Chennai Vastu

ஒரு காபியை விட முடியலை, ஸ்வீட்னு எழுதும்போதே, நமநமங்கறது, நாக்கு.

இருபது வயது என்பது அனுபவிக்கும் வயது....
இனிமே அம்மா சமைத்து சாப்பிட முடியாது...
அப்பாவோட தோளை கட்டிக்க முடியாது...
தங்கையோட, ஓடி பிடிச்சு சண்டை போட முடியாது....
சம வயதொத்த நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட முடியாது....

உறவினருடன் சிரித்து பேச முடியாது....
விரும்பியதை சாப்பிட முடியாது....
நினைத்த நேரத்தில், தூங்க முடியாது...
வலி, வேதனையை வெளியில் காட்ட முடியாது.....
அம்மாவை பார்க்கவே முடியாது....
24மணி நேரமும் தெய்வ சிந்தனைதான், லோகச் ஷேமம்தான்....
எப்பேர்ப்பட்ட பிறவி! என்ன ஒரு தீர்மானம்! எப்படிப்பட்ட வைராக்யம், தியாக எண்ணம் இருக்கணும், இந்த குழந்தை வயதில்!
மனமார வணங்கினாலும், இந்த மஹா தியாகத்தை நினைத்து கண்களில் கண்ணீர் வருவதை தடுக்க இயலவில்லை.
பெற்றோர் செய்த பாக்யம், கூடப்பிறந்தவள் கொடுத்து வைத்தவள் என்று சொன்னாலும், இனி யாரை உரிமையாக " டேய் கணேசா, கண்ணா" னும், " டேய் அண்ணா, எப்ப நீ இங்கு வரப்போற" னும் கூப்பிட முடியும், கேட்க முடியும்...
மனம் கவலைப்பட்டாலும், சனாதான தர்மத்திற்க்கான அடுத்த பீடாதிபதி கிடைத்ததில் சந்தோஷமே.

2 days ago | [YT] | 3