CRAJENDRAN OFFICIAL

தாம்பரத்தில் கழிவுநீர் கால்வாயில் இருந்து கசிந்து ஓடும் கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயத்தில் மக்கள்.சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டு அறிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளருமான சிட்லபாக்கம் ச ராஜேந்திரன்.தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 5, 63 வது வார்டு பாரதியார் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி சாலையில் கழிவு நீர் கசிந்து ஓடுகிறது. கடந்த 3 மாதங்களாக இதே நிலைமை நீடித்து வரும் நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிரமமப்படுவதாக கூறும் அப்பகுதி மக்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக வேதனை கூறுகின்றனர்.மக்கள் படும் இன்னல் குறித்து கேள்விப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.அப்போது பகுதி வாழ்மக்கள் ஒன்று கூடி தாங்கள் படும் இன்னல்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரனிடம் எடுத்து கூறினர்.மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வழி வகை செய்வதாக கூறினார்.எம்.எல்.எ எஸ் ஆர் ராஜா வந்தார் பார்த்தா சென்றார் என்று கூறும் இப்பகுதி மக்கள் திமுக மாமன்ற உறுப்பினர் ஜோதிக்குமார் கூட தங்கள் பிரச்சினை குறித்து இது வரை எந்த விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் #tambaram #chitlapakkam #eps #admk #admknews #DMKFailsTN #dmkfailsintamilnadu #dmkfails

2 weeks ago | [YT] | 7