AnnaKannan K

A creative book mala by Kannikovil Raja

கன்னிக்கோவில் ராஜா, சென்னை, மயிலாப்பூரில் வசிக்கும் எழுத்தாளர், பதிப்பாளர், புத்தக வடிவமைப்பாளர். தாம் எழுதிய, பதிப்பித்த புத்தகங்களை இவ்வாறு மாலையாகக் கோத்து, விருந்தினர்களுக்கு அணிவிக்கிறார். இது நல்ல யோசனையாகத் தெரிகிறது. சிறிது நேரத்தில் வாடிவிடும் பூமாலை, பூங்கொத்து போன்றவற்றை வாங்குவதை விட, புத்தகங்களைப் பரிசாக வழங்குங்கள் எனப் பலரும் சொல்லி வருகிறார்கள். அந்தப் புத்தகங்களையே மாலையாக அணிவிக்கலாம் என்பது ஒரு புதுமை. வேண்டுவோருக்கு அவர்கள் விரும்பும் வகையில் இந்தப் புத்தக மாலையை இவர் உருவாக்கியும் தருகிறார். தேவையுள்ளோர், இவரைத் தொடர்பு கொள்ளலாம். கன்னிக்கோவில் ராஜா தொடர்பு எண் - 98412 36965.

படத்தில் கன்னிக்கோவில் ராஜா உருவாக்கிய மாலையை எழுத்தாளர் சிவகாமசுந்தரி அவர்களுக்கு, லதா சரவணன் அணிவிக்கிறார்.

3 months ago | [YT] | 5