Time Science Astrology Services

தற்கொலை குறித்தான பதினாறு(16 ) கேள்விகளும் பதில்களும்

1️⃣ மனிதன் தற்கொலை செய்வது கோழைத்தனமா?

இல்லை. தற்கொலையை கோழைத்தனம் என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்.

2️⃣ ஒரு மனிதன் தற்கொலை செய்வது அவனது தோல்வியா?

இல்லை. அது சமூகத்தின் தோல்வி.ஏனெனில் அவனது நியாயமான வாழ்க்கையை அங்கீகரிக்காத சமூகம் தான் தோல்விக்கு காரணம்.

3️⃣ஒரு மனிதன் ஏன் தற்கொலை செய்து கொள்கிறேன்?

பதில் தெரியாத ஒரு கேள்வி தான் ஒருவனை தற்கொலை செய்யத் தூண்டுகிறது.

அதற்கு பதில் தெரியாத மனிதர்கள் அவனைச் சூழும் பொழுது இதற்கு யாரிடமும் பதில் இல்லை என்று முடிவுக்கு வருகிறான். அவன் தற்கொலை செய்துகொள்கிறான்.

4️⃣அந்த கேள்விக்கு யாரிடம் பதில் இருக்கும்?

பதில் அவனிடமே இருக்கும். ஒரு ஞானியோ மனநல மருத்துவரோ
பதிலை நோக்கி அவனது பார்வையை நகர்த்த முடியும்.

5️⃣ தற்கொலை செய்ய முடிவெடுக்கும் முன் ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

யாரிடமாவது பேசவேண்டும்.

6️⃣தற்கொலை செய்பவர்கள் ஏன் யாரிடமும் பேசுவதில்லை?

இந்த 'புனிதப்பட்ட' சமூகம் சிறுவயதில் இருந்து ஊட்டி வளர்த்த 'புனிதம்' தான் காரணம். தன் புனிதம் கெட்டுவிடக்கூடாது என்ற பயத்தில் தான் ஒருவன் எதுவும் பேசாமல் தற்கொலை செய்துகொள்கிறான்.

ஒரு சமூகத்திற்கு புனிதம் அவசியம் தான். ஆனால் அது வீட்டு வாசலோடு இருக்கவேண்டும். படுக்கை அறைக்குள் செல்லக்கூடாது.

CCTV கேமாராக்கூட கழிப்பறை இருப்பதில்லை. ஆனால் இன்று இந்த சமூகம் ஊட்டிய புனிதம் ஒருவனுடைய கழிப்பறையிலும் அவனை துரத்துகிறது.

அதனால் தான் யாரும் யாரிடமும் மனம் விட்டு பேசுவதில்லை. அந்த பயம் தான் காரணம்.

7️⃣ தற்கொலை செய்ய நினைக்கும் ஒருவன் யாரிடம் அதை பற்றி பேச கூடாது?

தன்னை எப்பொழுதும் நல்லவனாக காட்டிக்கொள்ளும் எப்பொழுதும் அடுத்தவர்களுக்கு 'அறிவுரை' தரும் நண்பர்களிடம் கண்டிப்பாக பேசக்கூடாது.

தன்னை பற்றி ரகசியங்களை என்ன சொன்னாலும் அதை வைத்தே தன்னை தவறாக குற்றவாளியாக ஆக்குபவரிடம் குற்ற உணர்ச்சி விதைப்பவரிடம் பேசக்கூடாது. மற்றபடி 'ஆறுதல்' கூறக்கூடிய யாரிடமும் பேசலாம்.

8️⃣தற்கொலை செய்ய நினைக்கும் ஒருவர் யாரிடம் பேச வேண்டும்?

ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அல்லது வாழ்கைப்பற்றிய தெளிவுள்ள ஞானியிடம். இருவரும் ஆறுதல் கூறுவார்கள். அறிவுரை அல்ல.

9️⃣எப்படி ஒரு நல்ல மனநல மருத்துவரை தெரிந்து கொள்வது?
ஒரு மனநல மருத்தவர் உங்களுக்கு ஆறுதல் கூறுபவராக ஆலோசனை கூறுபவராக இருக்க வேண்டும். அறிவுரை கூறினால் அவர் சரியான மனநல மருத்துவர் அல்ல. அறிவுரை கூறி நீங்கள் தவறானாவராக சித்தரித்தால் அது உங்கள் தவறல்ல. மனநல மருத்துவருடைய தவறு. வேறு நல்ல மனநல மருத்துவரை அனுக வேண்டும்.

ஒரு மனநல மருத்துவர் தவறாக வழிகாட்டினார் என்பதற்காக இனி வேறு வழியில்லை. தற்கொலை தான் சிறந்தது என்று நினைக்ககூடாது. அது முற்றிலும் தவறு.

1️⃣0️⃣எப்படி ஒரு ஞானியை புரிந்து கொள்வது?

