Welcome to "RAJA SRINIVASAN" YouTube channel !!!

வணக்கம் மக்களே..👇
வாழும் வாழ்க்கையில் பல இன்னல்கள் மற்றும் இடர்ப்பாடுகள் கண்டிப்பாக வரும்.. அவற்றை எல்லாம் நினைத்து கலங்கி மற்றும் சோர்ந்து போய் விட்டோம் என்றால்.. நம்மை நாமே அழித்து கொள்ளும் ஆயுதம் அதுவாக தான் இருக்கும்..ஆகவே எவ்வளவு பெரிய சோதனைகள் நம்மை சூழ்ந்து கொண்டு வந்தாலும் தன்னம்பிக்கை விடாமுயற்சி மன தைரியம் இவற்றை மட்டும் நாம் நமது மனதில் ஏற்றி கொண்டோம் என்றால்.. நம்மால் எவ்வளவு பெரிய விஷயங்களையும் கண்டிப்பாக உறுதியாக கடந்து போக மற்றும் வெற்றி பெறவும் முடியும்..இவை அனைத்தும் வெறும் வார்த்தை அல்ல.. மாறாக அனுபவ ரீதியாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்..!! ராஜா ஸ்ரீனிவாசன்





RAJA SRINIVASAN

அன்பிற்கினியவர்களே..
ஒருவர் கட்சி ஆரம்பிக்கிறார்.. எதற்காக கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வர வேண்டும் மக்களுக்கு தேவையான சிறந்த நல்லதொரு நியாயமான உரிமைகள் கிடைக்க வேண்டும் அதற்கு நாங்கள் வந்தால் அதை செய்வோம் என்று கூறி தான் கட்சி ஆரம்பிக்கிறார்கள் அதில் தவறு இல்லை.. ஆனால் நாமோ பொறுமை இல்லாமல் அவசரப்பட்டு பல தவறுகளில் ஈடுபடுகிறோம்.. ஆவேசமாக பேசுவது ஆவேசமாக கூச்சல் போடுவது எப்படியாவது எதையாவது செய்து நாம் யாரை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறமோ அவர்களை பார்த்து விட வேண்டும் என்று எல்லை மிறி சில விதிகளை மீறி செயல்படுகிறோம்..அத்தகைய தவறான செயலின் காரணமாக தான் நமது சொந்தங்கள் கரூர் மாவட்டத்தை சார்ந்த 41 பேரை நாம் இழந்து இருக்கிறோம்.. ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும் ஆயிரம் முறை மிக பெரிய தவறு என்று கூறினாலும் நடந்ததை மாற்றவோ மறைக்கவோ முடியாது..
அதே சமயம் இந்த இழப்பை அவ்வளவு சீக்கிரத்தில் கடந்து போகவும் முடியாது.. குறிப்பாக சிறு குழந்தைகள் மற்றும் கற்பினி பெண்கள் என்று 41 பேர் என்று தெரிய வந்து இருக்கிறது.. கூட்டத்திற்கு வருபவர்கள் தயவுசெய்து சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது சிறு குழந்தைகள் மற்றும் கற்பினி பெண்கள் வயதான முதியவர்கள் வர வேண்டாம் என்று அறிவுறுத்திய பிறகும் நாம் அதை ஏற்க மறுத்து விட்டோம்.. இன்று யார் மீது தவறு என்று விவாதமும் விசாரணையும் தான் நடந்து கொண்டு இருக்கிறது.. ஆனால் என்ன நடந்தாலும் விலைமதிக்க முடியாத உயிர்கள் திரும்ப வர போவதில்லை..😭 ஆகவே எனது அன்பிற்கினியவர்களே.. பிறருக்காக உங்கள் உயிரை இழந்து உங்கள் குடும்பத்தை வீதியில் நிற்க வைத்து விடாதீர்கள் சற்று சிந்தியுங்கள்.. இனிமேல் இந்த மாதிரியான தவறுகள் நடக்கவே கூடாது என்று இதில் இருந்து நாம் ஒரு தெளிவு கண்டிப்பாக பெற வேண்டும்..! - ராஜா ஸ்ரீனிவாசன்

2 months ago | [YT] | 6

RAJA SRINIVASAN

அன்பிற்கினியவர்களே..
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

3 months ago (edited) | [YT] | 6