sivaya nama

கடக லக்னம் குழந்தை அமைப்பு எப்போது தடை தாமதம் ஆகும்.

ஆண் ஜாதகம் கால தாமதமான திருமணம் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை எப்போது கிடைக்கும் என பார்ப்போம் வாருங்கள்.

பதில் ;

கடக லக்னம் மகர ராசி தற்போது தற்போது குரு தசா சந்திர புக்தி நடக்கின்றது . இந்த ஜாதகத்தில் 5 ஆம் அதிபதி செவ்வாய் 5 ல் ஆட்சி பெற்ற அமைப்பில் இருந்தாலும் உடன் கேது இணைந்து உள்ளார். அடுத்து புத்திர காரகன் குரு 6 ல் மறைந்து வக்ரம் பெற்று சனி பார்வையில் உள்ளார் ராசிக்கு 5 ல் ராகு உள்ளார். இவருக்கு குழந்தை அமைப்பு தாமதம் ஆகும் ஆனால் தடை ஆகாது. நிச்சயம் கிடைக்கும்.

எப்போது கடக லக்னத்திற்கு குழந்தை கிடைக்காது: 5 ஆம் அதிபதி செவ்வாய் பலம் இழந்து குரு கெட்டு 5 ஆம் இடமும் கெட்டால் மட்டுமே குழந்தை கிடைக்காது.

ஒரு விஷயம் எப்போது முழுவதும் கிடைக்காமல் போகும் என்றால். முதலில் அந்த பாவதின் அதிபதி ( செவ்வாய்) இரண்டாவது அந்த பாவம் ( 5ஆம் வீடு) மூன்றாவது காரகன் ( குரு) இந்த மூன்றுமே கெட்டால் மட்டுமே அந்த விஷயம் அந்த ஜாதகருக்கு கிடைக்காது எப்போது.

எப்போது தாமதமாக கிடைக்கும்: இங்கே செவ்வாய் உடன் கேது இணைந்து உள்ளார் கேது என்றால் தாமதம் எதையும் தாமதபடுத்துவார் கேது. மேலும் செவ்வாய் 5 ல் வலுவாக தான் இணைந்து உள்ளார் . இதே செவ்வாய் உடன் ராகு இணைந்து இருந்தால் நிச்சயமாக தடை ஆகி இருக்கும் குழந்தை அமைப்பு.

மேலும் அடுத்து வரும் குரு தசா செவ்வாய் புக்தி யில் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை கிடைக்கும் 2026 ஜூன் பிறகு. அதேபோல் குலதெய்வம் வழிபாடும் தேவை.

நன்றி

இப்படிக்கு உங்கள்
ஓம் பிரகாஷ் (பாரம்பரிய ஜோதிடன்)

#jothidam #astrology #love #lovefailurequotes #starsaligning #futureinsight #astrologypredictions #divineguidance #astrologer #horoscope #zodiacsigns #Hereditaryastrologer #rasipalantamil #rasi #tamilastro #tamilhoroscope #omprakashastrology7 #sukran

1 week ago | [YT] | 15