Kadhaippom Vaa

சில காதல்களை நம்மால் வெளிப்படுத்தவே முடியாது...

உதாரணத்துக்கு சொல்றேன்...

தெலுங்கு படத்திலயோ அல்லது தமிழ் படத்திலயோ... மனசாட்சி இல்லாத கொடூரமான வில்லன் உண்மையை வரவழைக்க... ஒரு சின்ன குழந்தையிடம் வீரத்தை காட்டுவான்...  ஆனால் ஹீரோவாகவே இருந்தாலும் அந்த இடத்தில்... பொதுமக்களும்  ஹீரோவும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டிருப்பார்கள்....

நம்முடைய வாழ்க்கையில் நிறைய காதல் அப்படி தான்... பல்ல கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கத்தான் வேணும் 🤣 ஆனாலும் வில்லன்... ஹீரோ உடைய ஒரு சின்ன முக அசைவுல  கண்டுபிடிச்சிடுவான்... அது போல தான் இந்த சமூகமும்...
எவ்வளவுதான் மறைச்சாலும் அந்த காதலை கண்டுபிடித்துவிடும்...

விஜய் டிவி சூப்பர் சிங்கர்ல கார்த்திக் தேவராஜ்ன்னு ஒரு பையன்... செமையா கீபோர்டு வாசிப்பான்.. ரகுமான் குழுவில் கூட நிறைய இடத்துல அந்த பையன நான் பார்த்து இருக்கேன்... செம திறமையான பையன்... ரொம்ப சாப்ட் நேச்சர்...

அந்த சீசன்ல பாட வந்த பொண்ணு தான் மானசி... செம திறமையான பொண்ணு...
முக்கியமாக ரஹ்மான் இசையில்  தனுஷ் நடித்த இந்தி படமான அம்பிகாபதி திரைப்படத்தின் தமிழ் வெர்ஷன் பாடல் அது... கலா ரசிகா பாட்டு... பாட்டு ஆரம்பிக்கிறதுல இருந்து முடிக்கிறவரையும் அவ்வளவு சங்கதிகள் அந்த பாட்டில் இருக்கும்.. அந்தப் பாடலை மிக அசால்ட் ஆக மானசி பாடியிருப்பார்...

  மானசி அந்த சீசனில் ஒரு எபிசோடில்... தனக்கு ஒரு ஆசை இருப்பதாக சொல்லுவார்... அது என்னவென்றால் கீபோர்டு வாசித்துக் கொண்டிருக்கும் கார்த்திக் தேவராஜ் தனக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பார்...
மானசிக்கு கார்த்திக் தேவராஜை ரொம்ப பிடிக்கும் என்பது பிரியங்காவுக்கு நன்கு தெரியும்...
ஏன் அதை காதல் என்று கூட வைத்துக் கொள்ளலாம்...
உலகத்திலேயே காதலுக்கு மட்டும் தான்  எந்த சட்ட திட்டங்களும்  எந்த வரையறைகளும் எந்த எல்லை கோடுகளும் இல்லாதது...

அதே நேரத்தில் எல்லா காதல்களும்... படுக்கையில் தான் முடிய வேண்டும் என்ற அவசியமும் இல்லை... அப்படி நடந்தாலும் அது இருபாலர்களின்   விருப்ப உணர்வு...

ஆனால் நான் முன்பே சொன்னது போல... எவ்வளவுதான் காதல் இருந்தாலும்... அதனை அடக்கி வைத்துக் கொள்ள தான் வேண்டும்... அல்லது மனதிலேயே புடுங்கிக் கொள்ள வேண்டும்... சில காதல்களை வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்தவே முடியாது... அது பெரும் துயரம்... இதயம் படம் முரளி போல புழுங்கி புழுங்கி சாக வேண்டியதுதான்... 😍
சரி இப்ப மேட்டருக்கு வரேன்..

கார்த்திக் தேவராஜ்
அவர் தயங்கி தயங்கி பாட வருவார்...
வேண்டுமென்றே பிரியங்கா சொல்லுவார்... உன் தங்கச்சி  ஏதோ கேட்கணும் என்று  சொல்லுவார்....

அதற்கு உடனே மானசி சட்டென fan பதில் கொடுப்பார்...
அந்த பதில் ஒன்று போதுமானது...
ஆனால் இந்த சமூகம்.... ரொம்ப பிடித்தவர்களை தங்கச்சி என்று சொல்ல வைத்து அழகு பார்க்கும்...
அனிமல் படத்தில்... ரேஷ்மிகா அண்ணனிடம்... உன்னோட பிரெண்ட்ஸ் இத்தனை பேர் இருக்கும்போது... உங்க சித்தி  என்ன மட்டும்... ஏன் உன் தங்கச்சிய அண்ணன்னு கூப்பிட சொன்னாங்க?
ஏன்னா... என்னோட கண்ணிலேயும் உன் தங்கச்சி கண்ணிலும் ஏதோ ஒரு விஷயத்தை உங்க சித்தி பார்த்து இருக்காங்க என்று சொல்லுவார்... அது போல தான் அந்த நிகழ்ச்சியில் பிரியங்காவும்...

அதன்பிறகு... கார்த்திக் தேவராஜ்... உயிரும் நீயே உடலும் நீயே பாடலை பாடி அசத்துவார்... உண்மையில் அவர் அப்படி பாடுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.... உன்னிகிருஷ்ணன் ஓடிவந்து கட்டிப்பிடிப்பார்...

அதன் பிறகு... சில மாதங்கள் கழித்து ஏதோ ஒரு பேட்டியில்...  மானசி கார்த்திக் தேவராஜ் அண்ணா  அண்ணா அண்ணா என்று சொல்லி பேட்டி கொடுத்ததாக ஞாபகம்...

மானசி பதறியது... ஒரு நல்ல தோழனாக இருக்கலாமே என்பதுதான்... இன்னும் சொல்லப் போனால்... நிறைய சித்திகளும் அத்தைகளும் பெரியம்மாக்களும் இருந்திருக்கலாம்  🤣🤣

நான் கட்டுரையின் முதல் பாராவில் சொன்னது போல
எவ்வளவு காதல் இருந்தாலும்... சில காதல்களை நம்மால் வெளிப்படுத்தவே முடியாது... ஆனால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும்...

காதல் நம் கண்ணெதிரிலே... தெலுங்கு பட வில்லன் போல...  அடித்து உதைத்து தொம்சம் செய்து கொண்டிருக்கும்... நாம் பல்லைக் கடித்துக் கொண்டு  உள்ளே புழுங்கிக்கொண்டு  பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் 😂

இந்த காதல் பற்றி எங்கள் கதைப்போமா சேனலில் ஏதோ ஒரு எபிசோடில் பேசியதாக ஞாபகம்...
காலையில்.. இந்த வீடியோ எதைச்சையாக யூடியூபில் கண்ணில் பட்டது... அதை பின்னூட்டத்தில் தருகிறேன்...

https://youtu.be/a3qbz07yFao?si=_e8U8...

https://www.youtube.com/watch?v=tgsrx...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
30-08-2024
#supersingar #love #animalmovieranbir #relationship

1 year ago | [YT] | 2