R Ravichandiran

#பிச்சைக்காரர்கள்_சில்லரைகள்_தாள்கள்

ஆமாம்,
யாரும்
எங்கும்
பிச்சக்காரர்களாக
யாரையும்
ஆக்கிடவிடக்கூடாதென்பதும்
தானாக
ஆகிவிடக்கூடாதென்பதும்தான்
என் அளவற்ற எண்ணம்...

இருப்பினும்
இருக்கின்றார்கள்
இருக்கப்பட வைக்கின்றார்கள்...

எனினும்,
அவர்களுக்கு
சில்லரை ரூபாய்கள் மட்டும்தான்
போடவேண்டுமென்பதில்லை
தாள் ரூபாய்களும் போடலாம்
சில்லரைகள் இருந்தாலும்
இல்லாவிட்டாலும்...

மேலும்,
தருவதில்லையென்றுகூட
நேரடியாக சொல்லிவிடுங்கள்;
காக்க வைத்துவிட்டு
சில்லைரை இல்லையென சொல்லி
ஏமாற வைத்துவிடாதீர்கள்...

ஏமாறுவது
அவர்களுக்கு
புதியதில்லையென்ற போதிலும்...

©மேலோன்

9 months ago | [YT] | 0