ஒரு ஞானி என நீங்கள் நம்பும் ஒருவர் ஆறுதல் கூறாமல் அறிவுரை கூறினால் அதுவும் உங்கள் தவறல்ல. அவர் ஞானியே இல்லை. ஞானி என்ற போர்வையில் உள்ள முட்டாள் என்று புரிந்து கொள்ளவேண்டுமே ஒழிய தாங்கள் தவறு என்று முடிவுக்கு வரக்கூடாது.

உங்களை தவறு என்று சொல்லும் யாரிடமும் எதையும் கேட்காதீர்கள். அறிவுரை கேட்கும் நேரம் இதுவல்ல

நல்ல மனநல மருத்துவரிடம் சென்றேன் ஒரு ஞானியைத்தான் சந்தித்தேன் என்பதை எப்படி உறுதி செய்து கொள்வது?

அவர்களிடம் பேசிய பிறகு அவர்களிடம் உங்களை பற்றி முழுவதையும் கொட்டித்தீர்த்த பிறகும் நீங்கள் உங்களுடைய இயலாமைகள் உங்கள் தவறுகளை எல்லாம் சொல்லிய பிறகும் நீங்கள் மிக தைரியாமாக உணரவேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் சரியாக இருப்பதாக உணரவேண்டும். நீங்கள் சுதந்திரமாக உணரவேண்டும். வாழ்வதற்கான அதிக உந்துதல் இருக்க வேண்டும்.

உங்கள் கேள்விக்கெல்லாம் விடைகிடைத்துவிட்டதாக அல்லது விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையாவது உங்களுக்கு வந்திருக்கவேண்டும். அப்படி உணர்ந்தால் நீங்கள் சரியானவறை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

1️⃣1️⃣தற்கொலையை மிக அதிகமா தூண்டும் கருவி எது?

அறிவுரை மற்றும் புனிதம்.

தற்கொலை செய்த ஒருவனை இன்னும் முயற்சித்திற்க வேண்டும்..இது முட்டாள்தான். கோழைத்தனம் என்று கூறுபவர்கள்?

புனிதத்தை கட்டிக்கொண்டு வாழ்பவர்கள். அவர்களை அனைவரும் கடைந்தெடுத்த முட்டாள்கள். மேலும் தற்கொலையை தூண்டுபவர்கள்.

1️⃣2️⃣யார் அதிகமாக தற்கொலைக்கு தூண்டப்படுவார்கள்?

எல்லாரையும் மகிழ்ச்சியாக வைக்கும் கலைஞர்கள் மற்றும் உணர்ச்சி வசப்படக்கூடிய அனைவரும்.உணர்ச்சிவசப்படுக்கூடிய இவர்கள் தனக்கு சரி என்பதையே செய்பவர்கள். செய்ய விரும்புவார்கள்.

ஆனால் உணர்ச்சியை கட்டுபடுத்தவே புனிதம் உருவாக்கப்பட்டது என்பது அவர்களுக்குத்தெரியாது.

[ உணர்ச்சியே உண்மை. சமூக ஒழுங்கிற்காக உணர்ச்சியை அடக்கவே புனிதம் பிறந்தத ]

உணர்ச்சியின் உண்மையை ஏற்றுக்கொள்ள அவர்கள் சுற்றி யாருமில்லாமல் அவர்களை சுற்றி புனிதர்கள் ( அறிவரை கூறும் நல்லவர்கள்) மட்டுமே வாழும் பொழுதும் தான் தன் வாழ்க்கையில் தவறு செய்கிறோம் என்ற எண்ணம் கலைஞனுக்கு உருவாகும்.

மேலும் புனிதர்களிடமே தங்களின் தவறுகளைபற்றியும் கலைஞர்கள் பேசுவார்கள். புனிதர்களோ ஆறுதல் கூறாமல் அறிவுரை கூறி முழுமூச்சில் மேலும் மேலும் குற்ற உணர்ச்சியை கலைஞர்களுக்கு ஏற்படுத்துவார்கள்.

அது மெல்ல அவர்களை தற்கொலையை நோக்கி நகர்த்தும்.
இவர்கள் கடைசியாக தற்கொலை செய்துவிட்டால்.. அங்கும் வந்து இவர்கள் இன்னும் முயற்சித்திருக்கவேண்டும் என்று அதே புனிதர்கள் பேட்டியும் கொடுப்பார்கள்.

யார் ஒருவர் உங்களிடம் தங்களை புனிதமாக தங்களை கட்டமைக்கிறார்களோ அவர்களுக்கு பின்னும் சாக்காடை இருக்கிறது என்பதை மறக்காதீர்கள். அதில் துற்நாற்றம் இருக்கிறது.

உங்களிடம் இல்லாத திறமை புனிதர்களுக்கு ஒன்றே ஒன்று இருக்கிறது. அது தனக்கு பின் இருக்கும் அசிங்கத்தை திறமையாக மறைத்து புனித வேஷம் போடுவது.

[ ஒரு வேலை அந்த புனிதர்களும் உணர்ச்சிவசப்படக்கூடியவராக இருந்தால் வாழ்க்கை முழுதும் புனிதத்தை கட்டமைத்துவிட்டு கடைசியாக தற்கொலை செய்தும் கொள்வார்கள் ]

1️⃣3️⃣ ஏன் எல்லாரையும் மகிழ்ச்சியில் வைப்பவனால் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை?

