Prof T Vijay பேரா தி விஜய்

அனுபவ ஜோதிட குறிப்புகள்

1.சுய ஜாதகத்தில் எட்டாம் பாவகம் சுபகிரகங்களின் தொடர்பிலிருந்து புதனும் வலுக் குறையாத பட்சத்தில் ஜாதகர் ஜோதிடம் சார்ந்த விஷயங்களில் ஆர்வமுடையவராக இருப்பார்.

2. திருமண வாழ்க்கைக்கு காரக கிரகமான சுக்கிரனின் ஆட்சி வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் பாபர்களின் தொடர்பின்றி இருப்பது மண வாழ்க்கைக்கு நல்ல அமைப்பாகும்.

3. சனியுடன் மிக நெருங்கி இருக்கக்கூடிய கிரகத்தின் தசா புத்தி காலகட்டங்களில் தொழில் சார்ந்த விஷயங்களில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது அவசியம்.

4. சனி, ராகுவுடன் மிக நெருங்கி எவ்வித சுப கிரகங்களின் தொடர்பின்றி இருக்கும் பொழுது சனியின் காரகம் சார்ந்த தொழில்களான விவசாயம், கால்நடை வளர்ப்பு, இரும்பு, இயந்திரம் சார்ந்த துறைகள் ஜாதகருக்கு பெரியளவு சிறப்புகளை தருவதில்லை.

5 . புத்திரக் காரகனான குரு பகவான், சூரியன் செவ்வாய் போன்ற ஆண் கிரகங்களுடன் சேர்ந்து ஐந்தாம் பாதத்தோடு தொடர்பு கொண்ட தசா புத்தி நடத்தும் பட்சத்தில் ஆண் குழந்தைக்கான பாக்யமுண்டு.

6. சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்திற்கு சுபகிரகங்களின் தொடர்பற்ற சனியின் தொடர்பு இருந்து, சூரியனும் ராகுவுடன் இணைந்து லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்களில் நின்று அவயோக கிரகத்தின் தசாவும் நடப்பில் இருக்கக் கூடிய பட்சத்தில் போது அரசு வேலை சார்ந்த முயற்சிகள் பலனளிக்காது இதுபோன்ற நிலையில் தனியார் துறைகள் அல்லது சுய தொழில் சிறப்பு தருவதாக இருக்கக்கூடும். பெரும்பாலும் இப்படிப்பட்ட நிலைகளில் அவயோக கிரகத்தின் தசா காலங்களில் ஜாதகர் வீண் முயற்சி செய்தாக வேண்டும் என்பதன் அடிப்படையில் ஜாதகர் யார் சொன்னாலும் கேட்காமல் தொடர்ந்து தேவையற்ற முயற்சிகளை செய்து கொண்டிருப்பார்.

7. பௌர்ணமி சந்திரன் இரண்டு அல்லது 11ஆம் பாவகத்தில் இருப்பது தனம், பொருளாதார அமைப்புகளுக்கு நல்லதாகும்.

8. களத்திரக்காரகனான சுக்கிரன், சந்திர அதியோகத்தில் இருக்கும் பட்சத்தில் ஜாதகருக்கு நல்ல மணவாழ்க்கை எதிர்பாலின ரீதியாக நல்ல ஆதரவு, சுக்கிரனுடைய ஜட காரகத்துவங்களான வாகன வசதிகள், நல்ல வீடு மற்றும் சொகுசான வாழ்க்கை போன்ற வசதிகள் உண்டு.

9. கோச்சார ரீதியாக அஷ்டம சனி அல்லது ஜென்ம சனி நடைபெறக்கூடிய பட்சத்தில் சுய ஜாதக ரீதியாக ஆறு, எட்டாம் அதிபதிகளின் தசா புக்திகள் நடப்பில் இருக்கக்கூடிய பட்சத்தில் ஜாதகர் உடல் நலம் சார்ந்த விஷயங்கள் சற்று கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லதாகும்.

10. சுய ஜாதகத்தில் சனியால் அதிகப்படியான தடை, தாமதங்கள் மற்றும் சவால்களை சந்திப்பவர்கள் சனிக்கிழமை தோறும் ராகு காலத்தில் பழமையான சிவாலயங்களில் உள்ள காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி செவ்வரளி மாலை சாற்றி வழிபடுவதை வழக்கப்படுத்தி கொள்ளும்போது தடை, தாமதங்கள் படிப்படியாக முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும்...
நன்றிகள்..

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்.

ஜோதிட குரு டாக்டர் டி விஜய் சுவாமிகள் திருநின்றவூர் ஆவடி சென்னை
அலைபேசி வாட்சப் எண்
அலைபேசி வாட்சப் எண்
097875 11957

#சிவசிவசித்தர்பீடம் #மூலிகைமருத்துவம் #புரோகிதம் #அருள்வாக்கு #ஜோதிடம் #ஜாதகம் #astrology #நவகோடிசித்தர்கள்ஹோமம்

1 week ago | [YT] | 67



@lakshminarashiman9901

🙏🪻🪷சிவாய நம

1 week ago | 1  

@mohanan6265

நன்று.🙏

1 week ago | 1  

@tharunramesh6295

Om namah shivaya

1 week ago | 1  

@pusalartv5134

Sivayanama❤

1 week ago | 1