Indian Cosmic Science

⭕🔹🟠🟠🔹❤️🌸 கொடுப்பதா...???

பிடித்துக் கொள்வதா...???

ஞானம் பெற ஓஷோ கூறிய விளக்கம்

கேள்வி பதில்கள் :

கேள்வி : – ஓஷோ....

ஒருவன் மிகுந்த ஒழுக்கம் உள்ளவனாகவும்

பூஜை, விரதம் என்று கடவுள் வழிபாட்டில் இருக்கிறான்

ஏன் பெரும்பாலான பிராமணர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்

இவர்களால் ஞானநிலையை அடைய முடியுமா...???
.
பதில் : –

”இதைப்பற்றி பல இடங்களில் நான் பேசியிருக்கிறேன்

இவர்கள் உடல் அளவில், மன அளவில் மிகுந்த ஆரோக்கியம் உள்ளவர்வர்களாக இருக்கலாம்

அவர்களுடைய எதிர்பார்பு மிகக் குறைவாகக்கூட இருக்கலாம்

சிறந்த அறிவாளியாக இருக்கலாம்

என்ன பிரயோஜனம்....???

இவர்களுடைய மனம் வலிமையாகவே இருக்கும்

எந்த மனம், இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையோ

அதே மனம் ஞானத்தை அடைய பெருந்தடங்களாகவே இருக்கிறது

என்ன செய்வது....???

பிராமணர்களில் ஞானம் அடைந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்

பெரும்பாலோர் கடவுளைத் தன் மனதால் நெருங்கவே ஆசைப்படுகிறார்கள்

இது நடக்கக்கூடிய காரியம் இல்லை

ஒருவன் ஒழுக்கத்தில் மிகவும் மட்டமானவனாக இருக்கலாம்

கடவுளைக்கூட திட்டலாம்

ஆனால்

அவனுக்குத் தன் மனதை ஒதுக்கும் கலை தெரிந்திருந்தால்

அவனால் நிச்சயம் ஞானம் அடைய முடியும்

ஆக

ஒழுக்கத்திற்கும் ஆச்சாரம் பூஜை புனஸ்காரம், கொள்கை, கோட்பாடுகளுக்கும்,

கடவுள் தன்மையை அடைவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

ஆனால் அவர்கள் கடவுள்களை – உதாரணமாக ராமன், கிருஷ்ணன், காளி, முருகன், அனுமன், ஜீசஸ், அல்லா ……

இப்படி பல உருவங்களை அடையலாம்

இது அவர்களது மனம் செய்யும் மாயை

கேள்வி : – ஓஷோ ...

நீங்கள் ஏன் தியானத்தை ஒரு "இறக்கும் கலை ” என்று அழைக்கிறீர்கள்

அதை ஏன் "வாழும் கலை" என்று சொல்லக்கூடாது...???
.
பதில் : –

”நான் அப்படி அதை "வாழும்கலை" என்று சொன்னால்

உங்கள் அகங்கார மனம் திருப்தியடையும் என்று கருதித்தான்

அப்படி இறக்கும்கலை என்று குறிப்பிட்டேன்

ஒரு நிகழ்ச்சி …

ஒரு பெரிய தலைப்பாகை அணிந்த ஒரு யூதப்பாதிரியார் ஒரு கிணற்றில் தவறுதலாக விழுந்து

‘உதவி, உதவி' என்று கத்தினார்

மக்கள் மேலே கூடி நின்று வேடிக்கை பார்த்தார்கள்

அப்பொழுது ஒருவர் தன் கையை உள்ளே நீட்டி

‘உங்கள் கையைக் கொடுங்கள்' என்று கேட்டார்

ஆனால் அவர் அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை

மீண்டும் மீண்டும் ‘உதவி, உதவி' என்று கத்திக்கொண்டு இருந்தார்

கடைசியில் முல்லா நசுருதீன் அங்கு வந்து எட்டிப்பார்த்து

'என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்'என்றார்

உடனே அந்தப் பாதிரியார் அவர் கையை ‘கப்' பென்று பிடித்துக்கொண்டார்

பிறகு அவரை மெல்ல இழுத்துக் காப்பாற்றினார்கள்

அப்பொழுது ஒருவர் முல்லாவிடம்

'நீங்கள் மட்டும் எப்படி அவரைக் காப்பாற்றினீர்கள்..???' என்று கேட்டார்

அதற்கு முல்லா

‘அது வேறு ஒன்றுமில்லை‘

'கொடுங்கள் ‘ என்ற வார்த்தையைக் கேட்டால்

கஞ்சன்கள் எதையுமே கொடுக்க மாட்டார்கள்

நான் என் கையை நீட்டி ‘ல் 'பிடித்துக்கொள்ளுங்கள்' என்று கூறினேன்

அதுதான் காரணம்' என்றார்

நான் தியானத்தை வாழும் கலை என்று சொன்னால்

உங்கள் மனம் 'ஆமாம், நாம் செய்வது சரிதான்

நான் வளர்ந்து மிக நல்ல நிலைக்கு வருவேன்' என்று கூறும்

ஆனால் தியானம் செய்வது உண்மையில் உங்கள் மனம் இறக்கும் வேலைதான்

மனம் என்றாலே அகங்காரம்தான், பொய்தான்

அதை அழிப்பதுதான் தியானத்தின் குறிக்கோள்

உங்கள் அகங்காரம்

உங்கள் தன்முனைப்பு

உங்கள் அவலட்சணங்கள் வளர்ந்தால்

அது உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கழுத்தை இறுக்கிவிடும்

உங்களைச் சுற்றி ஒரு சிறையை உண்டாக்கிவிடும்

எது உங்களுக்கு முதலில் இன்பமாக இருந்ததோ

அதுவே பிறகு உங்களுக்கு நரகமாகி விடும்

ஆகவே

தியானம் என்பது உங்கள் அகங்காரத்தின் மரணம்தான்' 🌸🟠🟠🟠
ஓஷோ

1 year ago | [YT] | 48