பூக்கள் அழகாக பூக்கிறது என்பதற்காக வேர்கள் ஆழமாக இருக்கும் என்று கூற முடியாது. ஒரு காற்றில் பூக்களும் மரமும் சேர்ந்து வேரோடு விழ சாத்தியம் அதிகம்.

1️⃣4️⃣ வேர் எப்படி ஆழப்படுத்துவது?

தான் யார் என்பதன் உண்மையின் மீதான நம்பிக்கையே ஆணி வேர்..
நீங்கள் சமூகத்தை பொருத்தவரை எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் , உங்கள் உண்மையின் மீது அவநம்பிக்கை கொள்ளக்கூடாது. உங்கள் உண்மையை பொதுவில் வைக்கவோ அல்லது உங்களை சுற்றியிருப்பர்களுக்கு உரைக்கவோ தயங்காதீர்கள். உங்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களிடம் இருந்து விலகிக்கொள்ளுங்கள்.

1️⃣5️⃣ இது என்ன புகைப்படம்?

பலமுறை கூறியிருந்தாலும் திரும்பவும் கூறுகிறேன். நானும் தற்கொலை எண்ணங்களோடு வாழ்ந்தவன். இரண்டு அல்லது மூன்று முறை தற்கொலை செய்ய முயற்சிகளும் மேற்கொண்டவன்.

தற்கொலையை மிக நெருக்கத்தோடு வாழ்ந்தவன். அதனால் உங்களை புரிந்து கொள்ளாமல் நான் இதை பேசவில்லை.

இதோ இந்த புகைப்படம் 2008ல் என்னை நானே எடுத்துக்கொண்டது. அப்பொழுது என்னுடைய தற்கொலை எண்ணங்கள் 70% இருந்தது. எனக்கு ஆறுதலாக இருந்தது என்னுடைய diary மட்டுமே. மற்ற அனைவரும் அனைத்துமே என்னை தற்கொலைக்கு தூண்டுவதாகவே இருந்தது.

ஆனால் இன்று அனைவருக்குமான Diary ஆக மாறி உள்ளேன். அனைவருக்குமான சாட்சியாக. என்னிடம் சொல்லப்பட்ட ரகசியங்கள் எல்லாம் உண்மைகள். அந்த உண்மைகளை நான் முழுவதும் அங்கீகரிக்கிறேன். அது அவர்களையும் என்னையும் சேர்த்து வாழ்கையை கொண்டாட ஊன்றுகோளாய் இருக்கிறது.

இன்று எனக்கு தற்கொலை எண்ணம் ஒரு சதவீகிதம் இருப்பதாக உணர்கிறேன். மற்றபடி வாழ்கையை முழுவதும் கொண்டாடுகிறேன். இல்லைஎன்றால் Lock down ல் 80 நாட்களாக தனியறையில் வாழ முடிந்திருக்காது. அதுவும் பெரும்பாலும் நல்ல மனநிலையில்.

தற்கொலையை மதிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு உயிரும் கொண்டாட்டமான வாழ்க்கையை வாழ முடியும். அதற்கு பல பல வாய்ப்புகளும் நியாயங்களும் உள்ளது. அவசரப்பட்டு எந்த முடிவுக்கு வரவேண்டாம்.

1️⃣6️⃣ நீங்கள் சொல்லும் அனைத்தும் ஓரளவிற்கு புரிகிறது. ஆனால் என் தற்கொலை எண்ணத்திற்கு வேறு காரணம் உள்ளது. நான் என்ன செய்வது?

எத்துனை பெரிய காரணமாக இருந்தாலும் தற்கொலை தேவையற்றது. உங்கள் காரணத்தை இந்த link ல் ASK YOUR QUESTION ல் பதிவு செய்யுங்கள். நான் பதில் அளிக்க முயற்சிக்கிறேன்.

www.timescience.org/contact ( See comment )

நீங்கள் பெயர் mail id எதுவும் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை. அது உங்கள் விருப்பம். ஆனால் கேள்வியை அனுப்பும் பொழுது நீங்கள் ஆணா பெண்ணா.. உங்கள் வயது என்ன.. திருமணம் ஆகிவிட்டதா இல்லையா குழந்தை இருக்கிறதா இல்லையா எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்பதை மட்டும் சேர்த்து அனுப்புங்கள். உங்களுக்கு பதில் அளிக்க ஏதுவாக இருக்கும்.

எல்லோருக்கும் காது கொடுக்க ஆசை தான். நேரமின்மையால் அது சாத்திமில்லை.தயங்காமல் contact page ல் கேளுங்கள்.பேசுங்கள். நான் என்னாலான தெளிவை தர முயற்சிக்கிறேன்.

நன்றி
திரு #Thiru #YouAreNotAlone #MentalHealthMatters #RIPSSR

பி.கு : அறிவுரை என்பதே ஒட்டுமொத்தமாக தவறு என்பதல்ல என் கருத்து. தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு அறிவுரை என்பது விஷம்

5 years ago | [YT] | 6