sivaya nama

கேது எப்போது மரணத்தை தருவார்

ஆண் ஜாதகம் 2004ல் பிறந்தார். தற்போது கேது தசா புதன் புக்தி 2025 நவம்பர் வரை உள்ளது.
கடந்த மாதம் இவர் விபத்தில் இறந்து விட்டார் அதுவும் லக்னாதிபதி புக்தி யில் ஏன் எதனால் என்று விளக்கம் தருகிறேன்.


பதில் :
கன்னி லக்னம் கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம். இந்த ஜாதகருக்கு பிறக்கும் போதே புதன் தசா லக்னாதிபதி தசா அடுத்து கேது தசா நடந்து கொண்டிருக்கிறது.

ஒருவருக்கு மரணம் எப்போது ஏற்படும் என்பதை கணிக்கும் முன்பு ஆயுள் பலம் பற்றி பார்ப்போம்.

லக்னம் லக்னாதிபதி ராசி ராசி அதிபதி சனி சுக்கிரன் சந்திரன் இவர்கள் வலுபெற்று 8 ஆம் இடம் நல்ல அமைப்பில் இருக்கும் போது நீண்ட ஆயுள் எனும் 90 வயது தரும்.

மத்திம ஆயுள் லக்னம் லக்னாதிபதி ராசி ராசி அதிபதி வலுத்து 8 ஆம் இடம் மற்றும் சனி பலம் குறைந்து இருப்பார்கள்.

அற்ப ஆயுள் லக்னம் லக்னாதிபதி ராசி ராசி அதிபதி அல்லது லக்னம் லக்னாதிபதி இரண்டில் என்று பலம் பெற்று மற்றொன்று பலம் இழந்த அமைப்பில் அற்ப ஆயுள் எனும் 30 வயதிற்குள் மரணம் வரும்.

மரணம் எப்போது வரும் ஒரு ஜாதகத்தில் 2,7 ஆம் இடங்கள் பொதுவான மாரக ஸ்தானம் ஏன் என்றால் 8 ஆம் இடம் ஆயுள் ஸ்தானம் 8 க்கு 8 ஆம் இடமாக 3 ஆம் இடம் வரும் அதனால் 3,8 ஆம் இடங்கள் ஆயுள் ஸ்தானம். இந்த 3 ஆம் 8 ஆம் வீட்டிற்கு விரையஸ்தானமாக 2,7 ஆம் இடங்கள் வரும் அதனால் இதை மாரக ஸ்தானம் என கூறுகிறோம்.

அதேபோல் கன்னி லகனதிற்கு 7 ஆம் இடம் பாதக ஸ்தானம் மேலும் 2 ஆம் இடம் பொதுவான மாரக ஸ்தானம் அங்கே கேது அமர்ந்து கேது தசா நடப்பில் உள்ளது. அடுத்து லக்னம் லக்னாதிபதி பலம் இழந்து விட்டது. செவ்வாய் லக்னத்தை பார்க்க புதனை சனி சூரியன் தொடர்பு கொண்டு பலம் இழந்து விட்டார். ஆனால் சந்திரனை சுக்கிரன் பார்க்க ராசி மற்றும் ராசி அதிபதி சந்திரன் பலம் பெற்றதால் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பாபர்களால் பாதிக்கப்பட்டு இது போன்ற சாதகமற்ற புக்தி நடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

கேது தசா கடைசி புக்தியில் புதன் 4 ல் அமர்ந்து இருப்பதால் சூரியன் சனி ( 6,12 அதிபதி தொடர்பு) வாகன விபத்தில் மரணமடைந்தார். மேலும் குரு பார்வைக்கும் வலிமை இல்லை

மேலும் மரணத்தை முழுமையாக ஒரு ஜோதிடரால் கணிக்க முடியாது. அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த சூட்சுமம். ஆனால் இந்த காலகட்டத்தில் உங்கள் மனம் உடல் பாதிக்கப்பட்டும் கவனமாக இருங்கள் என நிச்சயமாக கணிக்க முடியும்.

நன்றி

இப்படிக்கு உங்கள்
ஓம் பிரகாஷ் ( பாரம்பரிய ஜோதிடன்)
#jothidamtamil #vedicastrology #tamildevotional #spiritualtamil #omprakashastrology7

5 days ago | [YT] | 18



@sudalairajan-s

எனக்கு இது நடந்தது உண்மை கேது திசை புதன் புத்தி இப்போது கடைசி புத்தி 80 நாட்கள் உள்ளது முடிவடைய.. 2018....2025 டிசம்பர் 22 ம் தேதி முடிவு.... அசிங்கம் அவமானம் வீழ்ச்சி பணம் மிகவும் பெரிய அளவில் இழப்பு ஆக்ஸிடென்ட் மறுபிறவி எடுத்தேன் இப்போது கெட்ட பெயர் கிடைத்தது நிறைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் தொழில் முடக்கம் இப்போது இன்னும் 80 நாட்கள் எப்படி கழியும் என்ற நம்பிக்கை உள்ளது... நிறைய தடை தாமதங்கள் சந்தித்து முன்னே வந்துஉள்ளேன் இனி‌ஜெயிக்க வேண்டும் என்ற‌ வைராக்கியம் மட்டுமே உள்ளது.. நான் மீனம் உத்திராட்டதி மேச லக்னம்... பிறக்கும் போது சனி திசை.. புதன் திசை இப்போது கேது திசை முடிவு அடுத்து திசை சுக்கிர திசை வெற்றி பயணம் செய்வேன் ❤

3 days ago | 0