Thiruma army

எடுப்பார் கைப்பிள்ளை சீமான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கக் கவிதைகளில் நாற்பதுக்கு மேற்பட்ட பெண்கள் எழுதிய பல கவிதைகள் உள்ளன. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் படிக்கச் சொல்லி பாடல் எழுதியிருக்கிறான். அனைவருக்கும் உணவு, உடை, உறைவிடம் வழங்குவதே அறம் எனப் பேசியிருக்கிறார் மணிமேகலை....

தமிழின் தனித்துவமானதும் சமத்துவமானதுமான சிந்தனைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அதே போல் தன் மொழியின் வளமையையும், நிலப்பரப்பின் பெருமையையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வந்த இனம் தமிழினம். ஏகப்பட்ட ஆதாரங்கள் உள்ளன.

இந்த வரிசையில் பாரதி மிக மிக மிக இளையவர். பாரதி மாகவி என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர் ஆரியப் பெருமை பேசித்திரிந்தவர். பாரதியின் கவிதைகளில் அங்கங்கே வெளிப்படும் ஆரியப் பற்று, அவருடைய உரைநடை எழுத்துகளில் தலைவிரித்து ஆடுகிறது.

சித்தாந்த தெளிவற்ற தமிழ்த் தேசியத்தைப் பேசும் சீமான் அவர்கள், 'அவர்கள்' மேடையில் ஏறி நின்று இப்படிப் பேசுவது முறையல்ல. படித்துவிட்டு ஆதாரங்களுடன் பேசுங்கள். எடுப்பார் கைப்பிள்ளையாய் சொல்லிக்கொடுதத்தை பேச வேண்டாம்.

பஞ்சமர்களை கோ மாமிசம் சாப்பிடாதபடி ரட்சித்து இந்து பெரும்பாண்மையில் ஐக்கியப் படுத்த வேண்டும் என்று எழுதியவர் பாரதி. இதைத்தான் RSS பேசுகிறது. இதைப் பற்றி சீமான் அவர்கள் பேசத் தயாரா. இதை அவர் ஏற்றுக் கொள்கிறாரா?

- எழுத்தாளர்.அழகிய பெரியவன் .
முகநூல் பதிவு.
Azhagiya Periyavan

1 week ago | [YT] | 679