Mythology World Tamil

சரஸ்வதி நதி
ஒரு சமயம் முனிவர்கள் ஒன்றுகூடி, லோமஹர்ஷன முனிவரிடம் சென்று குருக்ஷேத்திரத்தில் பாயும் சரஸ்வதி நதியின் தோற்றத்தைத் தங்களுக்குத் தெரிவிக்கும்படிக் கேட்டனர். அதற்கு லோமகர்ஷன், ‘சரஸ்வதி நதி’ ‘பாகட் (அத்தி மரம்)’ மரத்திலிருந்து உற்பத்தி யாகின்றது. அது பல மலைகளைக் கடந்து இறுதியில் துவைதவன மலையை அடைகிறது!’ என்று எடுத்துரைத்தார். இந்த நதியைப் பற்றி மார்க்கண்டேயர், ‘நீ ஓம்கார பிரணவ மந்திரம், பிரம்மா தோன்றி உன்னிடமிருந்து பல வடிவங்களை உருவாக்கினார். மூன்று வேதங்களும், மூன்று கடல்களும், கல்வியும் சூரியன் சந்திரன் போன்ற பிரபஞ்ச பொருள்களும் இதிலிருந்தே தோன்றின!’ என்று மார்க்கண்டேய முனிவர் சரஸ்வதியைப் பாராட்டினார். மார்க்கண்டேயர் துவைதவனத்தில் உள்ள சரஸ்வதி நதியில் நீராடித் துதித்தார். சரஸ்வதி நதி அவரது பக்தியைக் கண்டு மகிழ்ந்து போனாள். மகாவிஷ்ணுவின் நாவிலிருந்து பெருகிய சரஸ்வதி நதி, மார்க்கண்டேயரின் பக்தியினால் மகிழ்ந்து, ‘தான், அவர் அழைக்கும் இடமெல்லாம் வருவதாகக் கூறினாள்.’ மார்க்கண்டேயர் சரஸ்வதி நதியை குருக்ஷேத்திரம் அழைத்து வந்தார். அவளுடைய அருளால் பிரம்மசரஸ், நாகரதம் போன்ற பல தீர்த்தங்கள் குருக்ஷேத்திரத்தில் உண்டானது. இத்தகைய சிறப்பு வாய்ந்த குருக்ஷேத்திரத்திற்குப் போக நினைப்பவர்களுக்கே நற்கதி உண்டாகும். அங்கு வசிப்பவர்கள் பிரம்மஞானத்தைப் பெறுவார்கள்.

2 years ago | [YT] | 0