ஹஜ் பெருநாள் நெருங்கிவிட்டாலே கூட்டுக்குர்பானி நோட்டீஸ்கள் களைகட்டும். ஆரம்பத்தில் பெரிய மதரஸாக்கள் மட்டுமே செய்த வேலையை சில இயக்கங்கள் கையில் எடுக்க அதையும் தாண்டி இப்போது சில தனிநபர்களும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். கூட்டுக் குர்பானி "வணக்கம் " என்கிற நிலையிலிருந்து மாறி வியாபார மயமாகிவிட்டது. மாடு ஒரு கூட்டு 1500 ரூபாயாம். ஆடு 1600 ரூபாயாம். யார் காதில் இவர்கள் பூ சுற்றுகிறார்கள். யாரை ஏமாற்றுகிறார்கள்.? கூட்டில் சேர்ந்த நபரையா.? அல்லது அல்லாஹ்வையா.?
சம்பந்தப்பட்ட நபரிடம் போன் செய்து 7000 ரூபாய்க்கு எங்களுக்கு பத்து ஆடு வேண்டும் என்று கேட்டால் இல்லை அதெல்லாம் எங்களுக்கு மட்டும்தான். விற்பனைக்கு இல்லை என்றார்கள். சரி 6100 ரூபாய் ஆட்டை போட்டோ புடித்து அனுப்புங்களேன் என்று சொன்னால் இல்லை... இல்லை... அரசாங்க சிக்கல் வரும் என்று கதை அளந்தார்கள். குர்பானி எங்கு வைத்துக் கொடுக்கிறீர்கள் நாங்கள் பார்க்க வருகிறோம் என்று கேட்டால் அசாமில் வைத்து அறுத்து அங்கேயே ஏழைகளுக்கு கொடுத்து விடுவோம் என்று நாகூசாமல் பொய்யை அவிழ்த்து விட்டார்கள். இது போன்ற ஃபிராடு கூட்டத்திற்கு யார் மணி கட்டுவது என்று தெரியவில்லை.
குர்பானியை இறைவனுக்காக செய்யும் நோக்கம் மாறி இன்று கடமைக்காக, வியாபார நோக்கில் செய்யப்படுபவது வேதனை.
ஒரு காலத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே ஆடு அல்லது மாடுகளை வாங்கி அதை வளர்த்து அதனுடன் நாமும் நம் குழந்தைகளும் நெருக்கமாக பழகி பிறகு அதை தன் கையாலேயே அறுத்து பலியிடும்போது மனதில் ஒரு வலி ஏற்படும். அந்த வழியைத்தான் இறைவன் "தக்வா" என்று அருள்மறையில் கூறுகிறான்.
நமக்காவது பரவாயில்லை. நபி இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்களை நினைத்துப்பாருங்கள். தன் மகனை அறுத்துப்பலியிட அழைத்து சென்று கழுத்தில் கத்தியை வைத்த போது எவ்வளவு வலி இருந்திருக்கும். அவர்களின் தியாக உணர்வை ஏற்றுக்கொண்ட அல்லாஹ் ஆட்டைப்பலியிட வைத்தான். அதையே நமக்கு சட்டமாகவும் மாற்றினான் .
ஆனால் இன்று நமக்கு அந்த வலியில் கொஞ்சமாவது இருக்கிறதா..?
*"நீங்கள் கொடுக்கும் குர்பானியின் இறைச்சியோ இரத்தமோ இறைவனை சென்றடைவதில்லை . மாறாக இறையச்சமே இறைவனை சென்றடைகிறது".. என அல்லாஹ் கூறுகிறான்.*
கூட்டுக் குர்பானியில் நமக்காக கொடுக்கப்போகும் மாடு எதுவென தெரியாது. அதை யார் அறுக்கப் போகிறார்கள்..? நமக்கு தெரியாது. குர்பானி கொடுப்பதற்கு அது தகுதியான மாடா..? நமக்கு தெரியாது.
