டாக்கீஸ்திரை

நம் இதயதெய்வத்தின் மாபெரும் வெற்றி படைப்பு அடிமைப்பெண் படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னையில் ஒரு அரங்கில் நடை பெற்றது.....

அது எது என்பதில் தெளிவு இல்லை.

படம் ஆரம்பிக்கும் முன் தலைவர் அவர்கள் இடம் பேசியதின் சுருக்கம்....

இந்த படத்தில் குறைகள் இருக்கும் என்றால் நானே பொறுப்பு...இந்த படத்தின் ஒவ்வொரு வினாடியும் எனது முடிவின் படி எடுக்கப்பட்டது.

அனைத்து நடிகர் நடிகையர் பட அனைத்து குழுவினர் முழு ஒத்துழைப்பு எனக்கு நல்கினர். அவர்கள் அனைவருக்கும் என் தலை தாழ்ந்த நன்றிகள்..

பல படங்களில் நான் நடித்து இருந்தாலும் என் எண்ணம் ஏற்ப படம் எடுக்க வேண்டும் எனக்கு ஆசை..
அதில் சமூகம் சார்ந்த கருத்துகள் இருக்கவேண்டும் என்பதும் என் பேரவா.

ஒரு ஆங்கில படத்தில் அந்த ஹீரோ 3 சிங்கங்கள் உடன் சண்டை போடும் காட்சி பார்த்தேன்...நானும் ஏன் இப்படி முயற்சி செய்யக்கூடாது என்று நினைத்தேன்...

அதற்காகவே அழகான பிடரி மயிர் கொண்ட ஒரு ஆண் சிங்கம் ஒரு பெண் சிங்கம் வாங்கி வீட்டில் வளர்த்தேன்.

நாடோடிமன்னன் படத்தில் அந்த சிங்கங்கள் உடன் நடிக்கவே முதலில் திட்டம்... சண்டை காட்சி உண்மையாக இருக்க வேண்டும் பயிற்சி மேற்கொண்ட போது அந்த ஆண் சிங்கம் இறந்து போக எனது எண்ணம் வீண் ஆனது

நாடோடிமன்னன் படத்தின் இறுதி காட்சி அமைப்பை மாற்றினேன்.
ஆனால் அடிமைப்பெண் இந்த படத்தில் உண்மையில் மீதி இருந்த அந்த சிங்கம் உடன் நான் மோதும் காட்சி உண்மையில் அந்த சிங்கம் எனக்கு கொடுத்த வரமே...

இந்த சண்டை காட்சியை நான் எடுக்க போகிறேன் என்று தெரிந்து கொண்ட நல்லவர் சிலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மிருக பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் வந்து சிங்கத்தை பார்த்து பின் அறிக்கையில் காட்டை விட என் வீட்டில் நன்றாக சிங்கம் இருப்பதாக அந்த நல்லவர்களுக்கு சான்றிதழ் கொடுக்க.

என்னையே பணயம் வைத்து அந்த காட்சியில் நடித்து உள்ளேன்..
அமரர் அண்ணா அவர்கள் இந்த படத்தை பார்க்க இப்போது இல்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு.

அந்த குறையை போக்க படத்தின் ஆரம்ப காட்சியில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தத்துவம் கொண்ட சிலையை காட்டி இருக்கிறேன்..

இது என் 2 ஆம் மயில் கல்...ஆண்டுக்கு ஒரு சொந்த படம் எடுக்க ஆசை...ஆனால் மற்றவர்களுக்கும் வாய்ப்பு நான் தரவேண்டும்...

12 ஆண்டுகளுக்கு முன்னால் என் எண்ணத்தில் உருவான ஒரு கதை இருக்கு.
அதை தூங்காதே தம்பி தூங்காதே என்ற பெயரில் படம் ஆக்கும் எண்ணம் உள்ளது.

மாணவர்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் பிறர் ஜனநாயக சக்கிரம் சரியாக சுழல வேண்டும் என்பதை கொண்ட கதை அது.
இதற்காக ஒரு ஊரையே நிர்மாணம் செய்து அதில் படம் எடுக்க விரும்பி உள்ளேன்....

இதை கேட்ட உடன் அங்கு இருந்த பத்திரிகை நண்பர்கள் பெரும் கரவொலி எழுப்பி ஆர்பரிக்க...

தலைவர் உரை இனிதே முடிந்து ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் நன்றி கூற.

பட காட்சி பின் நடந்து அதை பார்த்த பத்திரிகை நண்பர்கள் இந்த அடிமைப்பெண் படம் கண்டிப்பாக இந்திய திரை துறையில் ஒரு மயில் கல் என்று பாராட்டி பேசி கலைந்து சென்றனர்....

என்ன உண்மைதானே தலைவர் அன்பு நெஞ்சங்களே.
நன்றி... வாழ்க தலைவர் புகழ்.
நன்றி 🙏🙏🙏

4 days ago | [YT] | 1,048