ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே! ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்! ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!🙏🙏🙏🙏
1 year ago | 0
Tiruchendur muthukarthikeyan
முருகா சரணம்
ஐப்பசி மாசம் வளர்பிறை
கந்த சஷ்டியின் முதல் நாள்..
இப் பூமியில் இறவாமல், நானும் உன் இணையடிகளைப் பாடி வாழ்வுற,
என் நெஞ்சிலே சிறந்த
உபதேசச் சொற்களைப் பதித்து அருள்வாயாக..
என்று
அருண மணிமேவு என்ற திருச்செந்தூர் திருப்புகழில்
சொல்வது போல
திருச்செந்தூர் குளக்கரை செந்தில் நாதனுக்கு தாமரை மலர்களால்
மாலை சாத்தப்பட்டு
மிக சிறப்பாக பூஜை செய்து
பிரார்த்தனை செய்ய பட்டது.
இந்த நன்னாளில் அனைவருக்கும் அருள் கிடைக்க செந்தில் ஆண்டவரை வேண்டுவோம்
1 year ago | [YT] | 256