அரசுப் பள்ளி மாணவி, ஜப்பானிய மொழியில் பேசிவிட்டார். அரசுப் பள்ளி மாணவர், ஐஐடியில் சேர்ந்துவிட்டார். பழங்குடியின மாணவி, வழக்குரைஞர் ஆகிவிட்டார்... என்பன போன்ற செய்திகளில் ஓர் அடிப்படைச் சிக்கல் இருக்கிறது.
ஏதோ இவர்கள் கீழ்நிலையில் இருப்பது போலவும் அதிலிருந்து ஏறி வந்து, மேல்நிலைக்கு வந்துவிட்டது போலவும் ஒரு தொனி இவற்றில் இருக்கிறது. அரசுப் பள்ளி என்றால் மதிப்புக் குறைந்தது போன்ற ஒரு கண்ணோட்டத்தை அரசினரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து தங்களை அறியாமலே வலுப்படுத்துகின்றனர். அரசுப் பள்ளி, அரசுப் பள்ளி என அழுத்திச் சொல்வதன் மூலம், கழிவிரக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். தனியார் பள்ளி மாணவர்கள் யாரும் இவ்வாறு சொல்வதில்லை. தங்கள் பள்ளியின் பெயரை மட்டுமே சொல்கின்றனர். அதுவும், தன்னம்பிக்கையுடன், தலை நிமிர்ந்து சொல்கின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர் எனச் சொல்வதால், மாணவருக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அந்த மாணவரின் உழைப்பில், ஆசிரியர்களும் அதிகாரிகளும் தமிழக அரசினரும் விளம்பரம் தேட முயல்கிறார்கள். மாணவருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி சார்ந்த சேவைகள், மக்கள் வரிப்பணத்திலிருந்தே செய்யப்படுகின்றன. ஒரு வகையில் அது கடமை. அதை முறையாக, ஒழுங்காக, தரமாகச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும். சிறப்பாகப் படித்த மாணவர்களின் பெருமையில் அரசு உரிமை கோருகிறது என்றால், சரியாகப் படிக்காத மாணவர்களின் தரத்திற்கும் அரசே பொறுப்பு ஏற்க வேண்டும்.
AnnaKannan K

#kalvi #education #tamilnadu
2 months ago | [YT] | 5