Common Man

என்றோ வல்லரசாக வேண்டிய நம்முடைய தேசம் ஊழல் லஞ்சத்தால் ஏழை எளியோரை வறுமையில் தள்ளிவிட்டது..

இதையெல்லாம் தடுக்க அரசாங்கம் சட்டமும் திட்டமும் வகுத்தாலும் சாமானியனின் புரட்சி எழும்பும்வரை இங்கு ஒன்றையும் சாதிக்க முடியாது..

2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட *தகவல் பெறும் உரிமைச் சட்டம்* இன்றைய இந்தியாவில் அடிப்படை கட்டமைப்பையே மாற்றி அமைத்திருக்க வேண்டும்..ஆனால் இன்றளவும் பரிதாப நிலையே தொடர்கிறது..
ஆகவேதான் இதை குறித்த விழிப்புணர்வு நாம் செய்து கொண்டுள்ளோம்..

இந்த சட்டம் வந்து 20 ஆண்டுகளை கடந்தும் சாமானிய மக்களுக்கு என்னவென்று தெரியவில்லை..
சட்டத்தை வலிமைப்படுத்தும் நோக்கிலே *தகவல் பெறும் உரிமைச் சட்ட* ஆர்வலர்கள் *மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில்* வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி நடத்த உள்ளோம்..
இதை நடத்திட பற்பல திட்டங்கள் தீட்டி உள்ளோம்..

சாமானிய மக்களிடம் வாங்கி சாமானிய மக்களுக்கு அதை பயன்படுத்த போகிறோம் ஆகவே இதை நடத்த உங்களுடைய நேரடி ஆதரவும் நிதி ஆதரவும் கட்டாயம் தேவை உங்களுடைய பங்களிப்பை செலுத்தி அதற்கான விவரங்களை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு (aaraamarivu.klk@gmail.com) தெரிவித்தால் அதற்கான ரசீது உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மாநாட்டிற்கு உங்கள் வருகையை முன்பதிவு செய்ய இந்த கூகுள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்..
👇🏻👇🏻👇🏻👇🏻
docs.google.com/forms/d/e/1FAIpQLSenWqZxRtgo2gvpfJ…

இப்படிக்கு: கே.முருகேசன்.

தமிழ்நாடு ஆர் டி ஐ ஆர்வலர் இயக்கம்..✋🏻

2 weeks ago (edited) | [YT] | 68