DK FOOD JUNCTION

பிரியாணி மாஸ்டர் ஆன கதை;; பாகம் 10
சம்பளம் எவ்வளவு 😯😯😯

2009-10
அந்த
வருட
நிகழ்வு...!

நீங்கள்
வீணாக
பண்ண
வேண்டாம்
அகழ்வு....!! ..........(தோண்டுதல்)

பிரியாணி
சூப்பர்...
ஆஹா
ஓஹோ
என்று
விட்டார்...முதலாளி!

எனவே
சம்பளம்
அள்ளி
தர
போகிறார்..
என
ஆசை
உள் மனதில்...

ஆசை
யாரை விட்டது!??
அது
என் நெஞ்சிலும்
வேரை
விட்டது!!

நேருக்கு
நேர்
நானும்
அவரும்...
மத்தியஸ்தர்
போல
மேனேஜர்....

முதலாளி.....!
முதலாளி
போலவே
பேசினார்....

நல்லா
இருக்கு
தம்பி
பிரியாணி...
சம்பளம்
பற்றி
கவலை
வேண்டாம்...

மாதா...மாதம்
தேதி
1 வருகிறதோ
இல்லையோ
சம்பளம்
வந்து
விடும்...
என்றார்....

எல்லா
முதலாளியை
போல
அவர்
இருக்கலாம்...

நான்
அப்படி
இல்லையே!!

சார்
எனக்கு
தினமும்
சம்பளம்....
கொடுத்து விடுங்கள்....
அதுதான்
சரியாக
வரும்..
என்றேன்....

மேனேஜர்..
நீங்க
வேலை
செய்வதை
பார்த்துதான்
அது
எல்லாம்
முடிவு
பண்ண
முடியும்
என்றார்....!!

இன்னைக்கு
என்ன
செய்தேனோ...
அதைத்தான்
தினமும்
செய்வேன்....
என்றேன்....

பரோட்டாவுக்கும்
சேர்த்துதான்
சம்பளம்...
அதை
செய்யவில்லையே
எப்படி
சம்பளம்
தருவது
என்றார்
நக்கலாக....

அதுக்கு
என்ன
சம்பளமோ
அதை
பிடித்துக்கொண்டு
மீதி
எவ்வளவு
தர
முடியும்
என்பதை
சொல்லுங்கள்...?

இல்லையேல்
வழியை
மறைக்காமல்
தள்ளுங்கள்....!!

என்பதை
போல்
பார்த்தேன்..

முதலாளி
முந்தி
கொண்டு
ஏற்கனவே
இருந்த
மாஸ்டர்
மூன்றும்
சேர்த்து
பார்ப்பார்..

300ரூபாய்
கொடுத்தோம்...

நீங்கள்
பரோட்டா
முடியாது
என்பதால்
250ரூபாய்
வாங்கி
கொள்ளுங்கள்..
என்றார்

நான்
பரோட்டா
ஒன்று
இரண்டு
நாளில்
பழகி
கொள்கிறேன்...
அதே
சம்பளம்
கொடுங்கள்
என்றேன்...

சரி
நீங்கள்
செய்தால்
தருகிறோம்...என்றார்.

இன்றைய
சம்பளத்தை
கொடுங்கள்...
என்றேன்....

நீங்கள்
நாளை
வரவில்லை
என்றால்...
என்றார்
மேனேஜர்...

உங்க
காசு
நான்
வாங்கிட்டு
போகவில்லை..
இது
நான்
செய்த
வேலையின்
கூலி.....

நாளைக்கு
வந்தா
கூலி
குடுக்க
போறீங்க...
என்றேன்..

இளம்
கன்று...
பயமறியாது...
என
இருவரும்
பார்த்து
கொண்டு
250ரூபாய்
கொடுத்தனர்....

மதியம்
2 மணி...
வேலை
தினமும்
முடியும்...
கல்லாவிற்கு
நான்
வந்தாலே
சம்பளம்
தயாராய்
இருக்கும்...

காரணம்
நான்
பேசியது
அல்ல.

என்
பிரியாணி
பேசியது....

8 கிலோ
பிரியாணி..
மெது
மெதுவாக....
9...10..
என உயர்ந்தது...

ஊரும்
பேரும்
ஒன்றாய்
கொண்ட
சீனியர்
கேரளா...

என்னோடு
நட்பு
பாராட்டினார்....

பரோட்டாவும்
சொல்லி
கொடுத்தார்...

ஏற்கனவே
சிறிது
பயிற்சி
இருந்ததால்
இரண்டு
மூன்று
நாளில்
தனியாக
செய்தேன்...

5 கிலோ
மாவு
தான்...
சுட்டு
ஹாட் பாக்ஸில்
வைத்தால்
போதும்....

கேரளா
நன்கு
அனுபவம்
மிக்கவர்...

நான்
புதியவன்...

அனைத்தும்
செய்கிறாய்...
எது
முதல்
எது
கடைசி
என
உனக்கு
தெரியவில்லை...

ஒரு நாள்
காலை
ஆறு
மணிக்கே
வந்து
சொல்லி
தருகிறேன்
என
சொன்னது
மட்டுமல்ல
அப்படியே
செய்தார்.....

செய்யாமல்
இருக்க
அவர்
என்ன
அரசியல்வாதியா!?

இப்படி
நான்
அவரிடம்
நிறைய
நுணுக்கங்கள்
கற்றேன்....

எளிமையாக
செய்ய
பயிற்சி
பெற்றேன்.....

