மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu

மஞ்சள் மேனி போர்த்திய இரு பறவைகள்:
========================================
மஞ்சள் நிறம் உடுத்தியதால் இப்பறவை ஈரோட்டில் இருந்து தான் வந்திருக்கும் என்று எளிதில் யாரும் அடையாளம் கண்டிடமுடியும். அதற்கேற்றாற்போல் அண்மைக்காலத்தில் ஈரோட்டில் #மஞ்சள் #மாங்குயில் பரவலாக அநேகமான இடங்களில் காணமுடிகிறது.

முதல் படம் : ஆண் மாங்குயில்

அதிகச் செறிவான பளிச்சென மிளிரும் மஞ்சள் மேனியைக் கொண்டுள்ளது. இணையைக் கவர்வதற்கு இந்தக் கூடுதல் நிறச்செறிவு உதவுகிறது.

இரண்டாம் படம்: பெண் மாங்குயில்

சற்றே வெளிர் மஞ்சள் நிறம் பொருந்திய, மிளிர்ச்சியற்ற இயல்பான மேனியைக் கொண்டது இந்தப் பெண் மாங்குயில்.

20 hours ago | [YT] | 3