varahi_amma_05

Varahi_amma_05R.JG

வாராஹி மாலை

29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால் மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டிஇரு கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.

விளக்கம்

"வாராஹி அம்மன்! உன் திருவடிகளை மனமார தியானித்து, திருநீறு பூசி பக்தியுடன் வாழும் நம்பிக்கையாளர்களுக்கு எந்தப் பாவமோ, இட்ரோ வராது. ஆனால் அந்த பக்தர்களுக்கு எதிராக செயல்படும் அறியாமை கொண்டவர்களை நீ வாளால் வெட்டி, இருகூறாக செய்து அழிக்கிறாய். குலதெய்வமாகி நம்மைக் காக்கும் சக்தியாய் இருக்கிறாய்."

பயன்பாடு:

*தியான நேரத்தில் மனதுக்கு தெளிவு தர

*பக்திக்கு உறுதி அளிக்க

*துன்பங்களை கடக்க நம்பிக்கை உருவாக்க

*வாராஹி அம்மனை குலதெய்வமாக

வணங்கும் வழிபாடுகளில் சொல்ல *எதிரிகளை (அழிவை) தாண்ட தெய்வீக பாதுகாப்பு வேண்டி

3 months ago | [YT] | 1