2008 ஆம் ஆண்டு இவ்வாறான ஒரு நேரத்தில்தான் இரணைமடுக்குளம் உடைக்கப்படப் போகின்றது என்பதாக பேசிக்கொண்டிருந்தார்கள் கொஞ்ச நாளுக்கு முன்தான் ஊருக்குப் போய் தேங்காய்களை பிடுங்கிக்கொண்டுவந்தோம் அப்போது செஞ்சோலைக்கு முன் புலிகள் பாதுகாப்பு அரண்களை நிறுவியிருந்தார்கள் கொக்காவிலுக்கு ஆர்மி வந்தபோது இரணைமடுவில் பின் தளங்கள் இருந்தது அப்ப கூட கோழி ஆடு மாடுகளை சனம் பிடிக்க வந்து போனது சண்டை தொடங்கிட்டு இனிப்போகாதீங்கோ என புலிகள் தடுக்கும் வரை இரணைமடுக் குளத்துக்கு கீழாகவுள்ள பாதையால்தான் சனம் போய் வந்துகொண்டிருந்தது மக்கள் புலிகளை நம்பினார்கள் எங்கட பொடியல் விடமாட்டானுகள் என்ற நம்பிக்கை வசனம் சனத்தோட வாயில் இருந்து வரும்போது ஒரு உறுதியான நம்பிக்கை தெரியும் ஆனால் புலிகளின் திட்டங்களை காட்டிக்கொடுப்புகள் தகர்த்துக்கொண்டிருந்தன இரணைமடுவை பெரியதொரு தளமாகத்தான் புலிகள் பாதுகாத்துக்கொண்டிருந்தார்கள் ஆர்மி முன்னேறுவதை தடுத்துக்கொண்டிருந்தாலும் பெரும் சண்டையென இறுதியாக நடந்தது கொக்காவிலுக்கும் முருகண்டிக்கும் இடையில்தான் அந்தப் பகுதிக்குள் இராணுவத்தினரின் கவசவாகனங்களும் உயிர்களும் பறிபோயிருந்தது (இப்போது அந்தப் பகுதியில்தான் மிதிவெடி அகற்றுகிறார்கள்) இராணுவம் தடைகளை உடைத்து முன்னேறியவண்ணம் இருந்தது புலிகள் இரணைமடுவுக்கு சக்கைகளைக் கட்டியிருந்தார்கள் கூடவே கரும்புலிகளும் வெடிக்கும் நிலையில் தயாராக இருந்தார்கள் . இரணைமடுவை ஊடறுத்து இராணுவம் முன்னேறி வட்டக்கச்சியை நோக்கி நகர்ந்தது கிளிநொச்சியைக் கைப்பற்றி பன்னங்கண்டியில் பெரும் மோதலோடு இராணுவம் முன்னேறியது மக்கள் தர்மபுரம் விசுவமடு தேராவில் சுதந்திரபுரம் என பின்னுக்கு போய்க்கொண்டே இருந்தார்கள் அப்பதான் குளத்தை உடைத்தால் ஆயிரக்கணக்கான இராணுவம் கொல்லப்படும் கூடவே அவர்களது இராணுவ தளபாடங்கள் ஆயுதங்கள் மீட்கப்படும் என்ற கருத்தை மேலுள்ள தளபதிகளுக்கு இடையில் உள்ள தளபதிகள் கூறினார்கள் தளபதிகளும் அதைச் சரியென ஏற்றுக்கொண்டார்கள் அதற்கான வேவு நடவடிக்கைகளில் வேவுப் புலிகள் இறங்கினார்கள் அதற்கு முன் தலைவருக்கு இந்த முடிவை அறிவித்தார்கள் தலைவர் சொன்னார் மக்களின் சொத்தை அழித்து ஒரு போராட்டத்தைச் செய்யவேண்டிய தேவை எமக்கில்லை அதை விட எங்களது தோட்டாக்கள் எதிரியின் நெஞ்சில் பாய்ந்து எதிரி இறக்க வேண்டுமே தவிர தண்ணீரால் மூழ்கடித்து எதிரியைக்கொன்றோம் என்ற பெயர் எமக்கு வேண்டாம் நாம் அறத்தோடு போரிடுவோம் ஒரு வேளை நாம் எமது போராட்டம் இல்லாமல் போகலாம் ஆனால் புலிகள் அறத்தோடு போராடினார்கள் வீழ்ந்தார்கள் என்பதை சொல்லிக்கொள்வார்கள் தயவு செய்து அந்த எண்ணத்தைக் கைவிடுங்கள் என்றார். புலிகள் அந்த எண்ணத்தைக் கைவிட்டார்கள் ஆனால் அதற்காகச் சென்ற கரும்புலிகளும் இன்னும் சில போராளிகளும் திரும்பி வரும்போது வீரச்சாவு அடைந்தார்கள் என்பது வரலாறு .
