"மனிதனாய் பிறந்ததே நன்மை செய்யத்தான்"

சுயநலத்திலும் கொஞ்சம் பொதுநலம் செய்வோமே...

இந்த சேனலில மூலம் மக்களின் அறியாமை நீக்கும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்படும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடுகள் சந்தேகங்கள் பற்றியும் வீடியோக்கள் வெளியிடப்படும். சட்டதிட்டங்கள்/அரசு நலத்திட்டங்கள்/குறித்த பல பதிவுகளும் வெளியிடப்படும்..


Common Man

என் தாய் நாட்டில் வாழும் என் உயிரினும் மேலான என் உறவுகளுக்கும்..
தாய் நாட்டிலிருந்து அயல்நாட்டில் வசிக்கும் என் உயிர் சொந்தங்களுக்கும்..

2026 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

3 hours ago | [YT] | 96

Common Man

https://youtu.be/7DGqZhmFD74
கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்...

1 week ago | [YT] | 11

Common Man

*இராமநாதபுரம் மாவட்டத்தில் 2002 (S.I.R) வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயரை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் இணையதள முகவரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.*

01. 196- திருவாடனை ramanathapuram-electors.vercel.app/?tsc=AC196

02. 200 - பரமக்குடி ramanathapuram-electors.vercel.app/?tsc=AC200

03. 201 - இராமநாதபுரம் ramanathapuram-electors.vercel.app/?tsc=AC201

04. 202 - கடலாடி ramanathapuram-electors.vercel.app/?tsc=AC202

05. 203 - முதுகுளத்தூர் ramanathapuram-electors.vercel.app/?tsc=AC203

06. இராமநாதபுரம் மாவட்டம் முழுமைக்கும்
(KOikf;Fk;) ramanathapuram-electors.vercel.app/

1 month ago | [YT] | 31

Common Man

SIR குறித்த உங்கள் பார்வை...?

1 month ago | [YT] | 42

Common Man

என் பேரன்பு கொண்ட அன்பு சகோதரர்  ‪@NattuNadappu1465‬ காளிதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

2 months ago | [YT] | 226

Common Man

துன்பங்கள்
அனுபவங்களே.

ஒரு நாள் ஒரு விவசாயியின் கழுதை கிணற்றில் தவறி விழுந்தது. அது மணிக்கணக்கில் சத்தமாக அழுதது, விவசாயி கழுதையை வெளியேற்றுவதற்கு ஏதாவது செய்ய முயன்றார்.

கடைசியாக, கழுதைக்கு வயதாகி விட்டதாகவும், ஏற்கனவே கிணறு வறண்டுவிட்டதாகவும், எப்படியும் மூடிவிட வேண்டும் என்றும் விவசாயி முடிவு செய்தார்;

உண்மையில் கழுதையை கிணற்றில் இருந்து வெளியே எடுப்பதால் எவ்விதப் பயனும் இல்லை என கருதினார்.

கிணற்றை மூட அக்கம்பக்கத்தினர் அனைவரையும் உதவிக்கு வருமாறு அழைத்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மண்வெட்டியைப் பிடித்து கிணற்றில் மண்ணை வீசத் தொடங்கினர். கழுதை என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து பயங்கரமாக அழுதது.

பின்னர், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், சில மண் வீச்சுகளுக்குப் பிறகு அது அமைதியாகிவிட்டது.

கடைசியாக கிணற்றுக்குள் இறங்கிப்
பார்த்த விவசாயி, அவர் பார்த்ததைக் கண்டு வியந்தார்.. ஒவ்வொரு மண்வெட்டி மண்ணிலும், கழுதை நம்பமுடியாத ஒன்றைச் செய்து கொண்டிருந்தது.

அது மேல் விழுந்த மண்ணை உதறிவிட்டு, அந்த மண்ணின் மேல் மிதித்துக் கொண்டிருந்தது. மிக விரைவில், கழுதை கிணற்றின் வாயை அடைந்து, விளிம்பிற்கு மேல் சென்று வெளியே சென்றதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

வாழ்க்கை உங்கள் மீது மண்ணை வீசப் போகிறது. வெளியேறுவதற்கான தந்திரம், அதை உதறிவிட்டு, அதைப் பயன்படுத்தி மேலே செல்வதுதான்.