*இன்னும் கொடுமை என்னவென்றால் மாட்டில் கண்டிப்பாக இரண்டு வருடங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்கிற சட்டம் இருக்க ஒரு வருடம் கூட பூர்த்தியாகாத கன்றுக்குட்டியை கூட சிலர்கள் கூட்டு குர்பானியாக கொடுக்கும் அவலமும் உண்டு.*
இதையும் தாண்டி சிலர் கூட்டுக் குர்பானியில் சேர்ந்தவர்களை குர்பானி கொடுக்கும் இடத்திற்கே அழைத்துச் செல்வதில்லை. "உங்களுக்கு எதுக்கு வீன் சிரமம்.. கறி வீடு தேடி வரும் ".. என்று வீட்டிலேயே உட்கார வைத்து விடுகிறார்கள்.
அழகிய முறையில் நமக்கான குர்பானியை நிறைவேற்றுவார்கள்.. என்று நம்பி அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு அமானித மோசடி செய்வதும் ஆங்காங்கே நடைபெறுகிறது.
இன்னும் சொல்லப்போனால் அதன் இறைச்சிகளை ஏழைகளுக்கு பங்கீடு செய்வதில் கூட நாம் பங்கு பெறுவதில்லை.
12 மணிக்கு நமது பங்கென்று சொல்லி நான்கு அல்லது ஐந்து கிலோ கறி வந்துவிட்டால் போதும் . நம் கடமை முடிந்துவிட்டது..
இன்னும் சில இடங்களில்.. தான் கூட்டாக சேர்ந்து இருக்கும் மாடு அறுக்கப்படாத நிலையில் அதற்கு முன்பே அறுக்கப்பட்ட மாட்டின் இறைச்சியை அவசரம் கருதி சிலர்கள் வாங்கிச் செல்கிறார்கள்.
*குர்பானியின் ஏற்பாட்டாளர்கள் அடுத்தவர்களுடைய மாட்டிலிருந்து நம் அவசரம் கருதி குர்பானி இறைச்சியின் பங்கை அதன் பங்குதாரர் ஏழு பேரின் அனுமதியின்றி கொடுப்பதும் நமக்கான பங்கை அதிலிருந்து நாம் பெற்றுக் கொள்வது மிகப் பெரும் மோசடியாகும்.* என்பதை கொடுப்பவரும் வாங்குபவரும் புரிந்து கொள்வதில்லை.
அதே போல் குர்பானிக்கு பங்கு கேட்கும் இயக்கமோ, தனி நபரோ எதனடிப்படையில் குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்கிறார்கள்..? ஒரு மாடு 15 ஆயிரம் இருக்கலாம் 18 ஆயிரம் இருக்கலாம் ஏன் 20 ஆயிரம்கூட இருக்கலாம். அனைத்து மாடுகளையும் ஒரே விலையில் நிச்சயம் வாங்கப் போவதுமில்லை.
அனைத்து பங்கிற்கும் ஒரே விலை என்றால் எவ்வாறு ஏற்றுக்கொள்வது..? அல்லது குர்பானி கொடுத்தபின் கணக்கு பார்த்து "இதில் இவ்வளவு குறைவு வந்திருக்கிறது . இன்னும் நீங்கள் இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்".. என்று குர்பானி ஏற்பாடு செய்பவர்கள் இதுவரை அப்படி யாரிடமாவது கேட்டிருக்கிறார்களா? அல்லது "பணம் அதிகமாக வாங்கிவிட்டோம் . உங்கள் மாட்டிற்கான குர்பானி செலவு போக மிச்சம் இந்தாருங்கள் ".. என சம்பந்தப்பட்டவர்களிடம் என்றாவது திருப்பி கொடுத்திருக்கிறார்களா..? அப்படி எங்கும் இப்படி நடந்ததாக தெரியவில்லை.
