இந்த வலையொளியில் இயற்கைக்கு சம்பந்தமான காணொளிகளை காணலாம்.
இந்த பூமியில் உள்ள கல், மண், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள், நீர், காற்று, காட்டுயிர்கள், பறவைகள், கடல் வாழ் உயிர்கள் என அனைத்தும் உள்ளடக்கியதுதான் இயற்கை.
இதில் ஏதேனும் ஒரு சமநிலை குறைந்தால் பல விளைவுகள் ஏற்படும்.
நாம் வாழ்வதற்கு இந்த பூமி மட்டுமே உள்ளது. இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. இங்கு பகிரப்படும் காணொளிகள் ஏதோ ஒரு வகையில் இயற்கையை புரிந்து கொள்ளவோ, அதன் அவசியத்தை உணரவோ, அதன் அழகை ரசிக்கவோ, விழிப்புணர்வை ஏற்படுத்தவோ செய்யும்.
இயற்கையை புரிந்து கொண்டு, அடுத்த அடுத்த தலைமுறைக்கு புரிய வைத்து இந்த பூமியை எப்போதும் பாதுகாப்பான ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்பதே நோக்கம்.
#iyarkai #இயற்கை
இயற்கை
உலகத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்... பொங்கலைப் போல், தங்கள் வாழ்வில் மன நிம்மதியும், ஆரோக்கியமும், வெற்றியும், நற்செல்வங்களும் பொங்கட்டும்.. பொங்கலோ பொங்கல்.. 🌞🌳🦚🐿️🐘🌏🌧️
இந்த இனிய நன்னாளில், நமது முன்னோர்களைப் போற்றி.. அவர்கள் வழி நடப்போம். தமிழர் பண்பாட்டை பாதுகாப்போம். தமிழர் வாழ்வியலை பரப்புவோம். இயற்கையை நேசிப்போம்.
1 day ago | [YT] | 5
View 0 replies
இயற்கை
அழிந்து வரும் 5 காண்டாமிருக இனங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உலக காண்டாமிருக தினம் (World Rhino Day) கொண்டாடப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் உலக வனவிலங்கு நிதியம் 2010 ஆம் ஆண்டில் உலக காண்டாமிருக தினத்தை அறிவித்தது. 2011 ஆம் ஆண்டில் முதன்முதலாக உலக காண்டாமிருக தினம் அனுசரிக்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 அன்று உலக காண்டாமிருக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
3 months ago | [YT] | 6
View 0 replies
இயற்கை
இவற்றில் எது ஓரிதழ் தாமரைச் செடி?
7 months ago | [YT] | 0
View 0 replies
இயற்கை
அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள். நமக்காக உழைத்து, நம்மை வாழ வைக்கும் மாட்டுக்கு நன்றி தெரிவித்து அவற்றுக்கு என்றும் நன்றியுடன் இருப்போம்..
1 year ago | [YT] | 3
View 0 replies
இயற்கை
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
இயற்கையை கடவுளாக வழிபட்டு நமது வாழ்க்கை முறையை வகுத்த நமது முன்னோர்களின் வழி நடப்போம்.
இயற்கைக்கு விழா எடுத்து, மற்ற உயிர்களின் முக்கியத்துவத்தை உலகறியச் செய்த நமது முன்னோர்களின் அறிவைப் போற்றுவோம். உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகளை நன்றியுடன் போற்றுவோம்.
இயற்கையை பாதுகாக்க வேண்டிய அறிவும் கடமையும் புரிதலும், மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கையும் பொங்கலைப் போல பொங்கட்டும்..
1 year ago | [YT] | 0
View 0 replies
இயற்கை
ஐயா நம்மாழ்வாரின் நினைவு தினம் இன்று. உடல் நலிவடைந்து இருந்தபோது, நவீன கால மருத்துவ உதவியுடன் இன்னும் சில காலங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு இருந்த போதும், இயற்கைக்கு மாறாக நான் வாழ விரும்பவில்லை என்று தன்னை இயற்கையோடு அர்ப்பணித்துக் கொண்டவர்.
இன்று நமது உணவு பழக்க வழக்கங்களில் நாம் அக்கறையாக இருப்பதற்கு முக்கியமான காரணம் ஐயா நம்மாழ்வார் அவர்கள். இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் இல்லாமல் போய்விட்டாரே! அவர் காலத்தில் வாழ்ந்தாலும், அவரைக் காணும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டதே என்று ஏங்குபவர்களில் நானும் ஒருவன்.
உணவின் அரசியலை தமிழ்ச் சமூகம் அறிய செய்தவர். பாரம்பரிய விதையை மீட்டெடுத்தில் பெரும் பங்கு ஆற்றியவர். அவர் என்றும் நம்மோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
🙏🏼🌳💚🌴🌱
1 year ago | [YT] | 15
View 0 replies
இயற்கை
இவற்றில் எது பெண் குயில்?
1 year ago | [YT] | 2
View 1 reply
இயற்கை
நமது பூமிக்கு அதிக உயிர்காற்று (ஆக்ஸிஜன்-oxygen) எங்கிருந்து கிடைக்கிறது?
1 year ago | [YT] | 3
View 1 reply
இயற்கை
தமிழில் 'நாகணவாய்' என்று அழைக்கப்படும் பறவை எது?
1 year ago | [YT] | 1
View 2 replies
இயற்கை
ஓங்கில் என்பது எந்த உயிரினத்தின் தமிழ்ப்பெயர்?
1 year ago | [YT] | 1
View 1 reply
Load more