Jayapataka Swami Tamil

தவத்திரு ஸ்ரீல ஜெயபதாக சுவாமி மகராஜரின் உடல்நிலைகூறித்த அறிக்கை
29 ஜூலை 2023

தவத்திரு ஸ்ரீல ஜெயபதாக சுவாமியின் அன்பான சீடர்களே மற்றும் நலம் விரும்பிகளே!

இடம் - மாயாபூர்
முகாம் - ரேலா மருத்துவமனை, சென்னை

எங்கள் பணிவான வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
எல்லா புகழும்
ஸ்ரீல பிரபுபாதருக்கே!.
எல்லாப் புகழும் குரு மற்றும் கௌரங்கருக்கே!!.

குருமகராஜர் ஜூலை 27ம் தேதி மாலை சென்னை ரேலா மருத்துவமனைக்கு வந்தார்.

அவர் வந்தவுடன் நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotics) ஊசியைத் தொடர்ந்தார் மற்றும் பல்வேறு மருத்துவர்களைச் சந்தித்தார்.
பல வழக்கமான நுண்ணுயிர்க்கொல்லிகளைஎதிர்க்கும் நுண்ணுயிரியால் ஏற்பட்ட சிறுநீர் தொற்று குரு மஹராஜுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மருந்துகளால் குணமடைவதாக தெரிகிறது.

இரத்த சோகை சற்று மேம்பட்டுள்ளது, ஆனால் இரத்தம், இரத்தத்தட்டு அளிக்கப்படுவதன் அவசியம் உள்ளது.
சிறுநீரகத்தின் செயல்பாடு இன்னும் கவலையளிப்பதால். சிறுநீரக மருத்துவர் சிறுநீரகத்தின் திசு ஆய்வு செய்ய (பயாப்ஸி) பரிசீலிக்கிறார்.
இது ஒரு அறுவை சிகிச்சையை உள்ளடக்கியது என்பதால், குரு மஹராஜர் இந்த செயல்முறையை மேற்கொள்ளும் அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறாரா? என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்த விரும்புகிறார்கள்.

குரு மஹராஜரின் மருத்துவ குழுவும் ரேலா மருத்துவமனையின் குழுவுக்கும் இடையே பல சோதனைகள் மற்றும் விவாதங்கள் நடந்து வருகின்றன, இன்னும் சில நாட்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை கூறித்து தெரியவரும்.
இவை அனைத்திற்கும் இடையிடையே குரு மஹாராஜர் இடைவிடாமல் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்களையும், மருத்துவர்களையும் ஹரே கிருஷ்ணா ஜபிக்க ஊக்குவித்து வருகிறார். அவர் மருத்துவமனையில் இருந்துகொண்டே தனது மற்ற சேவைகளையும் தொடர்கிறார்.

நீங்கள் அனைவரும் உங்கள் பிரார்த்தனைகளைத் தொடருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம், மேலும் எங்களிடம் சில குறிப்பிடத்தக்க தகவல்கள் கிடைக்கும்போது நாங்கள் உடனுக்குடன் அனுப்புவோம் என்பதை தயவுசெய்து கவனிக்கவும்

உங்கள் அனைவருக்கும் நன்றி.

குரு மஹராஜரின் மருத்துவ குழு மற்றும் சேவா குழு சார்பாக
மஹாவராஹ தாஸ்

2 years ago | [YT] | 2