WINWORTH

மியூச்சுவல் ஃபண்ட்... அஸெட் அலொகேஷன் முறையில் முதலீடு செய்வது எப்படி?

‘கடந்த வாரம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கலவையை (Portfolio) உருவாக்குவது பற்றி விரிவாகவும் தெளிவாகவும் விளக்கிச் சொன்னீர்கள். எங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் மூலம் பிரித்து முதலீடு செய்யும் அஸெட் அலொகேஷன் (Asset Allocation) பற்றி விளக்கிச் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்’ எனப் புதுச்சேரியைச் சேர்ந்த கே.முருகன் என்பவர் கேட்டிருக்கிறார்.

அவரைப் போன்றவர்களுக்காக இந்த வாரம் அஸெட் அலொகேஷன் முறையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எப்படி லாபகரமாக முதலீடு செய்வது என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ரிஸ்க், ரிட்டர்ன்...

எந்தவொரு முதலீட்டை எடுத்துக் கொண்டாலும், இரு முக்கியமான விஷயங் களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, அதிலுள்ள ரிஸ்க். அடுத்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகும். ஒரு முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிகமாக இருந்தால், அந்த முதலீடு நல்ல முதலீடு எனலாம். அதே நேரத்தில், முதலீடுகளைப் பிரித்து மேற்கொள் வது மூலம் ரிஸ்க்கைக் குறைப்பதுடன், பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் பெறவும் முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, முக்கியமாக முதலீடுகள் என்கிறபோது கடன் சந்தை, பங்குச் சந்தை மற்றும் தங்கம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1 year ago | [YT] | 0