Murugan Kc

நான் 1938 இல் இரண்டு மாதங்கள் சேலத்தில் ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு நாவலை எழுதி முடிப்பது என்று தீர்மானித் தேன். நாற்பத்தைந்தே நாட்களில் 'சர்மாவின் உயில்' நாவலை எழுதி முடித்துவிட்டு, அடுத்த பத்து நாட்களில் அதைத் திரும்பவும் எழுதி விட்டேன். இரண்டாவது தடவை எழுதியது பல அனாவசியமான பகுதிகளை அகற்றவும் நாவலைச் சுருக்கமாக எழுதவும் எனக்குப் பயன்பட்டது. இந்நாவலில் வரும் கதையோ சம்பவங்களோ ஜோசியமோ முக்கியமல்ல. ஆனால் குணச் சித்திரங்கள், மனப்போராட்டம், உலகமே ஒரு குடும்பம் என்கிற சித்தாந்தம் இவற்றில் நம்பிக்கை வைத்து நான் எழுதிய நாவல் 'சர்மாவின் உயில்' எனக்குத் திருப்தி தந்த முதல் நாவல் இது -க. நா. சு.

மேற்கூறியிருப்பது போல் இப்படி இந்த நாவலின் ஆசிரியர் க.நா.சு ஆரம்பத்திலே சொல்லிவிடுவதால் எனக்கு இந்நாவலில் குறை என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. முன்னுரையில் அவர் கூறியிருக்கும் விஷயத்தை நீங்கள் ஒரு disclaimer ஆக மனதில் நிறுத்திக்கொண்டு இந்த நாவலை வாசித்தால் நிச்சயம் இது உங்களுக்கும் பிடித்த ஒரு நாவல் என்கிற பட்டியலில் சேரலாம்.

க. நா. சுப்ரமண்யம் மொழிப்பெயர்ப்பில் இதற்குமுன் ஒருசில மகத்தான படைப்புகளை நான் வாசித்திருந்தாலும் இப்போது தான் முதன்முதலில் அவரது சொந்த நாவலை படிக்கிறேன் எனக்கு இது ஒரு நாவல் என்கிற வடிவில் முழுமையாக இருப்பதாகவே தோன்றுகிறது அப்படித்தான் உணர்கிறேன். வாசிப்பு பிரியர்கள் அனைவருமே இதை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.
சர்மாவின் உயில் - Interesting novel ❤️📚✒️

Check out Murugan k : 👇👇
Follow insta: @murugan_dir for more updates

______புத்தக அறிமுகம்_____

#travel #travelphotography #bookstagram #books #literature #booklover #writing #bookworm #tamil #periyar #ambedkar #karlmarx #cheguevara

3 years ago | [YT] | 2