1994-ல் ஒரு படம் ரிலீஸானது.. அந்த படம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. இந்தியா முழுக்க அந்த படம் வெளியானாலும், சில இடங்களில் அந்த படத்தை தடை செய்யவும் கோரிக்கை எழுந்தது.. அந்த படத்துக்கு எதிராக பலரும் குரல் கொடுத்தார்கள்.. ஆனால், பல சினிமா ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், உலக சினிமா பார்ப்பவர்கள் என அத்தனை பேரும், இந்த படம் வெளியே வரவேண்டும்" என்றார்கள்.
இப்படி ஆதரவு, எதிர்ப்புகளுக்கு நடுவே அந்த படம் வெளியானது.. அந்த படத்தின் போஸ்டரில் A படம் என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது.. இதை பார்த்து விட்டுத்தான் ஆண்கள் பலரும் தியேட்டருக்குள் சென்றார்கள்..
தியேட்டர் உள்ளே போனதுமே, படம் ஆரம்பித்து அரை மணி நேரத்துக்குள் அந்த முக்கியமான காட்சி வந்தது.. அதை பார்த்ததுமே தியேட்டர் முழுக்க காலியாகிவிட்டது.. இரண்டே முக்கால் மணி நேர படமாக இருந்தாலும், அரை மணி நேரத்திலேயே மக்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள்.. இதனால், தியேட்டர்களில் பாதியிலேயே படம் நிறுத்தப்பட்டது..
பிறகு, மறுபடியும் அடுத்தக் காட்சிக்கு முண்டியடித்து கொண்டு தியேட்டர் வாசல்களில் ஆண்கள் கூடிநின்றார்கள்.. அவர்களும் தியேட்டருக்கு சென்று, அரை மணி நேரததுக்குள் வந்த அந்த காட்சியை மட்டும் பார்த்துவிட்டு வெளியேறிவிட்டார்கள்.
இதனால் அந்த டைரக்டர் மிகவும் வேதனைப்பட்டார். உலகத்தில் நடந்த ஒரு கொடுமையை நான் படத்தில் வைத்திருக்கிறேன். அந்த காட்சியில் ஒரு பெண் துணிச்சலாக நடித்துள்ளார்.. ஆனால், அதை கொண்டாடுவதை விட்டுவிட்டு, தியேட்டரை விட்டு வெளியேறுகிறார்களே? படம் முழுக்க பார்க்காமல், பாலியல் படமாகவும், வக்கிர படமாகவும் நினைத்து, அந்த காட்சியை மட்டுமே பார்த்துவிட்டு செல்கிறார்களே? என்று மனம் நொந்து கொண்டார்.
அதற்கு பிறகு அதே படம் வெளிநாடுகளில ரிலீஸ் ஆனது.. அதை வெளிநாட்டினர் கொண்டாடினார்கள். வெறும் மூன்றரை கோடியில் எடுக்கப்பட்ட அந்த படம், 24 கோடி ரூபாய் வசூல் செய்தது. உலகத்திலுள்ள அத்தனை அவார்டுகளையும் அந்த படம் வென்றது. முக்கியமாக ஒரு பெண்மணியை உலகுக்கு காட்டியது அந்த படம்..
அதுதான் 1994-ல் வெளிவந்த "பண்டிட் குயின்".. பூலான்தேவி கேரக்டரில சீமா பிஸ்வாஸ் அந்த படத்தில் நடித்திருந்தார்.. பின்தங்கப்பட்ட ஒரு கிராமத்தில் உயர்ஜாதியினர் சேர்ந்து, அந்த பெண்ணை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்வார்கள். பிறகு, அந்த பெண்ணை பொதுவெளியில் உள்ள கிணற்றடியில் நிர்வாணமாக நிற்க வைத்து, மொட்டை அடித்து, அந்த பெண்ணின் தலையில் வரிசையாக வந்து தண்ணீர் ஊற்றுவார்கள்.
