பாமரன் குரல் - Paamaran Kural

எண்ணம் போல வாழ்வு !

"எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணவேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்" -பாரதி

நாம் எண்ணும் எண்ணங்களே நமது வாழ்வாக அமைகிறது .
நாம் இன்று வாழும் வாழ்க்கை நேற்றைய நமது எண்ணங்களின் தொகுப்பே !
சூரியக்கதிரை குவியாடி(லென்ஸ் )மூலம் குவித்து ஒரு காகிதத்தின் மீது
காட்டினால் காகிதம் புகைந்து எரியத்தொடங்கும் .
நமது எண்ணங்களின் வலிமையையும் அப்படித்தான்.
எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால்
எண்ணங்கள் செயல்களாகும் ! இந்த விதியைத்தான் வள்ளுவர்

" எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியர் ஆகப்பெரின்" -குறள் -666

(திண்ணியர் -மனஉறுதி உடையோராக )
ஒரு செயலைத் திட்டமிட்டு எண்ணியவர் ,எண்ணியபடியே செயலாற்றுவதிலும்மனஉறுதியோடும் இருந்தால் ,அவர் எண்ணியவற்றை எண்ணியபடியே அடைவர்.
நலவை எண்ணுவோம் !எண்ணங்களைக் குவிப்போம்!
எண்ணங்களைச் செயலாக்குவோம்!