Indian Histropedia

Book no:01/ year 2025

எழுத்தாளர் வில்லரசன் எழுதிய "பொற்கயல்" என்ற நாவலின் முதல் பாகமான "மீன்கொடி வெல்க" என்ற புத்தகத்தை படித்து முடித்தேன்.

மிக எளிமையான எழுத்து நடை. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எழுத்தாளர் அணுகியது அழகு. காதலனுக்காக காத்திருக்கக்கூடிய காதலியாகட்டும், வீரர்களுக்காக காத்திருக்கும் மன்னர்களை காட்டும் போதும் கூட ஒரு லயமுடன் சென்றது கதை.

கதை என்னவோ குலசேகர பாண்டியனின் காலகட்டத்தில் நடக்கக்கூடியது. ஆனால் கதாநாயகனோ - ஒன்றல்ல... அனைத்து கதாபாத்திரங்களுமே!!!

தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கக்கூடிய கடிகாரம் போல் இந்த கதையில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் அனைத்தும் கால வெள்ளத்தை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறது. அந்த கதாபாத்திரங்களின் ஓட்டம் தான் கதையில் நம்மை இணைத்து வாசகன் என்பதை மறக்கச் செய்து இந்தக் கதையுடன் சேர்த்து நம்மையும் ஓட வைக்கிறது.

கதையில் நிறைய இடங்களில் தந்தைக்கும் மகனுக்கும் இருக்கக்கூடிய உறவு, இறந்த தந்தையை மகன் உணரும் இடம், காதலன் காதலியை நினைத்து நிலவை பார்க்கும் நேரம், வயது முதிர்ந்த ஜோடிகளின் அன்பின் வெளிப்பாடு, நான்கு சகோதரர்களும் சேர்ந்து போர்க்களத்தில் வீறு கொண்டு எழும் இடம், சதி ஆலோசனைக் கூட்டம் நடக்கும் நேரம், ஒற்றர்களின் ஒற்று செய்தி என எழுத்தாளரின் கற்பனை அருமை. ஒரு கட்டத்தில் இந்த எழுத்தாளர் கதாபாத்திரங்களை உளவியல் ரீதியாக அணுகி இருப்பார் அதுவும் அருமையாக இருந்தது.

இவ்வளவுதான் இந்த புத்தகத்தில் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டீர்கள் எனில், "இல்லை" என்றுதான் என்னிடத்திலிருந்து பதில் வரும். ஏனெனில் அனைத்தையும் இந்த ஒரு கருத்துரைப் பகுதியில் நான் சொல்லி விட்டேன் என்றால், வாசகர்களாகிய உங்களின் எண்ண ஓட்டத்தில் இந்த புத்தகம் உதிக்காது. அதனால் நீங்களே உங்கள் விரல் கொண்டு இந்த புத்தகத்தின் தாள்களை நகர்த்தி பொற்காயலுடன் பயணித்து மீன் கொடியை வெற்றி பெற செய்யுங்கள். கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

-சிரா.

புத்தகத்தின் பெயர்: பொற்காயல் (பாகம் 1- மீன்கொடி வெல்க)
எழுத்தாளர்: வில்லரசன்
பதிப்பாளர்: அன்னை புத்தகாலயம்
விலை: 750/- ரூபாய்.

#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #chennaibookfair2025 #cbf2025 #பொற்கயல் #மீன்கொடிவெல்க #அன்னைபுத்தகாலயம்

4 months ago | [YT] | 13