மானுடம் காக்க - Maanudam Kaakka

படிக்கும் காலத்தில் தேர்வில் தன்னை பற்றி கேட்ட கேள்விக்கு தானே எழுதி மதிப்பெண் வாங்கிய ஒரு நபரை கண்டு இருக்குரீர்களா ? ஆம் அப்படி ஒரு நிகழ்வு நடந்து ஏறி இருக்குறது நம் தமிழ்நாட்டில் .

12 ஆம் வகுப்பு அரையாண்டு ஆங்கில தேர்வில் தங்கை கார்த்திகா குறித்து தொகுப்பை கொடுத்து அதில் இருந்து பதில் கொடுக்குப்படியான கேள்வியை கேட்டுள்ளது #தமிழ்நாடு #பள்ளி #கல்விதுறை .

இதில் விந்தை என்ன வென்றால் #கார்த்திகா இப்பொழுது படிப்பதும் அதே 12 ஆம் வகுப்புத்தான் .

அதில் ஏன் கார்த்திகாவை தமிழக மக்கள் கொண்டாடுகின்றனர் என்ற கேள்விக்கு இருக்கிற பதில்தான் சிறப்பானது ,கார்த்திகா விளையாடும் விளையாட்டை தாண்டி ,தான் எங்கிருந்து வந்தேன் என்று சொல்ல ஒரு போதும் கூச்சமே பட்டது இல்லை என்பதுதான் .

இன்று கபடி பார்க்கும் பெருபாலன நபர்களுக்கு தெரியும் கண்ணகி நகர் என்றால் நினைவுக்கு வருவது கார்த்திகா ,கார்த்திகா என்றால் நினைவுக்கு வருவது கண்ணகி நகர் என்று .

அந்த குழந்தைக்குள் கபடி மட்டும் தாக்கத்தை ஏற்ப்படுத்தவில்லை ,தான் வாழும் இடமும் தாக்கத்தை ஏற்ப்படுத்தி உள்ளது என்பதே நிதர்சனம் .

தன்னை சுற்றி உள்ளவர்கள் நம் ஊர் பேரை சொன்னாலே வேலை கிடைக்காது ,மரியாதை கிடைக்காது,தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்று சொன்ன வார்த்தைகள் விதையாக விழுந்து ஆலமா வேருண்றிய காரணத்தால் இந்த கபாடி தன்னை வளர்த்து விட தொடங்கியதிலிருந்தே தான் பிறந்த இடத்தின் பிம்பத்தையும் உடைக்க தொடங்கிவிட்டார்.

நான் இந்த இடத்தை சேர்ந்தவள்தான் என்று ஆழமாக பதிய வைக்க தொடங்கி இன்று அதில் ஒரு படி வெற்றியும் அடைந்திருக்கிறது அந்த குழந்தை .

இன்று அங்கே பேட்டி கேட்க்கும் போது அந்த மக்கள் பெருமையாக சொல்கிறார்கள் ஆம் நாங்கள் கண்ணகி நகரை சேர்ந்தவர்கள் தான் என்று .

கபடி வீரர்களுக்கு கபடி படிப்பு கொடுக்கும்,வேலை கொடுக்கும்,வாழ்க்கை தரத்தை உயர்த்த வழிவகுக்கும்,அதையும் தாண்டி ஒரு இடத்தின் பிம்பத்தையும் மாற்றும் என்று 17 வயது நிறம்பிய இந்த தங்கை மெய்பித்து காட்டி இருக்கிறார் .

இன்னும் மேலும்,மேலும் உயர்ந்து கண்ணகி நகருக்கும்,தாய் தமிழ்நாட்டிற்க்கும்,இந்திய திருநாட்டிற்க்கும் பெருமை தேடிதர வாழ்த்துக்கள் தங்கையே 🙏🙏🙏

#மானுடம்காக்க

2 days ago | [YT] | 160