தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

செப்டம்பர் 2019 தமிழர் ஊடகத்தைத் துவக்கிய பொழுது நினைத்துக் கூட பார்த்து இருக்க மாட்டேன்,1 இலட்சம் உறவுகள் தமிழர் ஊடகத்தை பின் தொடருகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம்.மிகுந்த இடர்பாடுகள், தொல்லைகளுக்கு நடுவில் தமிழர் ஊடகத்தை ஆதரித்தமைக்கு நன்றி. அனைவரும் என் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆரம்பிக்கவில்லை, நம்முடைய கருத்துகளைத் தரவுகள் சான்றுகளுடன் கூறினால் மக்களுக்கு உறுதியாகப் போய்ச் சேரும் என்பது மட்டுமே நம்பிக்கை.வேலைப் பளு காரணமாகப் பல நேரங்களில் இந்த பக்கத்தில் பதிவுகள் இடாமல் இருந்த பொழுதும் தமிழர் ஊடகத்தை ஆதரித்தமைக்கு நன்றி. நீங்கள் கொடுக்கும் ஆதரவுதான் தொடர்ந்து ஓட வைக்கின்றது. திராவிடர்களிடம் இருந்து தமிழர்கள் விடுதலை என்பதே இறுதி இலக்கு. இலக்கை நோக்கிப் பாய்வோம்.

நன்றி

வணக்கம்
அர்ச்சுன்

2 months ago | [YT] | 265