மனித நாடி [ Manithanaadi ]

*இன்று ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு* *இருபுறமும்* *#சிங்கமுகம் கொண்ட சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு இடது மடியில் குழந்தையை வைத்து கொண்டு சந்தன காப்பு அலங்காரத்தில் #சந்தான_லட்சுமி திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் என் அன்னை #மேச்சேரி_ஶ்ரீபத்ரகாளி_அம்மன்* 🙏🔱❤️🕉️🕉️🕉️🔱🔱🔱

*வெள்ளிக்கிழமை*
*அடடா சாத்திய மெய்ப்பொருளே, ஆதி பரமசிவன் தேவி!*
*துட்ட தேவதை கண்டே பயந்தோட தானாகி நின்ற பராபரையே!*
*எட்டு கோணத்தில் ஏகாச்சரத்தில் எம தூதர் நசிந்தோட எழுந்த அம்மையே!*
*வட்டத்துள் நின்றாடி வருவாள் திரிபுரயீஸ்வரியே!*
*அதித மெய்ஞான சொரூபி, அருள் தரும் பரமசிவன் தேவி!*
*உதிக்கின்ற கதிரவன் ஒளி போல் உள்ளும் புறமும் நின்ற செல்வி!*
*சதுர்வேத சிகாமணியே மனோன்மணியே!*
*நீதியில்லாரைக் கொன்று உயிர் வாங்கி வருவாள் திரிபுரயீஸ்வரியே!*
*எங்கும் பிரகாசமாய் எழுந்த செல்வி, ஏவலை போக்கிடும் ஏகசக்தி!*
*தங்கும் நாத பிரம்மமே என் தாயே, வாலை மனோன்மணியே!*
*எங்கும் வேத பரம்பொருளே, பாக்கியமான பராபரையே!*
*திங்கள் இளம் பிறை சூடி வருவாள் திரிபுரயீஸ்வரியே!*
*அன்னம் சொர்ணம் பரவிக் கிடக்கும், ஆனந்த கயிலை நாயகியே!*
*தென்குமரி பகவதி தேவி, தெய்வீகமாய் வளரும் அம்மையே!*
*பொன்னிற மாது தன் நெஞ்சகமே நின்றாடிய பூரணியே!*
*முன்னின்ற ஜோதி சிதம்பரியாய் வருவாள் திரிபுரயீஸ்வரியே!*
*ஆயிரத்தெட்டு தன வட்டத்தின் மேல், அருளாகி நின்ற சிவசக்தி!*
*காயாபுரி கோட்டையுள் நின்ற கற்பூர தீப ஒளியாளே!*
*தூய பரிசுத்த பரிபூரணியே, துட்ட பிசாசு பயந்தோட என் முன்னே*
*மெய்ஞான தெய்வ சொரூபியாய் வருவாள் திரிபுரயீஸ்வரியே!*🔱🔱🔱💐💐💐💓💓💓

4 weeks ago | [YT] | 7