இருவரும்
இருந்தோம்
நகையும்
சதையுமாக....

அங்கே
அனைவருக்கும்
ஆச்சரியம்
இந்த
கடையில்
வந்த
மாஸ்டர்
எல்லாம்
இந்தாளு
கூட
வேலை
செய்ய
முடியாது
என
போவாங்க....

நீங்க
மட்டும்
தான்
விட்டு
கொடுக்காம
பேசுறீங்க
என்பர்.....

அவர்
நமக்கு
தொழில்
சொல்லி
தந்தவர்
குரு
போன்றவர்....

எதாச்சும்
சொன்னா
சொல்லிட்டு
போகட்டும்
விடுங்க
என்பேன்.....

இப்படியாக
நாட்கள்
ஓடின
வருடம்
ஒன்று
ஆனது...

ஒரு
நாள்
அது
நல்ல நாளா
கெட்ட நாளா
தெரியவில்லை....

கேரளா
ஒன்று
சொல்ல
மேனேஜர்
ஒன்று
சொல்ல....

கடைசியில்
நான்
வேலைக்கே
வர
மாட்டேன்
என
கேரளா
சொல்ல

நான்
இருக்கும்
தைரியத்தில்
மேனேஜர்
வரலைன்னா
போங்க
என
மாஸ்டரிடம்
கூற....

எனக்கு
ஒரே
குழப்பம்
சற்று
நேரத்தில்
சட்டசபையில்
கேப்டன்
நாக்கை
துருத்தியதை
போல்
எல்லாம்
கை
மீறி
போய்விட்டது...!

இதை
நாம்
சரி
செய்ய
வேண்டும்....
என
நான்
ஒரு
முடிவு
செய்தேன்....
அது
கேரளாவுக்கு
கூட
தெரியாது....

வேலை
முடித்து...
கல்லாவிற்கு
சென்றேன்
சம்பளம்
பெற்றேன்
நாளை
முதல்
நான்
வேலைக்கு
வர
மாட்டேன்
என்றேன்....

மேனேஜர்
முகத்தில்

ஆடவில்லை...

ஏன்
ஏன்
என்றார்....?

தப்போ
சரியோ
அது
எல்லாம்
வேண்டாம்....
கேரளா
இருந்தால்
நான்
வருவேன்....
இல்லை
என்றால்
நான்
வரமாட்டேன்
என்றேன்...

என்ன?
ப்ளாக் மெயில்
பண்றீங்களா!!?
என்றார்
மேனேஜர்...

எப்படி
வேணும்னாலும்
வச்சிக்கோங்க
இதுதான்
என்
முடிவு
என்றேன்...

சொல்லிவிட்டு
நான்
நிற்கவில்லை
வீட்டுக்கு
வந்து
விட்டேன்....

வீட்டிற்கு
போவதற்கு
முன்
என்
மாமாவுக்கு
போன்
வந்து விட்டது..
சமாதான
தூது...

கேரளா
இருந்தால்
என்ன!?
இல்லை
என்றால்
என்ன;!?

நீ
செய்ய
வேண்டியது
தானே!??
என
மாமா
கேட்க...

நான்
இருப்பதால்
ஈஸியாக
அவரை
வேணானு
சொல்லிட்டாங்க

நாளைக்கு
இன்னும்
ஒருத்தன்
இருந்தா...
என்னையும்
இப்படித்தான்
செய்வாங்க...

வேலைக்காரங்க
அப்படினா
கிள்ளுக்
கீரையா
என்று
மாமாவிடம்
கேட்க...

அவர்
பதிலே
பேசவில்லை...

முதலாளியிடம்
இவரே
போன்
செய்து...
நான்
சொன்னதை
சொல்ல‌..

அவர்
மீண்டும்
முதலாளியாக
பேசினார்..
ஆசை
வலையை
வீசினார்.....!

தினம் 100
சம்பளம்
உயர்த்தி
கூட
வேண்டுமானாலும்
தருகிறேன்
உங்க
மச்சானை
வர
சொல்லுங்க
ஒரு
வருஷமா
நல்லா
வேலை
பாத்துட்டு....

8 கிலோ
பிரியாணி
13 கிலோ
ஓடுது...

இப்போ
இப்படி
பண்ணா
எப்படி
என
ஏகப்பட்ட
சமாதான
முயற்சி....

நானோ
ஒரே
பிடிவாதம்
கேரளாவோ
எனக்கு
போன்
செய்து
நீ
போ...
பரவாயில்லை..

எனக்கு
வேலை
ஈஸியாக
கிடைக்கும் ‌..

நீ
செய்
போ...
என்றார்...
முடிவாக
நான்
மறுத்துவிட்டேன்...

ஆம்...

மீண்டும்
ஜெயவேல்
சார்
ஆபிஸிக்கு
போய்
விட்டேன்...‌

9000
சம்பளம்
3000
ஆக
மாறியது....

எழுத
எழுதத் தான்...
இவ்வளவு
ஏற்ற
இறக்கமா
என்
வாழ்வில்
என
எனக்கே
ஆச்சர்யம் ....

அடுத்து எந்த ஊர் ???எனன வேலை !!? என்ன சம்பளம்....!!?
நாளை பார்ப்போமா!!??🙏🙏

நீங்கள்
கேட்டதால்
இரண்டு
பாகம்
இன்றே
எழுதி
இன்றே
வெளியிட்டு
விட்டேன்...

சூடாக
ருசியுங்கள்‌....🥰🥰🙏

4 weeks ago | [YT] | 15