Micah Tech

இன்னும் 50 ஆண்டுகள் கழித்து தமிழில் சேவைகள் தொடரப்படுமா?


நம்மில் அநேகர் கைபேசி எண்ணை கேட்கும் போது ஆங்கிலத்தில் சொல்கிறோம், தானியங்கி எந்திரத்தில் பணம் எடுக்கும் போது ஆங்கில மொழித் தேர்வு செய்கிறோம், அரசு விண்ணப்ப படிவங்கள் நிரப்பும் போது தமிழில் நிரப்புவதில்லை. இவ்வாறு அனுதின பயன்பாட்டிற்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.

ஒரு மொழி நிலைத்து நிற்க வேண்டுமானால் எழுவது, வாசிப்பது, பேசுவது ஆகிய மூன்று பரிமாணங்கள் எப்போதும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். தற்போது இது நலிவடைந்து வருகிறது.

புதிய கண்டுபிடிப்புகளை உருவாக, உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ள தாய்மொழி மிக முக்கியம். ஆகவே தேவையான இடங்களில் மட்டும் ஆங்கிலம் பயன்படுத்துவோம். தாய்மொழியை வாழ்வில் நடைமுறையாக்குவோம். நன்றி.

2 weeks ago | [YT] | 0