீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஜீயர் உ வே சுதர்சன நாச்சியார் சாமிகளால் அணிவிக்கப்பட்டது பின்னர் பல்வேறு சிறப்பு ஆராதனை நடத்தி வழிபாடு செய்தனர்
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு
ஸ்ரீ ஸ்ரீனிவாசர் ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீ யோக நரசிம்மரை
தரிசனம் செய்தனர் ‪@trendingdaynow‬

3 months ago | [YT] | 0

Trending Day

சிந்தூர் ராணுவ வீரர்களுக்கும்
பாரத பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அத்திப்பட்டு பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில்
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமியர்கள் பாரத மாதா வேடம் அணிந்து
மூவர்ண தேசிய கொடி ஏந்தி பேரணி சென்றனர்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஊராட்சியில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் சிந்தூர் ராணுவ தாக்குதலின் வெற்றி கொண்டாட்டத்திற்கும் ராணுவ வீரர்களுக்கும் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பாரத மாதா வேடமணிந்து பாரத் மாதா கி ஜே பிரதமர் மோடி வாழ்க கோசங்களை எழுப்பியவாறு மூவர்ண தேசிய கொடியை ஏந்தி மேள தாளங்கள் முழங்க கிழக்கு மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் சிவக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது
இதில் முன்னாள் தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையர் வெங்கடேசன். மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாஸ்கரன் மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பிரமணிமாவட்ட செயலாளர் சந்துரு
மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தலைவர் பிரபு
உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

3 months ago | [YT] | 2

Trending Day

அத்திப்பட்டு ஊராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர்


திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஊராட்சியில் பொதுமக்களின் கோடை வெயில் தாகம் தீர்க்கும் வகையில்
தண்ணீர் பந்தலை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் MDG சுகந்தி வடிவலே் எம்டிஜி. கதிர்வேல் ஏற்பாட்டில்
பொன்னேரி தொகுதி பொறுப்பாளர் அமுதரசன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி குளிர்பானங்கள் மாம்பழம் கீரை பழ வகைகளை வழங்கி சிறப்பித்தார். இதில் ஒன்றிய அவைத் தலைவர் பகலவன் குணசேகர் தமிழரசன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

3 months ago | [YT] | 1