இரணைமடுகுளம் உடைக்கப்படப் போகின்றது என பரவலாக பேசியபோதும் நான் நம்பினேன் இரணைமடுக்குளம் அவ்வாறானதொரு நிலைக்குப் போகாது என்று இப்போது மீண்டும் கம்பீரமாக இருக்கிறது வந்து பாருங்கள்.
single reel
2008 ஆம் ஆண்டு இவ்வாறான ஒரு நேரத்தில்தான் இரணைமடுக்குளம் உடைக்கப்படப் போகின்றது என்பதாக பேசிக்கொண்டிருந்தார்கள் கொஞ்ச நாளுக்கு முன்தான் ஊருக்குப் போய் தேங்காய்களை பிடுங்கிக்கொண்டுவந்தோம் அப்போது செஞ்சோலைக்கு முன் புலிகள் பாதுகாப்பு அரண்களை நிறுவியிருந்தார்கள் கொக்காவிலுக்கு ஆர்மி வந்தபோது இரணைமடுவில் பின் தளங்கள் இருந்தது அப்ப கூட கோழி ஆடு மாடுகளை சனம் பிடிக்க வந்து போனது சண்டை தொடங்கிட்டு இனிப்போகாதீங்கோ என புலிகள் தடுக்கும் வரை இரணைமடுக் குளத்துக்கு கீழாகவுள்ள பாதையால்தான் சனம் போய் வந்துகொண்டிருந்தது மக்கள் புலிகளை நம்பினார்கள் எங்கட பொடியல் விடமாட்டானுகள் என்ற நம்பிக்கை வசனம் சனத்தோட வாயில் இருந்து வரும்போது ஒரு உறுதியான நம்பிக்கை தெரியும் ஆனால் புலிகளின் திட்டங்களை காட்டிக்கொடுப்புகள் தகர்த்துக்கொண்டிருந்தன இரணைமடுவை பெரியதொரு தளமாகத்தான் புலிகள் பாதுகாத்துக்கொண்டிருந்தார்கள் ஆர்மி முன்னேறுவதை தடுத்துக்கொண்டிருந்தாலும் பெரும் சண்டையென இறுதியாக நடந்தது கொக்காவிலுக்கும் முருகண்டிக்கும் இடையில்தான் அந்தப் பகுதிக்குள் இராணுவத்தினரின் கவசவாகனங்களும் உயிர்களும் பறிபோயிருந்தது (இப்போது அந்தப் பகுதியில்தான் மிதிவெடி அகற்றுகிறார்கள்)
இராணுவம் தடைகளை உடைத்து முன்னேறியவண்ணம் இருந்தது புலிகள் இரணைமடுவுக்கு சக்கைகளைக் கட்டியிருந்தார்கள் கூடவே கரும்புலிகளும் வெடிக்கும் நிலையில் தயாராக இருந்தார்கள் .
இரணைமடுவை ஊடறுத்து இராணுவம் முன்னேறி வட்டக்கச்சியை நோக்கி நகர்ந்தது கிளிநொச்சியைக் கைப்பற்றி பன்னங்கண்டியில் பெரும் மோதலோடு இராணுவம் முன்னேறியது மக்கள் தர்மபுரம் விசுவமடு தேராவில் சுதந்திரபுரம் என பின்னுக்கு போய்க்கொண்டே இருந்தார்கள் அப்பதான் குளத்தை உடைத்தால் ஆயிரக்கணக்கான இராணுவம் கொல்லப்படும் கூடவே அவர்களது இராணுவ தளபாடங்கள் ஆயுதங்கள் மீட்கப்படும் என்ற கருத்தை மேலுள்ள தளபதிகளுக்கு இடையில் உள்ள தளபதிகள் கூறினார்கள் தளபதிகளும் அதைச் சரியென ஏற்றுக்கொண்டார்கள் அதற்கான வேவு நடவடிக்கைகளில் வேவுப் புலிகள் இறங்கினார்கள் அதற்கு முன் தலைவருக்கு இந்த முடிவை அறிவித்தார்கள் தலைவர் சொன்னார் மக்களின் சொத்தை அழித்து ஒரு போராட்டத்தைச் செய்யவேண்டிய தேவை எமக்கில்லை அதை விட எங்களது தோட்டாக்கள் எதிரியின் நெஞ்சில் பாய்ந்து எதிரி இறக்க வேண்டுமே தவிர தண்ணீரால் மூழ்கடித்து எதிரியைக்கொன்றோம் என்ற பெயர் எமக்கு வேண்டாம் நாம் அறத்தோடு போரிடுவோம் ஒரு வேளை நாம் எமது போராட்டம் இல்லாமல் போகலாம் ஆனால் புலிகள் அறத்தோடு போராடினார்கள் வீழ்ந்தார்கள் என்பதை சொல்லிக்கொள்வார்கள் தயவு செய்து அந்த எண்ணத்தைக் கைவிடுங்கள் என்றார். புலிகள் அந்த எண்ணத்தைக் கைவிட்டார்கள் ஆனால் அதற்காகச் சென்ற கரும்புலிகளும் இன்னும் சில போராளிகளும் திரும்பி வரும்போது வீரச்சாவு அடைந்தார்கள் என்பது வரலாறு .
இரணைமடுகுளம் உடைக்கப்படப் போகின்றது என பரவலாக பேசியபோதும் நான் நம்பினேன் இரணைமடுக்குளம் அவ்வாறானதொரு நிலைக்குப் போகாது என்று இப்போது மீண்டும் கம்பீரமாக இருக்கிறது வந்து பாருங்கள்.
காவலூர் அகிலன்
2 weeks ago | [YT] | 9