magizh foods

வரகு அரிசி நன்மைகள்

சிறுநீரகம்
கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுத்து, சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

ஆண்மை குறைபாடுகள்

இக்கால ஆண்கள் அதிலும் இளம் மற்றும் நடுத்தர வயதுள்ள ஆண்கள் பலருக்கு மனஅழுத்தம் மற்றும் கவலைகள் அதிகம் ஏற்படுவதால் ஆண்மை சம்பந்தமான குறைபாடு ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் காலை அல்லது மதியம் வேளையில் வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வெகு சீக்கிரத்திலேயே ஆண்மை குறைபாட்டை போக்க முடியும்.

உடல் எடை குறைப்பு

இன்றைய காலத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை அதீத உடல் எடை. இதற்கு நார்ச்சத்து அதிகம் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் வரகரிசியில் அதிகம் நிறைந்துள்ளன. தினந்தோறும் காலை அல்லது மதியம் வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும்.


ரத்த ஓட்டம்

உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் ரத்தத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டியது அவசியமாகும். வரகரிசியில் ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்திம், அதன் ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே ரத்த சுத்தி ஏற்பட விரும்புபவர்கள் அடிக்கடி வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.

மலச்சிக்கல்

நார்ச்சத்து குறைந்த உணவுகளையும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடுவதால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

ஊட்டச்சத்து

நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் வரகரிசியில் நிறைந்துள்ளது. வாரத்திற்கு மூன்று அல்லாது நான்கு முறை வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது.

2 years ago | [YT] | 0