L.Murugan

இஸ்ரேல்-ஈரான் நாடுகள் இடையிலான கடுமையான போர் சூழல் நிலவி வரும் நிலையில், அந்த நாடுகளில் வசிக்கின்ற மற்றும் கல்வி பயில்கின்ற நமது மக்களை இந்தியாவிற்கு மீட்டு கொண்டு வரும் விதமாக நமது அரசு "ஆப்பரேஷன் சிந்து" நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, இஸ்ரேலின் அண்டை நாடுகளான ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகளில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்தியர்கள் முறையே 165 மற்றும் 248 பேர், நமது விமானப்படைக்குச் சொந்தமான IAF C-17 விமானம் மூலம், இரு நாடுகளிலிருந்தும் இன்று பத்திரமாக மீட்டு கொண்டு வரப்பட்டனர். தலைநகர் டில்லி வந்து சேர்ந்த அவர்களை, மூவர்ணக்கொடி கொடி வழங்கி வரவேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி.

மேலும், "ஆப்பரேஷன் சிந்து" நடவடிக்கை மூலம் தங்களை மீட்டு கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள மத்திய அரசிற்கும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.



It is a moment of immense joy to welcome back our citizens evacuated from Israel under #OperationSindhu. With coordinated efforts under the effective leadership of Honourable Prime Minister Shri. Narendra modi ji, we saw the safe return of 165 Indians in the IAF C-17 flight, which landed at 8:45 AM today.



This operation is a true testament of our government's citizens-first policy.

Jai Hind..!






#operationsindhu

5 months ago (edited) | [YT] | 9