நான் ஒரு பெண் என்பதால், இவ்வளவு சாதாரணமாக நினைத்துவிட்டாயா?" என்ற ஆவேசத்தில் அந்த பெண் மிகப்பெரிய சம்பல் கொள்ளைக்காரியாக மாறிவிடுவார்..
இது நிஜத்தில் நடந்த சம்பவமாகும்.. இதை உலகறிய செய்தார் அந்த படத்தின் டைரக்டர் சேகர் கபூர்.. இந்த காட்சியில் நடிப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். ஆனால், பல நடிகைகள் நடிக்க மாட்டேன் என்றார்கள். உண்மை சம்பவத்தை உலகறிய காட்ட வேண்டும் என்ற முனைப்பில் டைரக்டர் எடுத்ததால் சீமா பிஸ்வாஸ், துணிந்து நடிக்க வந்தார்.
கொல்கத்தாவில் பிறந்து, அசாமில் படித்து, தேசிய நாடக பள்ளியில் பயிற்சி பெற்றவர் சீமா பிஸ்வாஸ்.. இவ்வளவு துணிச்சலாக நடித்தும்கூட, ஒரு கேவலமான செக்ஸ படம் போல அதை பார்த்துவிட்டு, அந்த காட்சி முடிந்ததுமே பொதுமக்கள் பலரும் வெளியேறியது உச்சக்கட்ட கொடுமை...
கிட்டத்தட்ட இந்த மனநிலைமைதான் சிறகடிக்க ஆசை துணைநடிகையின் ஆபாச வீடியோ நிகழ்வை பார்க்கும்போது எனக்கும் ஏற்படுகிறது. அந்த வீடியோ உண்மையாகவே இருந்தாலும், நீங்கள் யார் அதனுள் நுழைவதற்கு? ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? ஏன் சோசியல் மீடியாக்களில் வைரல் ஆக்குறீங்க?
ஆபாச வீடியோ உண்மை கிடையாது அது AI வீடியோ என ஸ்ருதி விளக்கம் கொடுத்திருந்தார். மேலும் நடந்து கொண்டிருப்பது எல்லாம் லிமிட்டை கடந்து போய்க்கொண்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் செய்தது சரியா தவறா என்ற கோணத்தில் தான் பேசுகிறார்களே தவிர, வீடியோவுக்கு பின்னால் இருக்கும், ஆண் குறித்து ஏன் பேசவில்லை? பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு இருக்கும் அவனை கேள்வி கேட்கவில்லை? என்று இன்ஸ்டாவில் கேள்வி எழுப்பியிருந்தார்.
வீடியோவை பார்த்ததும் பலரும் "அடடா புது வீடியோ, புது கன்டென்ட் கிடைத்து விட்டது" எனக்கூறி ஷேர் செய்தார்களே தவிர, பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழ்க்கை, மனநிலை போன்ற பாதிப்பை எப்படி சந்திக்கும் என 2 நொடிகள் கூட நினைக்கவில்லை. காமவெறி கொண்டு காட்டுத் தீ போல வீடியோவைப் பகிர்ந்தார்கள்.. ஆனால், அது பெண்ணை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பாதிப்பை உண்டாகியிருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நிர்வாணம் என்பது அருவருக்கத்தக்கதா? நிர்வாணம் என்பது குற்றமா? அவரது இன்ஸ்டா பதிவை பார்த்தாலே, அந்த பெண்ணின் மனநிலைமை எவ்வளவு வேதனையில் இருக்கிறது என்பது புரியும்.. ஒரு பெண் என்றால் உங்களுக்கெல்லாம் கிள்ளுக்கீரையா?
பெண்களை மதிக்க வேண்டும். அவர்களை போற்ற வேண்டும். வீடியோவின் உண்மைத்தன்மை தெரியாத நிலையில் அதனை பகிரும் ஆண்கள் அனைவருமே காம பிசாசுகள்தான்.
LAW IS SUPREME (சட்டம் மேலானது)

1 month ago | [YT] | 21