நம் ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு படி
மேலே நம்மை இட்டுச் செல்லும். நாம் விட்டுக்கொடுக்காவிட்டால் ஆழமான குழிகளில் இருந்து வெளியேறலாம்...

மகிழ்ச்சியாக இருக்க 5 விதிகளை நினைவில் கொள்ளுங்கள்:

1. உங்கள் இதயத்தை வெறுப்பிலிருந்து விடுவிக்கவும்.

2. கவனச்சிதறல்களில் இருந்து உங்கள் மனதை விடுவிக்கவும்.

3. உங்கள் வாழ்க்கையை எளிமையாக்குங்கள்.

4. அதிகமாக கொடுங்கள் மற்றும்
குறைவாக எதிர்பாருங்கள்.

5. அன்பு செலுத்துங்கள்.

மற்றும் உங்கள் மேல் வீசப்பட்ட
மண்ணை உதறிவிட்டு மேலே ஏறி
நிற்கவும், ஏனென்றால் இந்த
வாழ்க்கையில் நீங்கள் ஒரு தீர்வாக
இருக்க வேண்டும், பிரச்சனையாக அல்ல!....

2 months ago | [YT] | 62

Common Man

ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.

போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.

சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. "என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே" என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார்.

வண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. "இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார். போகும் வழியில் "பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிகிட்டு போனார் முதலாளி.

தச்சர் வீடு வந்ததும் "தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா" என்று முதலாளி சொன்னார். "வீட்டுக்குள் வாங்க முதலாளி" என்று அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார். தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.

தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார். தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். காலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார். தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார்.

வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், "இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது" என்றார்.

"அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன். வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது. காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்? நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு போவேன் . ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்". தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.

நண்பர்களே.. நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள். பிரச்சனைகள் உங்களை கண்டு அஞ்சி ஓடும்...

2 months ago | [YT] | 77

Common Man

சமூக சேவை என்பது இந்த சமுதாயத்தின் மீது உண்டான அக்கறையின் பெயரில் விருப்பத்தோடு செய்கிற தியாகமே..

மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பது உண்மைதான்... அதே சமயத்தில் சமூக சேவகர்களுக்கென்று #குடும்பம் #பிள்ளைகள்
#உறவுகள் #வேலை #பொருளாதாரம் ஈட்டும் நேரம் என்று பல பகுதிகளில் அவன் நேரத்தை செலவு செய்யவும் வேண்டும்...

இவற்றிற்கும் மத்தியில் தான் தான் விரும்புகிற சமூக சேவையை ஒவ்வொரு உண்மையான(போலி அல்ல) சமூக சேவகர்களும் இங்கு செய்கிறார்கள்...

ஆனால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால்..? தான் நினைத்த நேரத்தில் தனக்கான தேவையை அவர்கள் செய்து கொடுக்க வேண்டும்..இல்லை என்றால் அவர்கள் சமூக சேவகர்கள் அல்ல என்று விமர்சிக்கவும் தவறாக சித்தரிக்கவும் துவங்கி விடுகிறார்கள்...

ஒன்று மட்டும் எனக்கு நன்றாக தெரியும்..
இந்த சமூக சேவைக்கு வந்த பிற்பாடு என்னுடைய சொந்த தேவைகள் எத்தனையோ இழந்துள்ளேன்..
எனக்கான ஒரு தேவை என்ற போது இந்த சமூகத்தில் ஒரு சிலரைத் தவிர எனக்கு கை கொடுக்கவில்லை..

இதுவரை எந்த பிரதி பலனையும் எதிர்பார்த்து நான் செய்ததும் இல்லை... இனி எப்போதும் செய்யப் போவதும் இல்லை..
என் நிலைப்பாடு சமூக சேவை செய்வதுதான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை..

தயவுசெய்து அனைவரும் அவர்கள் நிலையில் இருந்து அவர்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆதங்கம்..
👇👇👇👇👇👇👇
இங்கு ஒவ்வொரு சமூக ஆர்வலர்களின் நிலைமை இதுதான்..

2 months ago | [YT] | 249