குர்பானிக்கு என்று வாங்கப்பட்ட தொகையை "நாங்கள் மீதமிருந்தால் பள்ளிவாசலுக்கு வைத்துக் கொள்கிறோம்.. மதரஸாவுக்கு வைத்துக் கொள்கிறோம்.." என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
எனவே கூட்டுக் குர்பானி கொடுக்கும் அன்பர்கள் இந்த விஷயங்களில் ஆழமாக கவனம் செலுத்தி உங்களுக்காக வாங்கப்பட்ட மாடு எது..? அதன் விலை என்ன..? அதை யார் அறுக்கிறார்கள்..?யாருக்கு பங்கு வைக்கிறார்கள்..? என கவனித்து செயல்படவும்.
கூட்டுக் குர்பானியான மாடு குர்பானி கொடுக்கிற போது ஏழு நபர்களில் ஒருவரின் பணம் ஹராமானதாக இருந்தாலும் ஏழு நபரின் குர்பானியும் கூடாமல் போய்விடும். எனவே ஆடு வாங்குவதற்கான வசதி வாய்ப்புகள் உங்களுக்கு இருந்தால் ஆட்டையே குர்பானி கொடுப்பதற்கு முன் வாருங்கள். ஏனென்று சொன்னால் அதன் நன்மை தீமைகள் அனைத்திற்கும் நீங்கள் ஒருவரே பொறுப்பு.
கஷ்டப்படாமல் நன்மைகள் எளிதில் கிடைத்து விடுவதில்லை. உங்களின் குர்பானி விஷயத்திலும் வீட்டை விட்டு வெளியே வந்து கஷ்டப்பட்டு குர்பானியை நிறைவேற்ற முயலுங்கள்.
*காரணம்.. குர்பானியின் இறைச்சியோ இரத்தமோ இறைவனை சென்றடையப்போவதில்லை. இறைவன் பார்ப்பது நமது தக்வா எனும் இறையச்சத்தைத்தான்.*
sunnah truth
*கூட்டுக்குர்பானி கவனம் தேவை..*
~~~~~~~~~~~~~~~
ஹஜ் பெருநாள் நெருங்கிவிட்டாலே கூட்டுக்குர்பானி நோட்டீஸ்கள் களைகட்டும்.
ஆரம்பத்தில் பெரிய மதரஸாக்கள் மட்டுமே செய்த வேலையை சில இயக்கங்கள் கையில் எடுக்க அதையும் தாண்டி இப்போது சில தனிநபர்களும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். கூட்டுக் குர்பானி "வணக்கம் " என்கிற நிலையிலிருந்து மாறி வியாபார மயமாகிவிட்டது. மாடு ஒரு கூட்டு 1500 ரூபாயாம். ஆடு 1600 ரூபாயாம். யார் காதில் இவர்கள் பூ சுற்றுகிறார்கள். யாரை ஏமாற்றுகிறார்கள்.? கூட்டில் சேர்ந்த நபரையா.? அல்லது அல்லாஹ்வையா.?
சம்பந்தப்பட்ட நபரிடம் போன் செய்து 7000 ரூபாய்க்கு எங்களுக்கு பத்து ஆடு வேண்டும் என்று கேட்டால் இல்லை அதெல்லாம் எங்களுக்கு மட்டும்தான். விற்பனைக்கு இல்லை என்றார்கள். சரி 6100 ரூபாய் ஆட்டை போட்டோ புடித்து அனுப்புங்களேன் என்று சொன்னால் இல்லை... இல்லை... அரசாங்க சிக்கல் வரும் என்று கதை அளந்தார்கள். குர்பானி எங்கு வைத்துக் கொடுக்கிறீர்கள் நாங்கள் பார்க்க வருகிறோம் என்று கேட்டால் அசாமில் வைத்து அறுத்து அங்கேயே ஏழைகளுக்கு கொடுத்து விடுவோம் என்று நாகூசாமல் பொய்யை அவிழ்த்து விட்டார்கள். இது போன்ற ஃபிராடு கூட்டத்திற்கு யார் மணி கட்டுவது என்று தெரியவில்லை.
