Narpavi story channel

நாகபஞ்சமி கருடபஞ்சமி வாழ்த்துக்கள்

நாக பஞ்சமி அல்லது கருட பஞ்சமி இன்று 29ம் தேதி செவ்வாய் கிழமை வருகிறது. ஆடி செவ்வாய் கிழமையில் வருவதால் இந்த நாளில் அம்பிகையை வழிபடுவதுடன் நாகங்களையும் வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களை தரும். இந்த நாளில் கருடாழ்வாரை வழிபடலாம். இது கருடன், நாகங்கள் இருவருக்கும் உரிய நாள் என்பதால் இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.

நாக பஞ்சமி அன்று வீட்டில் செய்யும் சில எளிய பூஜைகள் எப்போதும் நமக்கு கவசம் போல் இருந்து பாதுகாக்கும். அதே போல் இந்த நாளில் நாம் இருக்கும் விரதத்தின் பலன் நம்முடைய தாய், உடன் பிறந்தவர்கள் ஆகியோரையும் காக்கும். ஆபத்துக்களை விலக செய்யும். குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும்.

‪@Narpavistory‬

2 months ago (edited) | [YT] | 37