sivaya nama

பேச்சு குறைபாடு காது கேளாமை ஜாதகப்படி

பெண் ஜாதகம் உயர்கல்வி முடித்து அரசாங்க பணியில் உள்ளார். சிறு வயதிலிருந்தே பேச்சு சரியாக வராது மற்றும் காது கேளாமை பிரச்சனை உள்ளது அது ஏன் என்று பார்ப்போம்

பதில் :

மகர லக்னம் மிதுனம் ராசி திருவாதிரை - 4 பாதம் சிறுவயதிலே ராகு தசா முடிந்து விட்டது 3 வயது வரை ராகு தசா அதன் பின்னர் 19 வயது வரை குரு தசா தற்போது சனி தசா நடக்கின்றது.

லக்னதில் குரு சுக்கிரன் புதன் நல்ல புத்திசாலி திறமைசாலி இரண்டு கிரகங்கள் திக்பலம் அதனால் படிப்பு வந்தது சூரியன் சிம்மத்தை பார்த்து வலு படுத்த 10 ஆம் அதிபதி சுக்கிரன் லக்னதில் குரு புதன் உடன் இருக்க அரசு வேலை கிடைத்தது.

2 ஆம் வீடு - பேச்சு வாய் பகுதி

3 ஆம் வீடு - காது பகுதி

அடுத்து 2 ஆம் வீட்டில் வாக்கு ஸ்தானத்தில் 8 ஆம் அதிபதி சூரியன் இருப்பது தவறு மேலும் வீடு கொடுத்த சனி 2 ஆம் அதிபதி கேது உடன் இணைந்து செவ்வாய் பார்வையில் 3 ஆம் வீடான மனத்தில் இருப்பதால் பேச்சு குறைபாடு தந்தது அதே போல் 3 இடம் கெட்டு விட்டது அதன் அதிபதி குரு நீசம் இங்கே ராசியை விட லக்னமே வலு மற்றும் சுபர் தொடர்பில் உள்ளது. அதனால் லக்னம் தான் பிரதானமாக வேலை செய்யும்.

2 ஆம் இடத்தில் ராகு கேது சனி செவ்வாய் அல்லது 6,8 ஆம் அதிபதிகள் இருப்பது அல்லது 2 ஆம் அதிபதிக்கு பாபர்கள் தொடர்பு பெறுவது பேச்சு குறைபாடு தரும். அதேபோல் 3 ஆம் இடத்தையும் பார்க்க வேண்டும்.


மேலும் இந்த பெண்ணிற்கு இளம் வயதிலேயே ராகு தசா வந்தது குறைபாடு மிகை படுத்தி கொடுத்தது. ராகுவும் இங்கே கெட்டு விட்டார் சனி செவ்வாய் தொடர்பில்.

ஆனாலும் குரு 5,7,9 ஆம் வீட்டை பார்த்தால் நல்ல திருமணம் வாழ்க்கை மற்றும் குழந்தை அமைப்பு இந்த ஜாதகிக்கு அமையும் மேலும் இவர் போராடி அரசு வேலை பெற்றதற்கு காரணம் லக்னத்தில் உள்ள சுவர்கள் லக்னாதிபதி கெட்டாலும் லகனம் கெடவில்லை அதனால் தான் லக்னத்தை ஒரு கிரகம் ஆவது தொடர்பு கொள்ள வேண்டும்.

நன்றி

இப்படிக்கு உங்கள்
ஓம் பிரகாஷ் (பாரம்பரிய ஜோதிடன்)

#omprakashastrology7 #post #astro #viral #viralmemes #trending #insta

3 days ago | [YT] | 5