உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; ஏசாயா 61 : 7 என்ற வாசகத்தை ஆட்டோ ஒன்றில் பின்னால் கண்டேன். இதன் மொழியழகு என்னைக் கவர்ந்தது. சற்றே காதல் வாசகமாகவும் தோன்றியது. வெட்கப்படும் பெண்ணுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்றெல்லாம் கற்பனை செய்தேன். ஆனால், இதன் பொருளே வேறு என்பது பிறகுதான் தெரிந்தது.
Instead of your shame you will receive a double portion [NIV] Isaiah 61:7 என்ற ஆங்கில வாசகத்தைத்தான் இப்படிப் பெயர்த்திருக்கிறார்கள். Isaiah 61:7 (NIV) speaks of God replacing shame and disgrace with a double portion of honor and joy for His people என்பது இதன் ஆங்கில விளக்கம்.
தலைக்குனிவுக்கும் அவமானத்துக்கும் பதிலாக இருமடங்கு பெருமையும் மகிழ்ச்சியும் பெறுவாய் என இதைப் பெயர்த்திருந்தால் உரிய கருத்து, முழுமையாகச் சென்று சேர்ந்திருக்கும். அவமானத்துக்குப் பதிலாக இருமடங்கு வெகுமானம் பெறுவாய் என்று கூடப் பெயர்த்திருக்கலாம். மொழியழகைக் காட்டிலும் பொருள் தெளிவாகப் புலப்பட வேண்டும். இதுவே முதன்மை இலக்காக இருக்க வேண்டும்.
AnnaKannan K

#translation #tamil #bible #isaiah #Christ #Christian
1 month ago | [YT] | 2