கிராமத்தில் ஒரு குடும்பம் நொடித்துப் போனால், மற்றவர்கள் ஆளுக்குச் சிறிது பங்களித்து, அந்தக் குடும்பம் மீண்டு வர உதவுவார்கள். இதே உணர்வை இப்போது மாநில அளவில், தேசிய அளவில் காண்கிறேன்.
கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பங்கள் மீண்டு வர, தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்குகிறது. விஜய் தலா ரூ.20 லட்சம் நிதி அளிப்பதாக அறிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது (தலா ரூ.2.44 லட்சம்).
இறந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். பா.ஜ.க. தலா ரூ.1 லட்சம் நிதி அளிப்பதாக அறிவித்துள்ளது. எஸ்.ஆர்.எம். நிறுவனம், அந்தக் குடும்பங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்துள்ளது.
உயிரை மீட்க முடியாது எனினும் இந்த உதவிகள், அந்தக் குடும்பங்களுக்குப் பெரும் ஆதரவாக இருக்கும். இவற்றை வைப்புநிதியாக வைத்து, மாதம்தோறும் கூடுதல் வட்டி கிடைக்கும் வகையில் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். இதற்காக ஒரு சிறப்புத் திட்டத்தைத் தொடங்குமாறு மத்திய / மாநில அரசுகளை வேண்டுகிறேன்.
AnnaKannan K

#karur #stampede #help
2 months ago (edited) | [YT] | 1