உரு உற்றுப் போகமே, போக்கியத்து உற்று, மருவு உற்றுப் பூதம், மன அதீதம் மன்னி, வரும் அச்செயல் பற்றிச் சத்த ஆதி வைகிக் கரு உற்றிடும் சீவன் காணும் சகலத்தே.
விளக்கம்:- சகல அவத்தையில் பிறக்கும் சீவன் செய்பவை இவை: மாயையின் காரியமாக ஓர் உடலைப் பெறும். எடுத்த உடலுக்கு ஏற்ப இன்பங்களை அனுபவிக்கும். பஞ்ச பூதங்களை சார்ந்து நிற்கும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று நான்கு அந்தக் காரணங்களுடன் நன்கு பொருந்தும். சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து தன்மாத்திரைகளில் தங்கும். பிறவி எடுப்பதற்கு ஒரு கருப்பையை அடையும்.
23
சகல அவத்தையில் சீவன்...,!
உரு உற்றுப் போகமே, போக்கியத்து உற்று,
மருவு உற்றுப் பூதம், மன அதீதம் மன்னி,
வரும் அச்செயல் பற்றிச் சத்த ஆதி வைகிக்
கரு உற்றிடும் சீவன் காணும் சகலத்தே.
விளக்கம்:-
சகல அவத்தையில் பிறக்கும் சீவன் செய்பவை இவை:
மாயையின் காரியமாக ஓர் உடலைப் பெறும். எடுத்த உடலுக்கு ஏற்ப இன்பங்களை அனுபவிக்கும். பஞ்ச பூதங்களை சார்ந்து நிற்கும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று நான்கு அந்தக் காரணங்களுடன் நன்கு பொருந்தும். சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து தன்மாத்திரைகளில் தங்கும். பிறவி எடுப்பதற்கு ஒரு கருப்பையை அடையும்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
3 days ago | [YT] | 2,225