குர்பானியை இறைவனுக்காக செய்யும் நோக்கம் மாறி இன்று கடமைக்காக, வியாபார நோக்கில் செய்யப்படுபவது வேதனை.
ஒரு காலத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே ஆடு அல்லது மாடுகளை வாங்கி அதை வளர்த்து அதனுடன் நாமும் நம் குழந்தைகளும் நெருக்கமாக பழகி பிறகு அதை தன் கையாலேயே அறுத்து பலியிடும்போது மனதில் ஒரு வலி ஏற்படும். அந்த வழியைத்தான் இறைவன் "தக்வா" என்று அருள்மறையில் கூறுகிறான்.
நமக்காவது பரவாயில்லை. நபி இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்களை நினைத்துப்பாருங்கள்.
தன் மகனை அறுத்துப்பலியிட அழைத்து சென்று கழுத்தில் கத்தியை வைத்த போது எவ்வளவு வலி இருந்திருக்கும்.
அவர்களின் தியாக உணர்வை ஏற்றுக்கொண்ட அல்லாஹ் ஆட்டைப்பலியிட வைத்தான்.
அதையே நமக்கு சட்டமாகவும் மாற்றினான் .
ஆனால் இன்று நமக்கு அந்த வலியில் கொஞ்சமாவது இருக்கிறதா..?
*"நீங்கள் கொடுக்கும் குர்பானியின் இறைச்சியோ இரத்தமோ இறைவனை சென்றடைவதில்லை . மாறாக இறையச்சமே இறைவனை சென்றடைகிறது".. என அல்லாஹ் கூறுகிறான்.*
கூட்டுக் குர்பானியில் நமக்காக கொடுக்கப்போகும் மாடு எதுவென தெரியாது.
அதை யார் அறுக்கப் போகிறார்கள்..? நமக்கு தெரியாது.
குர்பானி கொடுப்பதற்கு அது தகுதியான மாடா..? நமக்கு தெரியாது.
*இன்னும் கொடுமை என்னவென்றால் மாட்டில் கண்டிப்பாக இரண்டு வருடங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்கிற சட்டம் இருக்க ஒரு வருடம் கூட பூர்த்தியாகாத கன்றுக்குட்டியை கூட சிலர்கள் கூட்டு குர்பானியாக கொடுக்கும் அவலமும் உண்டு.*
இதையும் தாண்டி சிலர் கூட்டுக் குர்பானியில் சேர்ந்தவர்களை குர்பானி கொடுக்கும் இடத்திற்கே அழைத்துச் செல்வதில்லை. "உங்களுக்கு எதுக்கு வீன் சிரமம்.. கறி வீடு தேடி வரும் ".. என்று வீட்டிலேயே உட்கார வைத்து விடுகிறார்கள்.
அழகிய முறையில் நமக்கான குர்பானியை நிறைவேற்றுவார்கள்.. என்று நம்பி அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு அமானித மோசடி செய்வதும் ஆங்காங்கே நடைபெறுகிறது.
இன்னும் சொல்லப்போனால் அதன் இறைச்சிகளை ஏழைகளுக்கு பங்கீடு செய்வதில் கூட நாம் பங்கு பெறுவதில்லை.
12 மணிக்கு நமது பங்கென்று சொல்லி நான்கு அல்லது ஐந்து கிலோ கறி வந்துவிட்டால் போதும் .
நம் கடமை முடிந்துவிட்டது..
இன்னும் சில இடங்களில்.. தான் கூட்டாக சேர்ந்து இருக்கும் மாடு அறுக்கப்படாத நிலையில் அதற்கு முன்பே அறுக்கப்பட்ட மாட்டின் இறைச்சியை அவசரம் கருதி சிலர்கள் வாங்கிச் செல்கிறார்கள்.
