ஸ்ரீ சண்முகா வாஸ்து ஜோதிடம்

*நாளை*(15-5-2025)
*வியாழக்கிழமை விசுவாசு* *வைகாசி 1 திரிதியை திதியுடன்* *கூடிய வாழ்வை வளமாக்கும்* *விஷ்ணுபதி புண்ணிய* *காலத்தை தவற விட்டு* *விடாதீர்கள்*!

உங்கள் வாழ்க்கையில்
கடுமையான கஷ்டமா? கொடுமையான வாழ்க்கையா? பெரும் நஷ்டம் கடனா?

நாளைய விஷ்ணுபதி
புண்ய காலத்தில் மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும்
வழிபடுங்கள்

விஷ்ணுபதி புண்ய காலமானது வைகாசி, ஆவணி, கார்த்திகை,
மாசி மாதங்களில் முதல் தேதியில் வரும்.

பன்னிரண்டு தமிழ் மாதங்களில் மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை ஆகியவை மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதங்களாக கருதப்படுகிறது.

விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ய காலம் எனப்படும்

ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர கூடியது இந்த விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும்.

மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள்வருவது உண்டு.

விஷ்ணுவுக்குரிய மாதங்களான மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை மாதங்கள் பிறக்கும் தினத்தில் அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை இந்த விஷ்ணுபதி புண்ய காலநேரம் அமைகிகிறது.

முழுமையாக 9 மணி நேரம் இந்த விஷ்ணுபதி புண்யகாலம் அமைந்து இருக்கும்.

நாளை(15-5-2025) வைகாசி மாதம் பிறக்கும் நாளில் அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை முழுமையாக 9 மணி நேரம்
இந்த விஷ்ணுபதி புண்ய கால
நேரம் அமைகிகிறது.

இந்த விஷ்ணுபதி புண்ய காலத்தில் நாம் மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும்
மனதார வழிபட்டு நமது
எல்லா தேவைகளையும், வேண்டுதல்களையும்
கூறி பிரார்த்தனை புரியலாம்.

நாளை உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மரத்தை நமஸ்காரம் செய்து
27 உதிரி பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள

ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன்பாக வையுங்கள்.

27 சுற்று முடித்த பின்பு
மீண்டும் கொடிமரத்தை
நமஸ்காரம் செய்யுங்கள்

பின்பு தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு உங்களின் பிராத்தனைகளை மனமுருகி சொல்லுங்கள்

உங்களின் நியாமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த ஆவணி, கார்த்திகை மாசி மாதங்களில் முதல் தேதி வரும் மூன்று விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறியே தீரும்,
நிறைவேறியே தீரும்.

ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த விஷ்ணுபதி புண்ய கால நாள் அமைந்து உள்ளது...

ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனின் பூரண அருளைப் பெற நாளைய விஷ்ணுபதி புண்ய காலத்தை நல்லபடியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

4 months ago | [YT] | 1