Jackie Cinemas

ஆங்கர் #அர்ச்சனா
சில நேரங்களில் ஓவர் டூ செய்து விடுவார்...
தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும்போது இது நிறைய அங்கர்களுக்கு நிகழ்ந்து விடும்... பிரியங்கா,சிவகார்த்திகேயன், மாகாபா,கோபிநாத், யாரும் இதில் விதி விலக்கல்ல.

அதே நேரத்தில் அர்ச்சனா பிரியங்கா இரண்டு பேருமே.. இசை நிகழ்ச்சிகளில் சாதாரண பின்புலத்திலிருந்து வரும் குழந்தைகளுக்கோ மற்றவர்களுக்கோ பெரிய பெரிய இடங்களில் வாய்ப்பு தேடி கொடுப்பதில் இந்த இரண்டு பேரையும் அடித்துக் கொள்ள முடியாது...

பிக் பாஸில் கொஞ்சம் பெயரை கெடுத்துக் கொண்டாலும் கூட, ஆங்கர் செய்வதில் அவரை யாரும் அடித்துக் கொள்ள முடியாது...

மெட்ராஸ் மேட்நீ படம் பார்த்தேன்... ஒரு சில சீன்கள்தான் ஆனாலும் நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.

திருமண வாழ்க்கையில் தோற்றுப்போன ஒரு கேரக்டர்... வாவ்... என்ன மாதிரியான ஒரு நடிப்பு?

திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கப் போகும் தன் பணியாளருக்கு கொடுக்கும் அட்வைஸ்.

நிச்சயம் கல்யாணம் பண்ணிக்க தான் வேணுமா என்ற அந்த கேள்வி..

அந்தப் பெண் எனக்கு என்ன அட்வைஸ் பண்ணுவீங்க என்று கேட்கும் போது...
தன் கடந்த கால வாழ்க்கையை நினைத்துக் கொண்டே....

உன்னுடைய கேரியர்ல கவனம் செலுத்து...
நல்ல பையன் கிடைக்கிற வரை வெயிட் பண்ணு. நம்மளால வேற என்ன செய்ய முடியும்?

வேலை செய்யற பொண்ணுங்க வாழ்க்கையில நிறைய கஷ்டம் இருக்கு.

நம்மள பெத்தவங்கள பாத்துக்கணும், நமக்கு வயசாகறதுக்குள்ள நம்ம பெத்து போடணும், நேச்சுரல் நமக்கு டைம் கொடுக்கிறது இல்ல,
35 வயசுற்கு அப்புறம் குழந்தை பெத்துக்கிறது ரொம்பவும் கஷ்டம்.
ஆனால் நீ உன்ன நெனச்சு பெருமைப்படணும் என்று சொல்லிவிட்டு...

தீபிகா கேரக்டர், அர்ச்சனாவை பார்த்து ஒரு கேள்வி கேட்கும்..
தப்பா நினைச்சுக்கலன்னா. ஒரு கேள்வி உங்கள நான் கேட்கிறேன்... நீங்க ஏன் தனியா இருக்கீங்க?

அர்ச்சனா கடந்த கால நினைவுகளை சற்று அசைபோட்டப்படி... தைரியத்தை வரை வைத்துக் கொண்டு

"I am devorced ராஜாத்தி" என்று
சொல்லும் அந்த இடமும்..
நீங்க இப்ப ஹாப்பியா இருக்கீங்களா அப்படின்னு கேட்கும்போது...
நான் சந்தோஷமாக இருக்கிறேன்... பாரு சனிக்கிழமை கூட ஆபீஸ்ல இருக்கேன் உன்னுடைய போரிங் ஸ்டோரியை கேட்டுட்டு இருக்கேன் என்று சொல்லி தன் வாழ்வின் பெருமையை விளக்கும் இடத்தில் அர்ச்சனாவின் நடிப்பு வாவ் ❤️

அவருக்கேற்ற கனமான பாத்திரங்களை எதிர்காலத்தில் தமிழ் திரை உலகம் தொடர்ந்து வழங்கிட வேண்டும்... நடிப்பில் நன்றாக மிளிர்வார் என்பதில் ஐயமில்லை 😍

- ஜாக்கிசேகர்

#Archana #MadrasMatinee #tamilcinema #saregamapa #tamilartist

4 months ago | [YT] | 58



@J_G_2025_1

Big boss poyi yaarume uruptadhu ila.

4 months ago | 0

@srrtsme5627

திமிர் பிடித்த மராத்தி காரி இவ. தமிழ்நாடு தொறந்த வீடு❗ எவன் வேணும்னாலும் வந்து நாட்டாமை பண்ணுவான்🤦

4 months ago (edited) | 0

@sakkanans5648

இவ்வளவு சரியான நாள் வாய்ப்பு வழங்காதது திரையுலகினர் செய்த தவறுதான்

4 months ago | 0

@VinothM-x5r

❤.. Good

4 months ago | 1  

@eshwariramesh5105

Good 👍

4 months ago | 0  

@sumithrak548

Super sir

4 months ago | 0  

@Lifeinsecs

🎉🎉

4 months ago | 0  

@prescillamourougane4051

Hi sudha ma and jacky ❤❤

4 months ago | 0