*குர்பானியின் ஏற்பாட்டாளர்கள் அடுத்தவர்களுடைய மாட்டிலிருந்து நம் அவசரம் கருதி குர்பானி இறைச்சியின் பங்கை அதன் பங்குதாரர் ஏழு பேரின் அனுமதியின்றி கொடுப்பதும் நமக்கான பங்கை அதிலிருந்து நாம் பெற்றுக் கொள்வது மிகப் பெரும் மோசடியாகும்.* என்பதை கொடுப்பவரும் வாங்குபவரும் புரிந்து கொள்வதில்லை.
அதே போல் குர்பானிக்கு பங்கு கேட்கும் இயக்கமோ, தனி நபரோ எதனடிப்படையில் குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்கிறார்கள்..?
ஒரு மாடு 15 ஆயிரம் இருக்கலாம் 18 ஆயிரம் இருக்கலாம் ஏன் 20 ஆயிரம்கூட இருக்கலாம்.
அனைத்து மாடுகளையும் ஒரே விலையில் நிச்சயம் வாங்கப் போவதுமில்லை.
அனைத்து பங்கிற்கும் ஒரே விலை என்றால் எவ்வாறு ஏற்றுக்கொள்வது..?
அல்லது குர்பானி கொடுத்தபின் கணக்கு பார்த்து "இதில் இவ்வளவு குறைவு வந்திருக்கிறது . இன்னும் நீங்கள் இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்".. என்று குர்பானி ஏற்பாடு செய்பவர்கள் இதுவரை அப்படி யாரிடமாவது கேட்டிருக்கிறார்களா?
அல்லது "பணம் அதிகமாக வாங்கிவிட்டோம் . உங்கள் மாட்டிற்கான குர்பானி செலவு போக மிச்சம் இந்தாருங்கள் ".. என சம்பந்தப்பட்டவர்களிடம் என்றாவது திருப்பி கொடுத்திருக்கிறார்களா..? அப்படி எங்கும் இப்படி நடந்ததாக தெரியவில்லை.
குர்பானிக்கு என்று வாங்கப்பட்ட தொகையை "நாங்கள் மீதமிருந்தால் பள்ளிவாசலுக்கு வைத்துக் கொள்கிறோம்.. மதரஸாவுக்கு வைத்துக் கொள்கிறோம்.." என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
எனவே கூட்டுக் குர்பானி கொடுக்கும் அன்பர்கள் இந்த விஷயங்களில் ஆழமாக கவனம் செலுத்தி உங்களுக்காக வாங்கப்பட்ட மாடு எது..? அதன் விலை என்ன..? அதை யார் அறுக்கிறார்கள்..?யாருக்கு பங்கு வைக்கிறார்கள்..? என கவனித்து செயல்படவும்.
கூட்டுக் குர்பானியான மாடு குர்பானி கொடுக்கிற போது ஏழு நபர்களில் ஒருவரின் பணம் ஹராமானதாக இருந்தாலும் ஏழு நபரின் குர்பானியும் கூடாமல் போய்விடும்.
எனவே ஆடு வாங்குவதற்கான வசதி வாய்ப்புகள் உங்களுக்கு இருந்தால் ஆட்டையே குர்பானி கொடுப்பதற்கு முன் வாருங்கள். ஏனென்று சொன்னால் அதன் நன்மை தீமைகள் அனைத்திற்கும் நீங்கள் ஒருவரே பொறுப்பு.
கஷ்டப்படாமல் நன்மைகள் எளிதில் கிடைத்து விடுவதில்லை. உங்களின் குர்பானி விஷயத்திலும் வீட்டை விட்டு வெளியே வந்து கஷ்டப்பட்டு குர்பானியை நிறைவேற்ற முயலுங்கள்.
*காரணம்.. குர்பானியின் இறைச்சியோ இரத்தமோ இறைவனை சென்றடையப்போவதில்லை. இறைவன் பார்ப்பது நமது தக்வா எனும் இறையச்சத்தைத்தான்.*
*இது இறைவனின் வாக்கு..*
**செய்யது அஹமது அலி. பாகவி**
4 months ago | [YT] | 7