single reel

01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட வரலாற்று...

தமிழீழத்தின்.இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும் சிங்களபௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட பல மினிமுகாம்களில் மணலாறு முந்திரிகைக்குள மினிமுகாமும் ஒன்றாகும்.

இம்மினிமுகாமில் நூற்றிற்க்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் இருந்தனர்.

1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் பெருமளவான சிங்களமக்களை குடியேற்றுவதற்கான முயற்சிகளில் இம்முகாம் படையினர் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இத்தகவல்களை மணலாற்று வேவு அணிகள் அப்போது மணலாறு மாவட்டத் தளபதியாக இருந்த லெப்.கேணல் அன்பு அவர்களிடம் கொடுத்தனர்.

வேவுத்தரவுகளை தீவிரமாக ஆராய்ந்த தளபதி அன்பு அவர்களும் தளபதி மேஐர். வீமன் அவர்களும்
நிலமையின் விபரீதத்தை உணர்ந்து இம்முகாமை தாக்கி அழிக்கவேண்டும்.
எனமுடிவெடுத்து தலைவர் அவர்களிடம் இத்தகவல்கள் அனைத்தையும் தெரிவித்தனர்.

தலைவர் அவர்கள் அனைத்துத் தகவல்களையும் கேட்டறிந்தார்.

அதன் சாதகபாதக நிலைகளையும் எவ்வாறு தாக்குதல் நடாத்தவேண்டும் எனவும் அத்தாக்குதலின்போது சிங்களப் பொதுமக்களுக்குச் சிறுசேதமும் ஏற்படக்கூடாதென உறுதியாக தலைவர் அவர்கள் தளபதிக்கு கூறினார்.

இம்முகாம் கட்டாயம் அழிக்கப்படவேண்டும் எனக் கூறியதோடு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி தளபதிகளை வழியனுப்பிவைத்தார்.

தலைவர் அவர்கள் கொடுத்த ஆலோசனைகளுக்கமைவாகவும் தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப கடும்பயிற்சி இலகுவான சண்டை என்றதன் அடிப்படையில் வேவுநடவடிக்கைகளில்
பெறப்பட்ட தகவல்களுக்கேற்ப தாக்குதலுக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டன.

தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு மேஐர் செங்கோல் அவர்கள் தலைமையிலான போராளிகளால் முறையே நிசாம் வெட்டை மற்றும் ஜீவன் ஆகிய முகாம்களில் பயிற்சிகள் நடைபெற்றன.

பயிற்சிகள் முடிவடைந்து தாக்குதற் திட்டம் தளபதி அன்பு அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டதுடன் தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்ட அறிவுரைகளையும் அன்பு அவர்கள் தெளிவாகக் கூறினார்.

தாக்குதலுக்கான இருநூறுபேர் கொண்ட அணிகள் தாயர்படுத்தப்பட்டன.

இவ்வணிகள் கொக்குத்தொடுவாயிலிருந்து படகுகளில் சென்று கொக்கிளாய் கடல்நீரேரியைக்கடந்து தரையிறங்கி அங்கிருந்து நடந்துசென்று 01.11.1990 அன்று அதிகாலை ஒரு மணிவரை முந்திரிகைக்குள முகாமருகில் காத்திருந்து.

அதிகாலை ஒருமணியளவில் மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிங்களப்படையின் முகாம் மீது ஒரு வெற்றிகர அதிரடித்தாக்குதலைத் தொடுத்து வெற்றிகொண்டனர்.

குறிப்பிட்ட சிலநிமிடத்தில் முகாம் புலிகளின்
பூரணகட்டுப்பாட்டிற்க்குள் வந்தது.
தொடர்ந்து அந்தமுகாமை தக்கவைத்திருந்த போராளிகள் படைமுகாமை முற்றுமுழுதாக அழித்தொழித்துவிட்டு கைப்பற்றிய ஆயுதங்களுடன் தளம் திரும்பினார்கள்.

இதன் பின்னும் இதனை அண்டியபகுதிகளில் பல்வேறு தாக்குதல்கள் விடுதலைப்புலிகளால் படையினர் மீதுமேற்கொள்ளப்பட்டதால் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.

இவ்வாறுதான் எம் தாயக பகுதி மீதான சிங்களத்தின் ஆக்கிரமிப்பு ஆசைகள் முறியடிக்கப்பட்டு வந்தன.

இவ்வெற்றிகர அதிரடித் தாக்குதல்களுக்கான வேவுத்தகவல்களை மேஐர் .ரம்போ கப்டன்.விமல்ராஜ் தலைமையிலான போராளிகளால் சொல்லமுடியாத அர்ப்பணிப்புக்களுடன் சிறுகச்சிறுகச் சேகரித்துக்கொடுத்தனர்.

படைமுகாமின் தாக்ககுதல்களை களத்தில் நின்று மேஐர்.சங்கர் அவர்கள் வழிநடாத்த களமருத்துவத்தை கப்டன் இளங்கோ அவர்கள் தலைமையிலான போராளிகள் செவ்வனவே செய்தனர்.

இவ் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கினைத்து முல்லை மணலாறு மாவட்டத் தளபதி அன்பு அவர்கள் வழி நடத்தினார்.

(1991ம் ஆண்டு முற்பகுதியின் பின்னர் தான் இயக்கத்தின் வளர்ச்சியும் அதன் நிர்வாக கட்டமைப்புக்காகவுமாக ஒருமாவட்டத்தில் சிறப்புத்தளபதி, தளபதி, துணைத்தளபதி எனும் கட்டமைப்பு பரிணாம வளர்ச்சி அடைந்தது.)

இவ்வெற்றிகரத் தாக்குதலை களத்தில் நின்று
வழிநடாத்திய..

மேஐர் .சங்கர்.அவர்களுடன்
2ம் லெப்ரினன்.மதுவன்.
வீரவேங்கை .முசோலினி .
ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

நீண்டகாலமாக 2ம் லெப்.மதுவனைப் பார்க்காத பெற்றோர் மதுவனைப் பார்பதற்காக மணலாற்று முகாமிற்க்கு
வந்திருந்தனர்.

ஆனால் அவ்வெற்றிச்சமரில் வீரச்சாவடைந்த மகனின் வித்துடலுடனே மதுவனின் பெற்றோர் வீடுதிரும்பினர்.

இப்படியான பல்வேறு அர்பணிப்புக்கள் தியாகங்கள் நிறைந்த போராட்டமாக தமிழீழவிடுதலைப் போராட்டம் திகழ்கிறது.

கிட்டத்தட்ட முப்பதான்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இச்சம்பவமானது அன்று இக்களமுனையில் நின்றவர்களால் மறக்கமுடியாத பெரும் சோக நிகழ்வாக இன்றும் அப்போராளிகளால் நினைவுகூரப்படுகிறது.

அக்களமுனையில் நின்று இன்று புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் உள்ளத்திலிருந்து......
Copy

5 days ago | [YT] | 1